பாகிஸ்தானுக்கு செக் வைத்த தாலிபான்கள்.. ஷெபாஸ் ஷெரீப் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொருளாதாரத்தில் இரண்டு நாடுகளும் மோசமான நிலையில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இப்படி இருக்கையில் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்யும் தாலிபான்கள் இனி தன் நாட்டில் பாகிஸ்தான் ரூபாயைப் பயன்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.இது பாகிஸ்தானுக்குப் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.

இதுமட்டும் அல்லாமல் இந்தத் தடை அக்டோபர் 1 முதல் அமலாக்கம் செய்யப்பட்டதாக ஆப்கான் நாட்டின் காமா பிர்ஸ் தெரிவித்துள்ளது.

மோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. 20 முறை காப்பாற்றி IMF மீண்டும் உதவுமா..?மோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. 20 முறை காப்பாற்றி IMF மீண்டும் உதவுமா..?

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

தாலிபான் புலனாய்வு அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளை வைத்துப் பணம் பரிமாற்றம் செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

 பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய்

இத்தகைய அறிவிப்புக்கு முக்கியக் காரணம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திப் பணச் சலவை அதிகளவில் செய்யப்படுவதால் இந்த முடிவை எடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடை மூலம் அனைத்து விதமான நிதியியல் பரிமாற்றத்தில் இருந்தும் பாகிஸ்தான் ரூபாய் தடை செய்யப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

இதேபோல் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளை மாற்ற Money Exchange டீலர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது, அதாவது ஒரு நாளுக்கு 500000 பாகிஸ்தான் ரூபாய்க்கு மேல் மாற்றக்கூடாது அப்படி மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் உடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்கள்

ஆப்கானிஸ்தான் மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களும், வர்த்தகர்களுக்கும் தினமும் வாங்கும் காய்கறி, பழங்கள் முதல் ஏற்றுமதி இறக்குமதி வரையில் அனைத்திற்கும் பாகிஸ்தான் ரூபாய் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றிய நாளில் இருந்து பாகிஸ்தான் உறவில் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிலாகத் தற்போது பாகிஸ்தான் ரூபாய் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் ரூபாய் பாகிஸ்தான் நாட்டிற்குள் வரும் இது மதிப்பைக் குறைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taliban bans Pakistan currency in all forms and sectors

taliban intelligence agency announced bans Pakistan currency in Afghanistan all forms and sectors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X