அமெரிக்கா விசா வேணுமா 3 வருடம் காத்திருங்க.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கு அதிர்ச்சி அளிக்கும் வந்துள்ளது, சமீப காலமாக அமெரிக்கா விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா செல்வோர் பல பிரிவுகளில் இருந்தாலும் அதிகளவில் பயன்படுத்தப்படும் விசா என்றால் அது பிஸ்னஸ் விசா (B-1) மற்றும் டூரிஸ்ட் விசா (B-2). மற்ற விசாக்கள் சில எண்ணிக்கையில் மட்டுமே அளிக்கப்படுவதால் அதற்கான போட்டி மற்றும் அணுகும் முறை வேறு.

இந்த நிலையில் பரவலாகப் பயன்படுத்தும் விசாக்கள் பெற தற்போது காத்திருப்புக் காலம் அதிகரித்துள்ளதால் இந்திய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோயம்புத்தூரில் குவியும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரை..! கோயம்புத்தூரில் குவியும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரை..!

அமெரிக்கா விசா

அமெரிக்கா விசா

அமெரிக்காவின் பிஸ்னஸ் விசா (B-1) மற்றும் டூரிஸ்ட் விசா (B-2) ஆகியவற்றுக்கு முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு, இப்போது காத்திருப்புக் காலம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. அதாவது நீங்கள் அமெரிக்கச் சென்று சுற்றி பார்க்க விரும்பினால் இப்போது விசா பெற விண்ணப்பம் செய்தால் 3 வருடத்திற்குப் பின்பு தான் கிடைக்கும்.

 வெளியுறவுத்துறை அமைச்சகம்

வெளியுறவுத்துறை அமைச்சகம்

அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய சுற்றுலா விசா (B1/B2) நேர்காணல் சந்திப்புக்கான உலகளாவிய சராசரி காத்திருப்புக் காலம் இந்த மாதத்தின் படி இரண்டு மாதங்களுக்குக் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய்

கொரோனா தொற்று நோய்

இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்குப் பின் அதிகப்படியான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில், அமெரிக்கா இந்த விசா விண்ணப்பத்தைப் பிராசிங் செய்யத் தொடங்கியதிலிருந்து அமெரிக்க விசாக்களுக்கான காத்திருப்பு நேரம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

காத்திருப்புக் காலம்

காத்திருப்புக் காலம்

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தரவுகள் படி மும்பையில் B1/B2 விசா விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்-க்கான தற்போதைய காத்திருப்புக் காலம் 999 நாட்கள் ஆகும். இதுவே ஹைதராபாத்தில் 994 நாட்கள், டெல்லியில் 961 நாட்கள், சென்னையில் 948 நாட்கள், கொல்கத்தாவில் 904 நாட்கள்.

பாதிப்பு யாருக்கு

பாதிப்பு யாருக்கு

இந்தக் காத்திருப்புக் காலம் அதிகரித்துள்ளதால் மகன், மகள், பேர பிள்ளைகளைப் பார்க்கக் காத்திருக்கும் தாத்தா பாட்டிக்கும், அம்மா, அப்பாக்களுக்குத் தான். இதேபோல் திடீரென வர்த்தகம் செய்வதற்காக புதிய அல்லது இளம் தொழிலதிபர்கள் விசா பெற வேண்டும் என்றால் பாதிக்கப்படுவார்கள்.

B1/B2 விசா

B1/B2 விசா

இந்தியாவில் அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் காத்திருப்புக் காலம் முதல் முறையாக மூன்று வருடங்களை நெருங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக B1/B2 விசா விண்ணப்பதாரர் 2025 இன் பிற்பகுதியில் மட்டுமே நேர்காணல் எதிர்கொள்ள முடியும்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்

மக்கள் என்ன செய்ய வேண்டும்

இந்த நிலையில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என அமெரிக்க எம்பசி அதிகாரிகளைக் கேட்டபோது, தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டும், வரிசையில் இருப்பவரகள் முன்னேற முடியும். இது எவ்விதமான கட்டணமும் செலுத்தாவர்களுக்கான நிலை எனத் தெரிவித்துள்ளார்.

அவசர சந்திப்புகள்

அவசர சந்திப்புகள்

அவசர சந்திப்புகள் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யும் விசா விண்ணப்பதாரர்களுக்குச் சில நாட்களுக்குள் நேர்காணல் சந்திப்பு தேதி கிடைக்கும். இத்தகைய விண்ணப்பதாரர்-க்குக் காத்திருப்பு நேரத்தை விரைவில் குறைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், "என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

 யாருக்கு முன்னுரிமை

யாருக்கு முன்னுரிமை

தற்போது அமெரிக்கக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் காரணத்தால் மாணவர்களுக்கான விசா விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து திறமையான தொழிலாளர்களுக்கான டிராப் பாக்ஸ் விண்ணப்பங்கள் விரைவுபடுத்துகிறது, இதைத் தொடர்ந்து மீண்டும் பி1/பி2 விசா பெற வேண்டியவர்கள் (விசா விண்ணப்பித்த நான்கு ஆண்டுகளுக்குள் அவர்களின் விசா காலம் காலாவதியாகி விடும் நிலையில் நேர்காணல் தள்ளுபடிக்குத் தகுதி பெறுகின்றனர்).

டிராப் பாக்ஸ் வழக்குகள்

டிராப் பாக்ஸ் வழக்குகள்

விசா நேர்காணல் காலம் அதிகரித்து வரும் நிலையில் இதைச் சரி செய்ய, அமெரிக்கா அதிகமான விண்ணப்பதாரர்களை நேர்காணல் தள்ளுபடிக்குத் தகுதியுடையதாக்கியுள்ளது. இதை டிராப் பாக்ஸ் வழக்குகளாகக் கருதி வெளிநாட்டிற்கு அனுப்பித் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

Twitter: எலான் மஸ்க்-கிற்கு உதவும் சென்னை ஸ்ரீராம் கிருஷ்ணன்.. யார் இவர்..?! Twitter: எலான் மஸ்க்-கிற்கு உதவும் சென்னை ஸ்ரீராம் கிருஷ்ணன்.. யார் இவர்..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA business Visa, tourist visa, First-time applicants waiting period is 3 years; Who will affect

USA business Visa, tourist visa, First-time applicants waiting period is 3 years; Who will affect
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X