குத்தாட்டம் போடும் அனில் அம்பானி.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்திற்கு 104 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி உத்தரவாதத்தை திருப்பித் தருமாறு, டெலிகாம் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த உத்தரவாத தொகையானது ஸ்பெக்ட்ரமிற்கான வங்கி உத்தரவாதத்தின் இருப்பு ஆகும்.

ஆக இது மையத்தால் ஆர்காம் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மையத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்த மனுவை நிராகரித்துள்ளது.

செலுத்தப்பட வேண்டிய தொகை

செலுத்தப்பட வேண்டிய தொகை

TDSAT டிசம்பர் 21,2018 அன்று 774 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களுக்கு எதிராக 908 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதத்தோடு சேர்த்து வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 774 கோடி ரூபாய் போக, 104 கோடி ரூபாய் திரும்ப பெறுமாறு மையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பில்லியனரிலிருந்து மில்லியனராக சரிந்த அனில் அம்பானி

பில்லியனரிலிருந்து மில்லியனராக சரிந்த அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, 2006ம் ஆண்டில் 14.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். சொல்லப் போனால் ஒரு காலத்தில் முகேஷ் அம்பானியை விட அனில் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகமாகவே இருந்தது. எனினும் சரியான திட்டமிடல் தொலை நோக்கு பார்வை இன்மையால் அனில் அம்பானியின் அடுத்தடுத்த வர்த்தகங்கள் வீழ்ச்சி கண்டன. இதனால் பில்லியனரில் இருந்து மில்லியனராக கீழ் தள்ளப்பட்டார்.

தொடர் நஷ்டம்
 

தொடர் நஷ்டம்

அதிலும் அனில் அம்பானியின் சொத்துக்கு சொத்தாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தொடர் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்தது. இந்த நிலையில் ஆர்காம் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமல் சொத்துகளை விற்க முற்பட்டபோது, தனது சொத்துக்களை கூட விற்க முடியாமல் நிலைகுலைந்து போனார் அனில் அம்பானி.

ஏலம்

ஏலம்

இப்படி ஒரு நிலையில் தான் ஆர்காம் சொத்துகள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நல்ல பலன் அடையலாம் என்றும் கூறப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில் அண்ணன் முகேஷ் அம்பானியும் கூட இந்த சொத்துகளை வாங்க தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆக கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இவருக்கு பெரிய லட்டு கிடைத்தாற்போல், இப்படி ஒரு தீர்ப்பை உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Supreme Court ordered Telecom dept to refund Rs.104 crore bank guarantee to Anil Ambani

Supreme Court ordered Telecom dept to refund Rs.104 crore bank guarantees to Anil Ambani, and this amount is the balance of the bank guarantee for spectrum, to be paid to RCom by the Centre.
Story first published: Tuesday, January 7, 2020, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X