நீங்கள் எங்களுடன் தான் இருக்கிறீர்கள் அப்பா.. டீனா அம்பானி உருக்கமான பதிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறைந்த ரிலையன்ஸ் நிறுவனரும், இந்தியாவின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவருமான திருபாய் அம்பானியின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகன் அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை செய்துள்ளார்.

 

இது குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீங்கள் இல்லை என்றாலும் கண்களை மூடிக் கொண்டு , எண்ணங்களை திரட்டும்போது, அங்கு நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் நினைவுகள் எங்களை சிறந்தவர்களாக மேம்படுத்த உந்து சக்தியாக விளங்குகிறது. அதற்கு நன்றி என்றும் கூறி, திருபாய் அம்பானி உடனான போட்டோவை போஸ்ட் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கோடிகணக்கில் சம்பளம்.. தூள் கிளப்பும் IIT மாணவர்கள்.. ரிலையன்ஸ்,டாடா, அதானியும் பணியமர்த்த திட்டம்? கோடிகணக்கில் சம்பளம்.. தூள் கிளப்பும் IIT மாணவர்கள்.. ரிலையன்ஸ்,டாடா, அதானியும் பணியமர்த்த திட்டம்?

குடும்பத்தினருடன் போட்டோ

குடும்பத்தினருடன் போட்டோ

அந்த போட்டோவில் அனில் அம்பானி, டீனா அம்பானி அவர்களுடைய இரு குழந்தைகள், திருபாய் அம்பானி என 5 பேரும் உள்ளனர். டீனாவின் பதிவுக்கு பலரும் நல்ல மனிதருக்கு இறப்பு எதுவும் கிடையாது. அவர் நம் இதயத்தில் தான் வாழ்கிறார்கள் என ஒரு வாசகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு யூசர் திருபாய் அம்பானி மாபெரும் மனிதர். அவர்கள் இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் என பதிவிட்டுள்ளார்.

திருபாய் அம்பானியின் பிறப்பு

திருபாய் அம்பானியின் பிறப்பு

திருபாய் அம்பானி கடந்த 2002ம் ஆண்டில் ஜூலை 6ம் தேதி தனது 69 வயதில் காலமானார்.

திருபாய் அம்பானி ஒரு சிறிய கிராமத்தில் 1932ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பிறந்தார். திருபாய் அம்பானியின் தந்தை ஒரு ஆசிரியர்.. இவரின் ஆரம்ப காலத்தில் பெரிதாக சிறப்பாக இல்லை எனலாம். அவர் படித்தது 10ம் வகுப்பு தான். எனினும் அவரின் ஆரம்ப சம்பளம் வெறும் 300 ரூபாயாகும்.

பெட்ரோல் பங்கில் வேலை
 

பெட்ரோல் பங்கில் வேலை

திருபாய் அம்பானிக்கு 17 வயது ஆனபோது ஏமன் நாட்டில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். அவர் வேலை செய்தாலும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது அவரின் எண்ணமாகவும், கனவாகவும் இருந்து வந்தார். அந்த கனவுகளுடன் தான் சென்னை திரும்பிய திரும்பிய திரும்பாய் அம்பானி, 1958ல் ஜவுளி தொழிலையும் சிறியதாக் தொடங்கினார்.

மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம்

மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அம்பானியில் 330 சதுர அடி மட்டுமே. அப்படி சிறிய அளவில் தொடங்கிய இந்த அலுவலகம் தான் இன்று மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது. ஆரம்பத்தில் உறவினர்களுடன் இணைந்து தொடங்கிய இந்த வணிகம், 1973ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

4 குழந்தைகள்

4 குழந்தைகள்

கோகிலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட திருபாய் அம்பானிக்கு, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, நீனா, தீப்தி உள்ளிட்ட 4 பேரும் பிள்ளைகள்.

இந்த நால்வரில் தற்போது முகேஷ் அம்பானி தான் தற்போது ரிலையன்ஸ் இணடஸ்ட்ரீஸ் நிறுவனத்தினை நடத்தி வருகின்றார்.

விதை போட்டவர் திருபாய் அம்பானி

விதை போட்டவர் திருபாய் அம்பானி

கடந்த 2002ல் ஜூலை 6ம் தேதி காலமான திரும்பாய் அம்பானி, ஆரம்பத்தி சுயமாக உழைத்து முன்னேறி பல வெற்றிகளை தங்களது வாழ்நாளில் கண்டவர். தற்போது முகேஷ் அம்பானி அதனை வெற்றியின் உச்சத்திற்கே கொண்டு சென்று இருந்தாலும், இதற்கு விதை போட்டவர் திருபாய் அம்பானியே.

ஆலமரமாக வளர்ந்துள்ள ரிலையன்ஸ்

ஆலமரமாக வளர்ந்துள்ள ரிலையன்ஸ்


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பினை எடுத்துக் கொண்ட 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதன் வருவாய் 17 மடங்கு அதிகரித்துள்ளது. இதே இதன் லாபம் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று உலகளாவிய கூட்டு நிறுவனமாக ஆலமரமாக உருவெடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tina Ambani Meltdown on Dhirubhai Ambani's 90th birth anniversary

Tina Ambani Meltdown on Dhirubhai Ambani's 90th birth anniversary
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X