சென்னை பிரம்மாண்ட திட்டம் நிறைவு.. டாடா ரியால்டி-யின் சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கம் குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டுள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அலுவலகம் திரும்ப தொடங்கி விட்டனர்.

 

ஏற்கனவே வேலையிழந்தவர்களும் வேலையினை புதியதாக பெற்றுள்ளனர். தேவை அதிகம் உள்ள நிலையில் அதிகளவிலான பிரெஷ்ஷர்களும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த போக்கு இனியும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் டாடா ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் தத், அலுவலகங்களுக்கான தேவையானது உச்சம் தொடத் தொடங்கியுள்ளது.

ரியால்டி துறையை சேர்ந்த 9 பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..!

முக்கிய எதிர்பார்ப்பு

முக்கிய எதிர்பார்ப்பு

நடப்பு ஆண்டில் 7 முக்கிய நகரங்களில் 30 மில்லியன் சதுர அடியானது குத்தகைக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 26 மில்லியன் சதுர அடியாக இருந்தது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேவை அதிகரித்துள்ளது. இதனால் அலுவலகங்களுக்கான தேவையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக வளர்ச்சி

வணிக வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றில் சிக்கி சீரழிந்து வந்த நிறுவனங்கள், தற்போது மீளத் தொடங்கியுள்ளன. வணிகங்கள் மேம்படத் தொடங்கியுள்ளன. இதனால் ஏழு முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவையானது அதிகரிக்கும். இது கடந்த ஆண்டை விடவும் அதிகரிக்கும். இது ஆரோக்கியமான அறிகுறிகள்.

பணியமர்த்தல் அதிகரிப்பு
 

பணியமர்த்தல் அதிகரிப்பு

நாட்டில் பெரியளவில் பணியமர்த்தல் ஏற்கனவே இருந்து வருகின்றது. பற்பல துறைகளிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரிக்கலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு எந்த பிரச்சனையும் இல்லை. சிறப்பான வளர்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கற்றுக் கொடுத்த பாடம்

கொரோனா கற்றுக் கொடுத்த பாடம்

அதேசமயம் ஏற்கனவே கொரோனா கற்றுக் கொடுத்துள்ள பாடம் சமூக இடைவெளி போன்ற சில அம்சங்கள். ஆக இதுபோன்ற சிறப்பம்சங்களுடன் அலுவலகம் இருக்க நிறுவனங்கள் விரும்புகின்றனர். ஊழியர்கள் ஒருவருடன் ஒருவர் தொடாமல் இருக்க வேண்டும். ஊழியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஆக அதற்கேற்ப அலுவலகங்களை நாங்கள் வடிவமைப்போம் என்றும் தத் கூறியுள்ளார்.

 கனடா  நிறுவனம் முதலீடு

கனடா நிறுவனம் முதலீடு

டாடா ரியால்டியின் அலுவலக பூங்காக்கள் இன்டெல்லியன் என்ற பெயரில் இருக்கும். இவை ஸ்மார்ட் ஆகவும், நிறுவனங்கள் விரும்பும் விதமாகவும் இருக்கும் என தத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 12 அன்று கனடா ஓய்வூதிய முதலீட்டு திட்ட வாரியம், சென்னை மற்றும் குருகிராமில் உள்ள இரண்டு பிரீமிய அலுவலக திட்டங்களில் 2600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும் அறிவித்தது. இந்த 2 திட்டங்களிலுமே டாடா ரியால்டி 51% பங்கினை வைத்திருக்கும் என்றும், 49% பங்கினை கனடா நிறுவனம் வைத்திருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

 

எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்

இந்த இரு நிறுவனங்களும் எதிர்கால வளர்ச்சிக்காக தொடர்ந்து கூடுதலாக 2000 கோடி ரூபாயினை நிலம் வாங்க முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் எங்களின் ரியல் எஸ்டேட் வணிகத்தினை மேம்படுத்த விரும்புகிறோம். அடுத்த 5 - 7 ஆண்டுகளில் 45 மில்லியன் சதுர அடி அளவிலான பரப்பளவினை உருவாக்குவதே எங்களின் இலக்கு என்றும் தத் கூறியுள்ளார்.

சென்னை & குருகிராம் திட்டம்

சென்னை & குருகிராம் திட்டம்

நிறுவனம் ஏற்கனவே 7.5 மில்லியன் சதுர அடியில் ஒரு போர்ட்போலியோவினை உருவாக்கியுள்ளது. இன்னும் 14 மில்லியன் சதுர அடியிலான திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டாண்மை திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்களிலுமே கனடா நிறுவனம் 49% பங்குகளை வைத்துள்ளது. இதில் சென்னையில் உள்ள இன்டெல்லியன் பார்க் 4.6 மில்லியன் சதுர அடியிலும், குருகிராமில் உள்ள 1.8 மில்லியன் சதுர அடியிலும் உள்ளது. இதில் சென்னை திட்டம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

 

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா ரியால்டி நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமாகும். இது 15 நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களை கொண்டுள்ளது.

டாடா இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாகும். 7 துறைகளில் பங்காற்றி வரும் இந்த குழுமம், 107 செயல்பாட்டு நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் 100 பில்லியன் டாலருக்கு மேல். இந்த குழுமத்தில் 7.5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Realty's Chennai mega project completed: office space demand may increase in 2022

Tata Realty's Chennai mega project completed: office space demand may increase in 2022/சென்னை பிரம்மாண்ட திட்டம் நிறைவு.. டாடா ரியால்டி-யின் சூப்பர் அறிவிப்பு..!
Story first published: Sunday, April 17, 2022, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X