2020ல் இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் எது எது? பட்டியல் இதோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வருகின்றன. அது தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் பரவி வருகின்றது.

 

இது சிறந்த நிறுவனர்களால் நிறுவப்பட்டு, வழி நடத்தப்பட்டு வருகின்றது. உலகின் வளர்ந்து வரும் நாடான இந்தியா, விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்திய வர்த்தகம் செய்ய சிறந்த இடமாகும். இதற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய முன்னணியில் உள்ள சில நிறுவனங்களை பற்றித் தான் பார்க்கபோகிறோம்.

450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. சரிவிலிருந்து தப்பித்த முதலீட்டாளர்கள்..!

முதலிடத்தில் டாடா குழுமம்

முதலிடத்தில் டாடா குழுமம்

இந்தியாவில் மட்டும் அல்ல, உலகளவில் தனது வியாபாரத்தினை செய்து வரும் இந்திய நிறுவனங்களில், உள்ள முன்னணி குழுமங்களில் ஒன்று டாடா குழுமம். இது உணவில் போடும் உப்பு முதல் கொண்டு, கைக்கடிகாரம், தங்கம், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் என பல துறைகளிலும் வெற்றிகரமாக கோலேச்சி வரும் நிறுவனமாகும். இதன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆவார். எனினும் டாடா குழுமத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமே ரத்தன் டாடா என்பது மறுக்க முடியாத விஷயமே. தற்போது டாடா குழுமம் ஃபார்சூன் லிஸடில் 265 இடத்தில் உள்ளது,

இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பல துறைகளை கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். இந்தியாவில் இன்று அதிகளவில் வருமானம் பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். 60 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாகும். இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, சில்லறை வர்த்தகம், ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகம், தொலைத் தொடர்பு துறை, டிஜிட்டல் வணிகம் உள்ளிட்ட பலவற்றில் நல்ல லாபம் கண்டு வருகிறது. இந்த நிறுவனம் ஃபார்சூன் லிஸடில் 106 இடத்தில் உள்ளது,

மூன்றாவது இடத்தில் உள்ள எஸ்பிஐ
 

மூன்றாவது இடத்தில் உள்ள எஸ்பிஐ

பொதுத்துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தற்போது நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனராகும். இது மிகப்பெரிய ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு வங்கியாகும். இது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீண்டுள்ளது. இது கடந்த 1806ம் ஆண்டு நிறுவப்பட்ட இது மிகப்பழமையான வங்கியாகும்.

எஸ்பிஐ நாடு முழுவதும் 24,000க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகவும் நம்பகமான வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி ஃபார்சூன் லிஸடில் 236 இடத்தில் உள்ளது,

கோத்ரேஜ் குழுமம்

கோத்ரேஜ் குழுமம்

கோத்ரேஜ் குழுமம் பற்றிய இந்தியாவில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நிறுவனம் பல வணிகங்களை மேற்கொண்டு வரும் ஒரு மல்டி நேஷனல் நிறுவனமாகும். அதிலும் கோத்ரேஜ் பூட்டு என்றால் யாரும் கேள்விபட்டிருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு பேர் போன ஒரு நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் சோப்பு, பர்னிச்சர், பிரிட்ஜ், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் நுழைந்து, அதிலும் வெற்றிகரமாக வழி நடத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆதி புர்ஜோர்ஜி கோத்ரேஜ் ஆவார். சர்வதேச சந்தையிலும் இந்த நிறுவனத்தின் பேருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இது தற்போது சிந்தால், கோத்ரேஜ் எக்பர்ட் கேர் டை, குட் நைட் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களையும் தயாரித்து வருகிறது.

விப்ரோ குழுமம்

விப்ரோ குழுமம்

ஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் விப்ரோ. இது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இது சேவை நிறுவனம் மட்டும் அல்ல, ஒரு உற்பத்தி நிறுவனமும் கூட. இது சந்தூர் மற்றும் யார்ட்லி உள்ளிட்ட பல சோப்புகளை உற்பத்தி செய்து வருகின்றது.

இந்த நிறுவனம் 1945ல் முகம்மது பிரேம்ஜியால் தொடங்கப்பட்டது. இது Western India Palm Refined Oil Limited என்ற நிறுவனத்தின் சுருக்கமே விப்ரோ என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய தலைவர் அசிம் பிரேம்ஜி இதன் தலைவராவர்.

இன்ஃபோசிஸ் நிறுவனம்

இன்ஃபோசிஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்திய ஐடி நிறுவனங்களில் மூன்றாவது நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீல்கனி. இந்த நிறுவனம் 1981ல் தோற்றிவிக்கப்பட்டது என்றாலும், 1987ல் தான் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் தனது சேவையினை வழங்கி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top companies & leading companies in india in current year

Top companies update.. Top companies & leading companies in india in current year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X