ஜியோ காட்டில் பெய்யும் பணமழை.. சவுதியை சேர்ந்த PIF ரூ.11,367 கோடி முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொண்டே முகேஷ் அம்பானி பலமான முதலீடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 

கொரோனாவால் பல நிறுவனங்கள் மூலையில் முடங்கி போய் கிடந்தாலும், மறும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் மட்டும் பண மழையாக பொழிந்து வருகிறது.

ஜியோ காட்டில் பெய்யும் பணமழை.. சவுதியை சேர்ந்த PIF ரூ.11,367 கோடி முதலீடு..!

இதற்கு முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டது பேஸ்புக் தொடங்கி, சவுதி அரேபியாவின் முதலீட்டு நிறுவனம் வரை அடுத்தடுத்த முதலீடுகளை ஜியோவில் செய்து வருகின்றன.

இந்த நிலையில் இது வரை பேச்சு வார்த்தையில் இருந்து வந்த சவுதி அரேபியாவின் வெல்த் ஃபண்ட் பிஐஎஃப் (Saudi Arabia's wealth fund PIF) நிறுவனம், தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இந்த நிறுவனம் ஜியோ நிறுவனத்தின் 2.32% பங்கினை 11,367 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனம் திரட்டி வரும் இந்த முதலீடுகள் மூலம், ஜியோ இன்போகாம், தொலைத் தொடர்பு துறையை, ஸ்ட்ரீமிங்க், கேமிங் மற்றும் இணையவழி அம்சங்களை அதன் பயன்பாட்டில் இணைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பில்லியனரான முகேஷ் அம்பானி, சமீப காலமாக தனது வர்த்தகங்களை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதை காண முடிகிறது. இந்த முதலீடுகள் மூலம் இன்னும் ஜியோவினை உலகளாவிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மாற்ற உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யார் யார் முதலீடு

இதோடு ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் நிறுவனம் மற்றும் சில்வர் லேக் விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர், முபதாலா, சில்வர் லேக், ஏடிஐஏ, டிபிஜி, L catterton, தற்போது பிஐஎஃப் நிறுவனமும் முதலீடு செய்துள்ளன.

எவ்வளவு முதலீடு

கடந்த ஏப்ரல் 22 அன்று 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்த Facebook நிறுவனம், அதன் மூலம் 9.99% பங்குகளை வாங்கியது.

இதே மே 4 அன்று ரூ.5,656 கோடி முதலீடு செய்த Silver Lake நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது.

 

மே 8 அன்று ரூ.11,367 கோடி முதலீடு செய்து, விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது.
மே 17 அன்று ரூ.6,598 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34% பங்குகளை வாங்கியது.
மே 22 அன்று ரூ.11,367 கோடி முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.
ஜூன் 5ல் ரூ.9,093 கோடி முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85% பங்குகளை வாங்கியது..
ஜூன் 5ல் அன்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ரூ.4,547 கோடி முதலீடு செய்து கூடுதலாக 0.93% பங்குகளை வாங்கியது.
ஜுன் 8ல் அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ ரூ. 5,863.50 கோடி முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது.
ஜூன் 13: டிபிஜி நிறுவனம் ரூ.4,546.80 கோடி முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது.
ஜூன் 13 அன்று L catterton நிறுவனம் 10வது முறையாக 0.39 சதவீத பங்குகள் மூலம் 1894.50 கோடி ரூபாய் முதலீடினை செய்துள்ளது.
ஜுன் 18 தற்போது கடைசியாக சவுதியின் பிஐஎஃப் 2.32% பங்கினை 11,367 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia’s PIF to picks up jio stake for Rs.11,367 crore

Saudi Arabia's wealth fund PIF picks up 2.3% stake in reliance jio for Rs.11,367 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X