கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை எதிர்காலத்தினை கணிப்பது கடினம் என பணி நீக்கம் குறித்த கேள்விக்கு சூசகமான பதிலை அளித்துள்ளார்.
மற்றொரு சமீபத்திய அறிக்கையில் குறைந்த செயல் திறன் கொண்ட ஊழியர்களை கூகுள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் பணி நீக்கம் செய்யலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சையின் கருத்து
எனினும் பணியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய சுந்தர் பிச்சை, " better weather the storm" என கூறியுள்ளார். பணி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஊழியருக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, எதிர்காலத்தினை கணிப்பது மிகவும் கடினமானது. அது நேர்மறையாக இருக்கும் என எதிர்பார்க்க முடியவில்லை. நாங்கள் கடினமான முயற்சி செய்கிறோம்.
சிறப்பாக செய்வோம்
கடந்த சில மாதங்களாக நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நாங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்கிறோம். எங்களால் முடிந்த வரையில் சமாளிப்போம். சவால்களை சமாளிக்கும் அளவுக்கு முயற்சி செய்துள்ளோம். எனினும் என்ன வரப்போகிறது என தெரியவில்லை. எனினும் அது அதனை பொருட்படுத்தாமல் அதில் கவனம் செலுத்தி, முடிந்த வரையில் சிறப்பாக செய்வோம்.
பணி நீக்க திட்டம்
கடந்த நவம்பர் மாதம் வெளியான அறிக்கையில் கூகுள் உயர் அதிகாரிகள் மத்தியில் 6% அல்லது 10,000 ஊழியர்களை அடையாளம் காண கூறியதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக இந்த செயலில் குறைந்த செயல் திறன் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது.
கணக்கிடுங்கள்
ஆக இவ்வாறு பட்டியலிடப்பட்ட ஊழியர்கள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் 2% ஊழியர்களை அடையாளம் காணுமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
ஊழியர்கள் அச்சம்
தொடர்ந்து உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்கள் பெரியளவில் பணி நீக்கம்ம் செய்துள்ளன. இந்த போக்கு இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற அச்சமான நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கலாமோ என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
கவனமாக செயல்படுங்கள்
முன்னதாக கூகுள் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி தரப்பில், பணி நீக்கம் குறித்து தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை. எனினும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும். பொருளாதாரம் எப்படி மாறும் என்பது தெளிவாக தெரியவில்லை என கூறியது நினைவுகூறத்தக்கது.
ஊழியர்கள் என்ன செய்யலாம்?
ஊழியர்களின் அச்சத்தினை அதிகரிக்கும் விதமாக கடந்த சில காலாண்டுகளாகவே, கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டது. மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. ஆக இந்த போக்கானது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது. ஆக இதுபோன்ற சவாலான காலகட்டத்தில் ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, கூடுதலாக கவனம் செலுத்துவதுடன், தங்களது திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது அவர்களை கவசமாக நின்று பாதுகாக்கும் எனலாம்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications