18 வயதில் உருவாக்கிய குட்டி நிறுவனம்.. இன்று பல ஆயிரம் கோடி மதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஹோட்டல் சேவையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட OYO நிறுவனத்தை உருவாக்கும் போதும் வெறும் 18 வயது தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? பாக்கெட் மனி கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 10 பில்லியன் டாலர் அளவிற்குப் பதிப்பிடப்படுகிறது.

 

இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பவர் யார்..?

சுமார் 7 வருட சரிவில் இந்திய ஜிடிபி! கொரோனா வேறு பாக்கி இருக்காம்!

சொந்த கால்

சொந்த கால்

ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ள குளோபல் ரிச் லிஸ்ட் அறிக்கையில் உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 799 பணக்காரர்கள் 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் சொந்தக் காலில் நின்று (Self made Billionarie) மிகவும் குறைந்த வயதில் பில்லியனர் ஆனவர்களின் பட்டியலில் 26 வயதான OYO Rooms நிறுவனத்தின் தலைவர் ரித்தீஷ் அகர்வால் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் காஸ்மெடிக் குயின் என அழைக்கப்படும் அழகு தேவதை கைலி ஜென்னர் உள்ளார்.

கல்லூரி படிப்பு

கல்லூரி படிப்பு

நக்சல் பிரச்சனை அதிகம் இருக்கும் ஓடிசா மாநிலத்தின் Bissamcuttack என்னும் சின்னக் கிராமத்தில் இருந்து வந்த ரித்தீஷ் அகர்வால் கல்லூரி படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு வர்த்தகம் செய்யக் களத்தில் இறங்கி இன்று 10 பில்லியன் டாலக் மதிப்பிலா வர்த்தகத்தை உருவாக்கியுள்ளார்.

ஏர்பிஎன்பி
 

ஏர்பிஎன்பி

வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஏர்பிஎன்பி போன்று இந்தியாவில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு தனது 18 வயதில் Oravel Stays என்ற குட்டி நிறுவனத்தை உருவாக்கினார். இதன் பின்பு பல்வேறு போராட்டங்களுக்குப் பின் 30 லட்சம் முதலீட்டு உடன் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து இன்று பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார்.

சரி ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ள குளோபல் ரிச் லிஸ்ட் அறிக்கையில் இருக்கும் பிற முக்கியமான செய்திகள் என்ன தெரியுமா..?

ஆடிப்போன அமெரிக்கா

ஆடிப்போன அமெரிக்கா

ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ள குளோபல் ரிச் லிஸ்ட் அறிக்கையில் உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 799 பணக்காரர்கள் 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அப்படியிருக்கையில் இந்த வருடம் சீனாவில் (தைவான், ஹாஹ்காங் உட்பட) இருந்து மட்டும் சுமார் 182 புதிய பணக்காரர்கள் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் அமெரிக்காவில் இருந்து வெறும் 59 புதிய பணக்காரர்கள் மட்டுமே இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

வித்தியாசம்

வித்தியாசம்

2020 ஹூரன் பணக்காரர்கள் பட்டியலை பார்க்கும் போது வல்லரசு நாடான அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவில் அதிகளவிலான புதிய. பணக்காரர்கள் இந்தியாவில் உள்ளனர். அதுவும் கிட்டதட்ட 3 மடங்கு அதிகளவிலான புதிய பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகளவில் பேட்டரி கார்கள் அதிகளவிலான வரவேற்பு கிடைக்கும் காரணத்தால் தற்போது சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் ஜாக் மா அவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.

2020ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 45 பில்லியன் டாலர் மதிப்புடன் ஜாக் மா 21வது இடத்தைப் பிடித்துள்ளார். 20வது இடத்தை 46 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் படித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The second youngest self-made billionaire in the world

Ritesh Agarwal, founder of OYO Rooms, is the second youngest self made billionaire in the world, according to the ninth edition of the Hurun Global Rich List 2020. The 26-year-old Indian entrepreneur comes second only after the cosmetics queen Kylie Jenner.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X