இந்திய பொருளாதாரமும் சரி, சர்வதேச பொருளாதாரமும் சரி, இரண்டும் மோசமாக இருக்கும் காரணத்தால் இந்தியா ரூபாயின் மதிப்பு அதிகளவில் பாதிக்கும் எனப் பல ஆய்வுகள் கூறும் நிலையில் தற்போது RaboBank அதிர்ச்சி அளிக்கும் ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையின் படி அடுத்த ஒரு வருடத்தில் அதாவது 2020ஆம் ஆண்டு முடிவதற்குள் ஆசியாவில் பல முன்னணி நாடுகளின் நாணய மதிப்பை விடவும் இந்தியா அதிக மதிப்புடையதாக இருக்கும் எனத் தெரிவிக்கவிக்கப்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாகத் தாய்லாந்து பாத் மற்றும் மலேசியாவின் ரிங்கட் ஆகியவை இதில் அடக்கம் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
2019ஆம் ஆண்டு இந்தியா அனைத்து விதமான பொருளாதார நெருக்கடியும் பார்த்துவிட்டது, இதைக் கண்டு பல வளரும் நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்திய தற்போது நாணய மதிப்பின் வீழ்ச்சியைப் பொருளாதார வளர்ச்சியில் கணக்கிடுவதாக இல்லை என இந்திய ரூபாய் மதிப்பின் வளர்ச்சி மற்றும் சரிவைக் கண்காணிக்கும் மிக முக்கியமான பொருளாதார வல்லுநர்களின் ஒருவரான Hugo Erken தெரிவித்துள்ளார்.
ஆசிய நாணயங்கள்
Hugo Erken-இன் கணிப்பின் படி அடுத்த 12 மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாகத் தான் குறையும், ஆனால் இந்தோனேசியாவின் ரூபாயா 7 சதவீதமும், தாய்லாந்து பாத் 11 சதவீதமும், மலேசியாவின் ரிங்கட் 9 சதவீதமும் சரியும் எனக் கணித்துள்ளார்.
ரூபாய் மதிப்பு
இந்தச் சரிவின் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு ஆசியாவின் முன்னணி பொருளாதார நாடாக இருக்கும் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா நாணயங்களுடன் ஒப்பிடும் போது இதன் மதிப்பு இணையாகவோ அல்லது அதிகமாக இருக்கும் எனவும் Hugo Erken தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான்
மேலும் மற்ற நாணய ஆய்வாளர்கள் கூறுகையில், அமெரிக்கா ஈரான் மத்தியிலான போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்கச் சீன பிரச்சனையால் இந்தியா அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2வது பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
கச்சா எண்ணெய்
இந்நிலையில் உலகிலேயே அதிகமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கும் நிலையில் ரூபாய் மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சியும் இதன் மூலம் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
குழப்பம்
2019ஆம் ஆண்டில் இந்திய கடன் மற்றும் பங்குச்சந்தையில் சுமார் 18 பில்லியன் டாலர் முதலீடு கிடைத்தும் ஆசியாவிலேயே மோசமான நாணயங்கள் பட்டியலில் இந்திய ரூபாய் 2வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 2020 நாணய கணிப்பில் இரு மாறுபட்ட கருத்து நிலவுகிறது முதலீட்டாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications