பாஜக-க்கு இப்படி ஒரு நெருக்கடியா? தலை விரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வருடங்களாகவே வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகள், இந்திய மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறத் தொடங்கி இருக்கின்றன.

 

கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவிகிதம் தொட்டதாகச் செய்திகள் வெளியானது. அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை.

Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு தொடர்ந்து, இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

45 வருட உச்சம்

45 வருட உச்சம்

இது போக, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு, வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதன் பின்னும் மத்திய அரசு தன்னால் முடிந்த வரை வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை நல்ல பலன்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.

மாநில வாரியாக

மாநில வாரியாக

இந்த சி எம் இ ஐ அமைப்பு இந்தியாவின் 28 மாநிலங்களுக்கான வேலை இல்லா திண்டாட்ட விவரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆச்சர்யமாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம் வேலை இல்லா திண்டாட்டம் நிலவிக் கொண்டு இருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன.

பாஜக ஆட்சி
 

பாஜக ஆட்சி

பாரதிய ஜனதா கட்சி அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலம் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், திரிபுரா, உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பீஹார், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தமிழகம் போன்ற மாநிலங்களில் பாஜகவின் கூட்டணி ஆட்சி செய்து இருக்கிறது.

வேலை இல்லா திண்டாட்டத்தில் டாப்

வேலை இல்லா திண்டாட்டத்தில் டாப்

இந்தியாவின் 28 மாநிலங்களில், அதிகம் வேலை வாய்ப்பு இல்லாத 10 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஐந்து மாநிலங்கள் இடம் பிடித்து இருக்கின்றன. முதல் இடத்தில், திரிபுரா, பிப்ரவரி மாதத்துக்கான வேலை இல்லா திண்டாட்டம் 28.4 சதவிகிதமாக இருக்கிறது. பாஜகவின் Biplab Kumar Deb முதல்வராக ஆட்சி செய்யும் மாநிலம் இது.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

ஹரியானா மாநிலத்தை, பாரதிய ஜனதா கட்சியின் மனோகர் லால் கத்தர் முதல்வராக இருந்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். ஹரியானாவில் வேலை இல்லா திண்டாட்டம் 25.8 சதவிகிதமாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு மாநிலங்களுக்குப் பிறகு தான், காஷ்மீரே வருகிறது. 22.2 % வேலை இல்லா திண்டாட்டத்துடன் 3-வது இடத்தில் ஜம்மு காஷ்மீர் இருக்கிறது.

4-வது இடம்

4-வது இடம்

நான்காவது இடத்தில் ஹிமாச்சலப் பிரதேசம் இருக்கிறது. இந்த மாநிலத்தை பாரதிய ஜனதா கட்சியின் ஜெய்ராம் தாகூர் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்த மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 2020-க்கான வேலை இல்லா திண்டாட்டம் 16.8 சதவிகிதமாக இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 15.10 % வேலை இல்லா திண்டாட்டம் இருக்கிறது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

ஆறாவது இடத்தில் ஆம் ஆத்மி ஆளும் டெல்லி 14.8 சதவிகித வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது.

ஏழாவது இடத்தில், 11.9 சதவிகித வேலை இல்லா திண்டாட்டத்துடன் ஜார்கண்ட் இருக்கிறது.

எட்டாவது இடத்தில் 10.9 % வேலை இல்லா திண்டாட்டத்துடன் பஞ்சாப் இருக்கிறது.

9-வது இடத்தில்

9-வது இடத்தில்

இதற்கு அடுத்த ஒன்பதாவது இடத்தில், நித்தீஷ் குமார் ஆளும் பீகார் இடம் பிடித்து இருக்கிறது. பீகார் அரசில் பாஜகவும் ஆதரவு கொடுத்து இருப்பதால் இதையும் பாஜக ஆளும் மாநிலமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். இங்கு பிப்ரவரி 2020-க்கான வேலை இல்லா திண்டாட்டம் 10.3 சதவிகிதமாக இருக்கிறது.

10-வது இடத்தில்

10-வது இடத்தில்

யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப் பிரதேசம் தான், இந்தியாவிலேயே அதிக வேலை இல்லா திண்டாட்டம் இருக்கக் கூடிய மாநிலங்கள் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் வேலை இல்லா திண்டாட்டம், கடந்த பிப்ரவரி 2020-ல் 9 சதவிகிதம் இருந்ததாகச் சொல்கிறது சி எம் ஐ இ தரவுகள்.

என்ன செய்வார்கள்

என்ன செய்வார்கள்

ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என தன் தேர்தல் பிரச்சாரங்களில் சொன்னது பாஜக. ஆனால் எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில், பாஜக ஆளும் மாநிலங்கள் தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் இருக்கும் மாநிலங்கள் பட்டியலின் டாப் 10-ல் அதிகம் இடம் பிடித்து இருக்கின்றன. இந்த பிரச்சனைகளை பாஜக எப்படி சமாளிக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

state wise top 10 Unemployment rate list 5 BJP ruling states are there

CMIE released state wise unemployment data for February 2020. In state wise top 10 Unemployment rate list 5 BJP ruling states are there
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X