சர்வதேச நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்தியா வேகமான வளர்ந்து கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. சொல்லப்போனால் மற்ற முன்னணி பொருளாதார நாடுகளில் மந்த நிலையின் அச்சம் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் இருந்தாலும் வளர்ச்சி பாதையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நாடாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? இந்திய மாநிலங்களில் சிறந்த வளர்ச்சியினை காணும் மாநிலங்கள் எது? வாருங்கள் பார்க்கலாம்.

குஜராத் 2வது இடம்
குஜராத் இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஒன்றாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவின் படி, குஜராத்தின் CAGR விகிதம் 8.2% அதிகரித்து, 6.16 லட்சம் கோடி ரூபாயாக கடந்த 2012ல் இருந்தது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் 12.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இது தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா முதலிடம்
மகாராஷ்டிராவின் நிலையான மதிப்பில் மொத்த உள் நாட்டு உற்பத்தி விகிதமானது ( Gross state domestic product at constant price (GSDP) ) 18.89 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மகாராஷ்டிரா தான் இந்தியாவில் முதல் பெரிய மாநிலமாக உள்ளது.

கர்நாடாகவின் வளர்ச்சி
கர்நாடாகவின் வளர்ச்சி விகிதமானது மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், அதன் CAGR விகிதம் 7.3% அதிகரித்து, 2012ல் 6.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2021ம் ஆண்டில் 12.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கர்நாடகா 4வது பெரிய பொருளாதார மாநிலமாகும்.

ஹரியானா & மத்திய பிரதேசம்
மூன்றாவது இடத்தில் ஹரியானா மாநிலம் உள்ளது. இதன் GSDP விகிதம் 2021ம் நிதியாண்டில் 5.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த 2012ல் 2.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மத்திய பிரதேசமும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்து வருகின்றது. இதன் ஜிடிபி 2012ல் 3.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021ல் 5.65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசம்
மத்திய பிரதேசத்தினை தொடர்ந்து ஆந்திர பிரதேசம் உள்ளது. ஆந்திராவின் GSDP வளர்ச்சி விகிதம், 6.5% அதிகரித்து, 2021ம் நிதியாண்டில் 6.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2012ல் 3.79 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆந்திரா இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமாக உள்ளது.

தெலுங்கானா
ஆந்திராவின் அண்டை மாநிலமான தெலுங்கானா ஆறாவது இடத்தில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் CAGR விகிதம் 2012ல் 3.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2021ல் 6.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

தமிழ் நாடு & ஓடிசா
தமிழகத்தின் CAGR விகிதம், 2021ல் 5.8% அதிகரித்துள்ளது. இதே GSDP 5.8% அதிகரித்து, 12.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
இதே ஒடிசாவின் வளர்ச்சி விகிதம் CAGR விகிதம் 5.73% வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஜிடிபி வளர்ச்சியானது, 3.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டெல்லி
இந்த பட்டியலில் டெல்லி 9வது இடத்தில் உள்ளது. இதன் வருடாந்திர GSDP விகிதம் 5.67% ஆக உள்ளது. இதே இதன் ஜிடிபி அளவு 2012ம் நிதியாண்டில் 3.44 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021ல் 5.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

அஸ்ஸாம்
இந்தியாவின் 10வது பெரிய மாநிலமான அஸ்ஸாமின் CAGR விகிதம் 5.3% வளர்ச்சியுடனும், GSDP விகிதம் 2.28 லட்சம் கோடி ரூபாயாகவும் வளர்ச்சிக கண்டுள்ளது.
இதே கேரளாவின் வளர்ச்சி விகிதம் 3.9% ஆகவும், இதே ஜம்மு & காஷ்மீரின் CAGR விகிதம் 4.1% ஆகவும், ஜார்கண்டின் CAGR விகிதம், 4.2% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே மிசோரமின் வளர்ச்சி விகிதம் 7.9% ஆகவும், இதன் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த நிதியாண்டில் 14.4 ஆயிரம் கோடி ரூபாயாகவும், இதே மேகாலயாவின் ஜிடிபி விகிதமானது, 23.75 ஆயிரம் கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம்
இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5.4% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இதன் ஜிடிபி அளவானது 2012ம் நிதியாண்டில் , 87.36 லட்சம் கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இது 2022ம் நிதியாண்டில் 147.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.