ரிலையன்ஸின் பங்குகளை விற்க திட்டமிடும் அரசு.. ஆப்கான் முதல் ஏர்டெல் வரையிலான முக்கிய செய்திகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா திடீர் தாக்குதல், இந்திய ஐடி நிறுவனங்கள் கேம்ப்ஸ் இண்டர்வியூ, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமைப் பங்கு வெளியீடு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அரசு வசம் இருக்கும் பங்குகளை விற்க முயற்சி, இப்படி பரப்பரப்பான பல விஷயங்களை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.

ரூ.100 லட்சம் கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. மோடி செப்டம்பரில் முக்கிய அறிவிப்பு..! ரூ.100 லட்சம் கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. மோடி செப்டம்பரில் முக்கிய அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தானினை தாலிபான்கள் கைபற்றியுள்ள நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகின்றது.

ஆப்கானில் இருந்து வெளியேற்றம்

ஆப்கானில் இருந்து வெளியேற்றம்

ஒருபுறம் தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மற்ற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31க்குள் வெளியேறி விட வேண்டும் என தாலிபான்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க வீரர்கள், ஆப்கான் மக்கள், மற்ற நாட்டினர் என பலரும், ஆப்கானின் தலைநகரான காபூலில் குவிந்து வந்தனர்.

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்

இதற்கிடையில் ஆளில்லா விமான ஒன்றில் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், காபூல் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்த தற்கொலை படையை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது, தற்கொலைபடையை சேர்ந்தவர் வாகனத்தில் பயணித்து கொண்டு இருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி ஒவ்வொரு நிமிடமும் அச்சத்தினை ஏற்படுத்தும் செய்திகளாகவே வந்து கொண்டுள்ளன.

பார்தி ஏர்டெல்லின் பிரம்மாண்ட திட்டம்

பார்தி ஏர்டெல்லின் பிரம்மாண்ட திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்த்தி ஏர்டெல், அதன் உரிமை பங்கு வெளியீடு மூலம் 21,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த நிறுவனத்தின் குழும உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த குழு ஏர்டெல் பங்கின் முகமதிப்பு 5 ரூபாய் என்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இவ்வாறு திரட்டப்படும் நிதியினை, அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவை தொகையினை செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸின் பங்கினை விற்கும் அரசு

ரிலையன்ஸின் பங்கினை விற்கும் அரசு

பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உள்ள பங்கினை, அரசு SUUTI மூலம் விற்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதனை நிர்வகிக்க விரைவில் ஒரு இடைத்தரகரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிகின்றது.

இதற்காக DIPAM விரைவில் ஒரு இடைத்தரகரை நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிப் பற்றாக்குறையால் பிரச்சனை

சிப் பற்றாக்குறையால் பிரச்சனை

இந்தியாவின் வாகன உற்பத்தியாளர்கள் பண்டிகை பருவத்தில் வாகன உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு, கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகின்றனர். எனினும் தற்போது சிப் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற நிலையில், உற்பத்தியாளர்களுக்கு இது அழுத்தத்தினை கொடுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

ஐடி நிறுவனங்களின் கேம்பஸ்

ஐடி நிறுவனங்களின் கேம்பஸ்

இந்திய ஐடி நிறுவனங்களில் attrition விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில், அந்த இடைவெளியை நிரப்ப ஐடி நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பொறியாளர்களை நிரப்ப திட்டமிட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து தேவையானது அதிகரித்து வரும் நிலையில்,. பணியமர்த்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இது அந்த ஆண்டு ஐடி ஊழியர்களுக்கும், ஐடி துறை சார்ந்த பிரெஷ்ஷர்களுக்கும் ஒரு நல்ல ஆண்டாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top headlines today; Govt looking to sell RIL shares, Airtel approves Rs.21,000 rights issue

Top headlines today; Govt looking to sell RIL shares, Airtel approves Rs.21,000 rights issue
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X