கொரோனா அலையில் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களுக்கு புதிய கடன் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ள MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கான நிதி நிறுவனமான SIDBI வங்கி புதிய நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், முதலீடு செய்யப் போதிய பணம் இல்லாத காரணத்தால் நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலையில் சமாளிக்கவும், நிதியுதவி இல்லாமல் இருக்கும் MSME நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது SIDBI வங்கி.

SIDBI வங்கி கடன் திட்டம்

SIDBI வங்கி கடன் திட்டம்

அவசரமாக நிதி தேவையில் உள்ள MSME நிறுவனங்களுக்குக் கடன் வாயிலாக நிதியுதவி அளிக்க SIDBI வங்கி புதிய Direct Finance Window (LIQUID) 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்துள்ள நேரத்தில் அறிவித்துள்ள இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

SIDBI குறுகிய காலக் கடன்

SIDBI குறுகிய காலக் கடன்

இத்திட்டம் மூலம் ஏற்கனவே SIDBI வங்கியில் வாடிக்கையாளர்களாக இருப்போருக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் குறுகிய காலக் கடன் அதாவது டர்ம் லோன் அளிக்கப்பட உள்ளது.

எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள்

எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள்

ஏற்கனவே மத்திய அரசு பல கடன் திட்டங்களை எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு அளித்துள்ள நிலையில் இக்குறுகிய காலக் கடன் வர்த்தகச் சந்தைக்குத் திரும்ப முடியாமல் இருக்கும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய காலக் கடன்

குறுகிய காலக் கடன்

SIDBI வங்கி புதிதாக அறிவித்துள்ள லிக்விட் 2.0 திட்டத்தின் கீழ் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டரை பெற்று வர்த்தகம் செய்யவும், மூலப்பொருட்களை வாங்கவும், இயந்திரம் மற்றும் உபகரணங்களை வாங்கவும், நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தவும் இந்தக் குறுகிய காலக் கடன் பயன்படுத்த முடியும் என இவ்வங்கி தெரிவித்துள்ளது.

 

20 சதவீத தொகை

20 சதவீத தொகை

இக்குறுகிய காலக் கடனை பெறும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களின் கடந்த 12 மாத அதிகப்படியான நிலுவைத் தொகையில் 20 சதவீதம் அல்லது அதிகப்படியாக 1.5 கோடி ரூபாய் அளவிலான தொகையை இத்திட்டத்தின் கீழ் கடனாகப் பெற முடியும்.

லிக்விட் 2.0 திட்டம்

லிக்விட் 2.0 திட்டம்

லிக்விட் 2.0 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

1. நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களிடம் இருந்து ஜீரோ முதலீடு
2. மானியத்துடன் வட்டி விகிதம்
3. குறைந்தபட்ச செயலாக்கக் கட்டணம்
4. முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டணம் எதுவும் இல்லை
5. எளிமையான செயலாக்கம்
6. விரைவான ஒப்புதல் மற்றும் பணப் பட்டுவாடா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SIDBI Bank's New Term Loan scheme for MSME affected by Covid19

SIDBI Bank's New Term Loan scheme for MSME affected by Covid19
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X