BRPL, BYPL நிறுவனங்களின் 51% பங்குகளை வாங்க திட்டமிடும் NTPC.. நல்ல விஷயம் தானே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான் மிகப்பெரிய நிறுவனங்களில் என்டிபிசியும் ஒன்று. இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பை பெற்ற மிகப்பெரிய நிறுவனமாகும்.

இந்த பொதுத்துறை நிறுவனம் டெல்லியில் உள்ள அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (ADAG) இரண்டு பயன்பாடுகளில் 51 சதவீதங்களை வாங்குவதற்கான ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

BRPL, BYPL நிறுவனங்களின் 51% பங்குகளை வாங்க திட்டமிடும் NTPC.. நல்ல விஷயம் தானே..!

இதன் மூலம் மின்சார விநியோக வணிகத்தில் ஈடுபட முடியும் என்பதால் என்டிபிசி (NTPC) இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ADAG சொந்தமாக இரண்டு டிஸ்கோம்கள் உள்ளன. ஒன்று BSES Rajdhani Power Ltd (BRPL), மற்றொன்று BSES Yamuna Power Ltd (BYPL) ஆகும். நாட்டில் முதன்மையான மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி இதனை வாங்கும்போது மின் விநியோகத்திலும் ஈடுபட முடியும் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து NTPC, டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மே 26ம் தேதி எழுதிய கடித்தத்தில், மின்சார விநியோக துறையில் நுழைவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், இதற்காக BRPL மற்றும் BYPLல்லின் பங்குகளை வாங்குவதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையின் படி, BRPL மற்றும் BYPLல் உள்ள 51 சதவீத பங்குகளை ADAG விலக்க விரும்புவதாக நாங்கள் அறிந்து கொண்டோம். ஆக இது எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று என்டிபிசி தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக விற்பனைக்கு வரும், BRPL மற்றும் BYPLன் 51 சதவீத பங்குகளை வாங்க என்டிபிசி ஆராய ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விற்பனையானது ஒரு வெளிப்படையான செயல்முறையின் மூலம் செய்யப்படுகிறது.

இவ்வாறு என்டிபிசி நிறுவனம் கூறுவது போல, மேற்கண்ட இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம், இதுவரை மின்சார உற்பத்தியில் மட்டுமே முதலிடமாக இருந்து வந்த நிறுவனம், பிறகு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை விநியோகப்பதிலும் முன்னிலை வகிக்கலாம். ஆக இது இந்த நிறுவனத்திற்கு பயனுள்ள ஒரு வாய்ப்பு தான். இதன் மூலம் இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்னும் மேம்படும் என்பதோடு, இதன் சேவையினையும் இன்னும் விரிவுபடுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State owned NTPC keen to buy ADAG’s power distribution units

Power giant NTPC decided to foray in electricity distribution business by evincing interest to buy 51% in ADAG two utilities in Delhi.
Story first published: Thursday, May 28, 2020, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X