VLCC: இனியும் ஐபிஓ-வை நம்ப முடியாது.. கைகொடுத்த கார்லைல் குரூப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் மிகவும் பிரபலமான தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைல் குரூப், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் அழகு மற்றும் ஆரோக்கியச் சார்ந்த பொருட்களையும் சேவைகளையும் வழங்கி வரும் VLCC நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வாங்கியுள்ளது.

இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளது என ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புலம்பி வருவதற்கு மத்தியில் கார்லைல் குரூ போன்ற பெரிய நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்து உள்ளது மூலம் இந்திய ஸ்டார்ட்அப் சந்தைக்கு நம்பிக்கை வந்துள்ளது.

இந்தியாவில் அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வர்த்தகங்கள் அதிகளவில் மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது முதலீட்டாளர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1 கோடி ரூபாய்க் கொடுத்தால் நீங்க என்ன செய்வீங்க..?!! 1 கோடி ரூபாய்க் கொடுத்தால் நீங்க என்ன செய்வீங்க..?!!

VLCC நிறுவனம்

VLCC நிறுவனம்

டெல்லி-யை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் அழகு மற்றும் ஆரோக்கியச் சார்ந்த பொருட்களையும் சேவைகளையும் வழங்கி வரும் VLCC நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட இரண்டு முறை DRHP அறிக்கையைத் தாக்கல் செய்தது.

ஐபிஓ தோல்வி

ஐபிஓ தோல்வி

ஆனால் முதலீட்டுச் சந்தையின் சூழ்நிலை மோசமாக இருந்த காரணத்தாலும், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பங்குச்சந்தையில் கிடைக்கும் வரவேற்பு மோசமாக இருக்கும் வேளையிலும், இதர பிற காரணங்களுக்காகவும் ஐபிஓ வெளியிட முடியவில்லை.

DRHP அறிக்கை

DRHP அறிக்கை

ஆகஸ்ட் 2021ல் VLCC நிறுவனம் ஐபிஓ வெளியிட இரண்டு முறை DRHP அறிக்கையைத் தாக்கல் செய்தது.2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐபிஓ வெளியிட ஒரு முறை முயற்சி செய்தது. ஆனால் இரண்டு முறையும் தாக்கல் செய்ய முடியாமல், DRHP அறிக்கைக்கான ஒப்புதல் காலம் முடிவடைந்தது.

 கார்லைல் குழுமம்

கார்லைல் குழுமம்

இந்த நிலையில் தான் இனியும் ஐபிஓ-வை நம்பியிருக்கக் கூடாது என முடிவு செய்து VLCC தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை திரட்ட முடிவு செய்தது. மேலும் கார்லைல் குழுமம் VLCC நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பது குறித்து வெளியிடவில்லை.

5.5 பில்லியன் டாலர் முதலீடு

5.5 பில்லியன் டாலர் முதலீடு

கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் வாயிலாகக் கார்லைல் குரூப் VLCC நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. கார்லைல் குரூப் செப்டம்பர் 2022 நிலவரப்படி இந்தியாவில் 5.5 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1989 முதல் VLCC

1989 முதல் VLCC

VLCC 1989 இல் நிறுவப்பட்ட ஒரு பியூட்டி மற்றும் பிட்னஸ் சங்கிலி நிறுவனமாகும், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் இயங்கி வருகிறது.

11 நாடுகளில் வர்த்தகம்

11 நாடுகளில் வர்த்தகம்

1989 ஆம் ஆண்டு VLCC நிறுவனத்தை வந்தனா லுத்ரா நிறுவினார், இந்நிறுவனம் தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா என உலகில் 118 நகரங்கள் மற்றும் 11 நாடுகளில் சுமார் 210 ரீடைல் கிளினிக் -களைக் கொண்டுள்ளது. VLCC நிறுவனம் இந்தியாவில் 100 skill development institutes-ஐ நடத்தி வருகிறுத, இந்த அமைப்புகளில் அழகு மற்றும் ஆரோக்கியப் பிரிவுகளில் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. பெப்சி, கோகோ கோலா அதிர்ச்சி..! முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. பெப்சி, கோகோ கோலா அதிர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

VLCC: IPO failed twice, PE investor Carlyle Group acquires majority stake

VLCC: IPO failed twice, PE investor Carlyle Group acquires majority stake
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X