அடடே இது நல்ல விஷயமாச்சே.. இந்திய கடற்படை மேலும் வலுவடையும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் இந்திய ராணுவத்திற்கும், கடற்படைக்கும் தனி மரியாதை உண்டு. அந்த வகையில் இந்திய கடற்படை ஏற்கனவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை இன்னும் சிறப்பாக செயல்படுத்தவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக போர்க்கப்பல்கள், விமான தாக்குதல், கரையோர குண்டுவெடிப்புக்கு எதிராக பயன்படுத்த கூடிய கடற்படை துப்பாக்கிகளை வாங்க, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மதிப்பு 1 பில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.

இந்திய கடற்படைக்கு துப்பாக்கி விற்பனை

இந்திய கடற்படைக்கு துப்பாக்கி விற்பனை

இந்திய கடற்படையின் அபாயகரமான திறன்களை மேம்படுத்தும் விதமாக போர்கப்பல்கள், விமான எதிர்ப்பு தாக்குதல் மற்றும் விமான எதிர்ப்பு மற்றும் கரையோர குண்டுவெடிப்புக்கு எதிராக பயன்படுத்த, ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவுக்கு விற்க வேண்டும் என்ற உறுதியை டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசுக்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்த ரக துப்பாக்கி?

எந்த ரக துப்பாக்கி?

இதில் 13 எம்.கே-45 5இன்ச்/62 காலிபர் (எம்.ஓ.டி 4) கடற்படை துப்பாக்கிகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் விற்பனைக்கு 1.0210 பில்லியன் டாலர் செலவாகும் என்றும் டிபென்ஸ் செக்யூரிட்டி கோஆப்ரேஷன் ஏஜென்சி கடந்த செவ்வாய்கிழமையன்று அளித்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடற்படை மேலும் வலுவடையும்

கடற்படை மேலும் வலுவடையும்

இது ஏற்கனவே ஆயுத அமைப்புகளில் நல்ல திறனுடன் இருந்தாலும், இந்த ஆயுதங்கள் வாங்குவதால் இந்திய கடற்படை இன்னும் வலுவாக செயல்படும் என்றும் கருதப்படுகிறது. மேலும் இது எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் திறன்களை மேம்படுத்தும்

இந்திய கடற்படையின் திறன்களை மேம்படுத்தும்

எம்.கே-45 துப்பாக்கி அமைப்பு அமெரிக்கா மற்றும் பிற நட்பு படைகளுடன் இயங்கக்கூடிய தன்மையை அதிகரிக்கும். அதே வேளையில் மேற்பரப்பு போர் எதிர்ப்பு மற்றும் வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை வழங்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு தடையாகவும், உள்நாட்டு பாதுகாப்புகளை வலுப்படுத்தவும் இந்திய இது போன்ற திறன்களை மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளுக்கு துப்பாக்கி விற்பனை

எந்தெந்த நாடுகளுக்கு துப்பாக்கி விற்பனை

இந்த உபகரணத்தின் முன்மொழியப்பட்ட விற்பனை மற்றும் ஆதரவு பிராந்தியத்தில் அடிப்படை இராணுவ சமநிலையை மாற்றாது என்று அது கூறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா தனது தனது கடற்படை துப்பாக்கிகளின் சமீபத்திய பதிப்பை விற்க முடிவு செய்த சில நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த கடற்படை துப்பாக்கிகளை இதுவரை ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட ஒன்று. இந்தியா தவிர பிரிட்டன், கனடா உள்ளிட்ட சில கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் விற்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump admin has approved $1 billion worth naval guns to India

Trump admin has approved $1 billion worth naval guns to India. and other countries to have been sold this naval guns so far are Australia, Japan and South Korea.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X