இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.2% தான்.. S&P குளோபல் தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்திய பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி காணுமோ என்று பயத்தின் மத்தியில் S&P குளோபல் 2020ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக குறைத்துள்ளது.

 

கொரோனா தொற்று காரணமாக உலக பொருளாதாரமே மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சியும் குறைக்கப்பட்டுள்ளது.

S&P குளோபல் 2020ம் ஆண்டின் வளர்ச்சியினை முன்பு 5.7% ஆக கணித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அதனை 5.2% ஆக குறைத்துள்ளது. இதேபோல் முன்னதாக மூடிஸ் மதிப்பீட்டு நிறுவனம் 2020ம் ஆண்டிற்கான வளர்ச்சியினை 5.3%-ல் இருந்து 5.1% ஆக குறைத்தது.

தேவை வீழ்ச்சியடையலாம்

தேவை வீழ்ச்சியடையலாம்

ஆசிய பசிபிக் அறிக்கையில் எஸ் அன்ட் பி வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வணிக நம்பிக்கையை இழப்பது, வேலையின்மை விகிதங்கள் உயரும்போதும் உள்ளிட்ட பலவற்றால் கடுமையான வீழ்ச்சி தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் பலவிதமான கட்டுப்பாடுகள் உள்நாட்டில் விதிகப்பட்டுள்ளதால் உள்நாட்டில் தேவை வீழ்ச்சியடையலாம் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து துறையும் வீழ்ச்சியடையலாம்

அனைத்து துறையும் வீழ்ச்சியடையலாம்

மேலும் இந்த பலமான கட்டுப்பாடுகளினால் கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ல பலவீனமான தேவையால், ஆசியாவின் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படலாம் என்றும் எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது.

சரிவுக்கு வழிவகுக்கும்
 

சரிவுக்கு வழிவகுக்கும்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையாக 2.8% மற்றும் 4.2% தேவை இந்திய பொருளாதாரத்தில் உள்ளதாக இந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சீனாவின் பங்கினை விட சற்று பெரியது என்றும், இது வளர்ந்து நாடுகளில் பெரியளவில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம்.

சீனாவிலும் வளர்ச்சி குறையும்

சீனாவிலும் வளர்ச்சி குறையும்

இதற்கு முக்கிய காரணம் பரவலாக பரவி வரும் இந்த கொரோனா தொற்று தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2020 ஆண்டில் இரண்டாவது காலாண்டிலும் நிச்சயம் ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் பிடிக்கப் போகிறது. இந்த நிலையில் சீனாவின் வளர்ச்சியினை 4.8%ல் இருந்து 2.9% ஆக குறைத்துள்ளது இந்த மதிப்பீட்டு நிறுவனம்.

செலவினங்களும் குறையும்

செலவினங்களும் குறையும்

மேலும் கொரோனாவில் வேலை இழந்த குடும்பங்கள் குறைவான நேரத்தினையே வேலை செய்த குடும்பங்கள் அல்லது வேலையினை இழந்த குடும்பங்கள் குறைவாகவே செலவிடுவார்கள். வங்கிகள் தங்கள் சொத்து மதிப்பினை நிர்வகிக்க முற்படுவார்கள். ஆக இந்த நெருக்கடி காலம் நீண்ட காலம் நீடிக்கும். இதனால் நிச்சயம் தேவை என்பது பலவீனமாக இருக்கும் என்றும் எஸ் அன்ட் பி தெரிவித்துள்ளது.

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

உலகளவில் கிட்டதட்ட 2,00,000 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில் 7,948 பேர் இதனால் இறந்துள்ளனர். சொல்லப்போனால் இந்தியாவில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள அரசுகளும், மத்திய வங்கிகளும் தொடர்ந்து பொருளாதாராத்தினை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதன் தாக்கம் குளோபல் சந்தைகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. முதலீட்டாளர்களும் பயத்தின் காரணமாக முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

S&P revised India’s growth forecast to 5.2% from 5.7%

Standard and Poor's slashed 2020 growth projection for India to 5.2% from 5.7% as it fears that the Asia Pacific region may tip into recession as a result of the coronavirus pandemic.
Story first published: Wednesday, March 18, 2020, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X