நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல புதிய மாற்றங்களையும், வர்த்தகப் பிரிவுகளையும் உருவாக்கி வரும் நிலையில் தற்போதும் ஐரோப்பியச் சந்தையில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தப் புதிதாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
Prudential Financial Inc முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனம், டிசிஎஸ் தனது பெருமளவிலான வர்த்தகம் மற்றும் வருவாய் BFSI பிரிவில் இருந்து பெறும் நிலையில் இத்துறை சேவை விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த நிறுவன கைப்பற்றல் பெரிய அளவில் உதவும்.
2020ஆம் ஆண்டில் வர்த்தக விரிவாக்கத்திற்காக டிசிஎஸ் நிர்வாகம் கைப்பற்றும் 2வது நிறுவனம் என்பதால் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும், சக ஐடி நிறுவனங்கள் மத்தியிலும் டிசிஎஸ் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த விலையில் தங்கம்.. தீபாவளிக்கு நல்ல சான்ஸ் தான்.. எப்படி வாங்கலாம்?

1,500 ஊழியர்கள்
டிசிஎஸ் மற்றும் Pramerica Systems நிறுவனத்தின் மத்தியில் நடைபெற்றுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 1,500 ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மாற உள்ளனர். இதேவேளையில் Pramerica Systems நிறுவனத்தின் தாய் நிறுவனமான Prudential Financial Inc நிறுவனத்திற்கு டிசிஎஸ் தனிப்பட்ட முறையில் பல வருட ஒப்பந்தம் அடிப்படையில் ஐடி சேவை அளிக்க உள்ளது.

நிதியியல் ஐடி சேவை
Prudential Financial Inc முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனம், டிசிஎஸ் தனது பெருமளவிலான வர்த்தகம் மற்றும் வருவாய் BFSI பிரிவில் இருந்து பெரும் நிலையில் இத்துறை சேவை விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த நிறுவன கைப்பற்றல் பெரிய அளவில் உதவும்.

ஐரோப்பிய சந்தை
Pramerica Systems நிறுவனத்தில் இருந்து சுமார் 1,500 ஊழியர்களை டிசிஎஸ் கைப்பற்றிய நிலையில் இனி வரும் காலத்தில் அயர்லாந்து, பிரிட்டன், ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது வர்த்தகம் இன்னும் எளிதாக விரிவாக்கம் செய்ய முடியும்.
குறிப்பாக ஐரோப்பிய சந்தையில் டிசிஎஸ் ஆதிக்கம் குறைவாக இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் மூலம் பெரிய அளவிலான லாபத்தை டிசிஎஸ் அடையும்.

போஸ்ட்பேக் சிஸ்டம்ஸ்
அதேபோல் டிசிஎஸ் சில மாதங்களுக்கு முன்பு டாச்சீஸ் வங்கியின் நிதியியல் சேவை நிறுவனமான போஸ்ட்பேக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு நிறுவனங்கள் கைப்பற்றல் மூலம் டிசிஎஸ் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய சந்தையில் சிறப்பான வர்த்தகத்தை அடைய உள்ளது.