ஐரோப்பாவில் பட்டைய கிளப்பும் டிசிஎஸ்.. இது வேற லெவல் சம்பவம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தொடர்ந்து பதினொன்றாவது ஆண்டாக டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட் மூலம் ஐரோப்பாவில் Top Employer - களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

இதோடு டிசிஎஸ் பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் Top Employer பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

பொதுவாகவே இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்கள் அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பாவில் அதிக வர்த்தகத்தை வைத்துக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் டிசிஎஸ்- க்கு கிடைத்துள்ள அங்கிகாரம் அந்நாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரிய அளவில் உதவும்.

ஆசியாவிலேயே பெங்களூரு தான் டாப்.. உலக நாடுகளே வியந்து பார்க்கும் டெக் சிட்டி.. ஏன்.. எப்படி? ஆசியாவிலேயே பெங்களூரு தான் டாப்.. உலக நாடுகளே வியந்து பார்க்கும் டெக் சிட்டி.. ஏன்.. எப்படி?

டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட்

டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட்

ஒவ்வொரு ஆண்டும், டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட் அமைப்பு ஐரோப்பாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் சிறந்த HR நடைமுறைகள் மூலம் அவர்களது பங்கேற்பு மற்றும் முடிவுகளின் அடிப்படையில் சான்றளிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்த HR நடைமுறைகள் கடைப்பிடிக்கும் நிறுவனங்களைப் பட்டியலிட்டு உள்ளது.

TCS ஐரோப்பா

TCS ஐரோப்பா

TCS ஐரோப்பா மக்கள் உத்தி, பணிச்சூழல், திறமையான ஊழியர்களைப் பணியில் சேர்ப்பது, கற்றல், பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம், நல்வாழ்வு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கிய HR களங்களில் மதிப்பிடப்பட்டது.

பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து
 

பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து

டிசிஎஸ் ஒட்டுமொத்த ஐரோப்பாவில் Top Employer - களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் தனிப்பட்ட முறையில் Top Employer-ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.

STEM பிரிவு கல்வி

STEM பிரிவு கல்வி

இது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் ஐரோப்பாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு STEM பிரிவு கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் அடுத்த தலைமுறைக்காக டெக் ஊழியர்களை டிசிஎஸ் உருவாக்கி வருகிறது.

15000 ஊழியர்கள்

15000 ஊழியர்கள்

டிசிஎஸ் ஐரோப்பிய வர்த்தகத்தில் சுமார் 15000 ஊழியர்களைக் கொண்டு உள்ளது, இதில் 4300 ஊழியர்கள் சுமார் 10 வருடத்திற்கும் அதிகமாகப் பணியாற்றி வருகிறது. மேலும் டிசிஎஸ் ஐரோப்பாவில் சுமார் 121 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் 35 சதவீதம் பேர் பெண் ஊழியர்களாக உள்ளனர்.

ஐரோப்பிய டெக் ஊழியர்கள்

ஐரோப்பிய டெக் ஊழியர்கள்

டிசிஎஸ் ஐரோப்பா நடப்பு நிதியாண்டில் 217 பேருக்கு இன்டர்ன்ஷிப் அளித்துள்ளது, Grow@TCS திட்டத்தின் மூலம் சுமார் 88 பேருக்கு முழு நேர வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் ஐரோப்பிய டெக் ஊழியர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS named top employers in Europe; Took top position in Belgium, Denmark, Netherlands

TCS named top employers in Europe; Took top position in Belgium, Denmark, Netherlands
Story first published: Thursday, January 19, 2023, 12:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X