மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால் நமது முதலீடு என்ன ஆகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருவதே காரணம்.

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை தொடர்ச்சியாக மியூச்சுவல் ஃபண்டில் சேமிப்பதன் மூலம் ஒரு சில வருடங்கள் கழித்து மிகப்பெரிய தொகையை பெறும் வழிமுறை மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டுமே உள்ளது.

மற்ற முதலீட்டு சேமிப்பை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது மற்றும் அதிக வட்டி வருவாய் தரும் முதலீடு என்பதால் பொதுமக்கள் அதிகம் இதில் முதலீடு செய்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. இந்த விளம்பரத்திற்கு என்ன அர்த்தம்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. இந்த விளம்பரத்திற்கு என்ன அர்த்தம்?

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும் என்பதும் அந்த சந்தேகங்களை முதலீட்டாளர்களுக்கு நிதி ஆலோசர்கள் தீர்த்து வைப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

 விற்பனை

விற்பனை

அந்த வகையில் பல முதலீட்டாளர்களுக்கு வரும் சந்தேகம் என்னவெனில் நாம் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டுவிட்டாலோ அல்லது வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டாலோ நமது முதலீடு என்ன ஆகும் என்பதே ஆகும். இது குறித்து நிதி ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

செபி

செபி

ஒரு நிறுவனம் மூடப்பட்டால் அல்லது வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டால் அது முதலீட்டாளருக்கு கவலை தரும் விஷயமாக இருந்தாலும் சரி இது குறித்து செபி உரிய விதிகளை செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் எந்தவித கவலையும் பட வேண்டியதில்லை.

நிறுவனம் மூடப்பட்டால்?

நிறுவனம் மூடப்பட்டால்?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திடீரென ஒரு சில காரணங்களால் மூடப்பட்டால் அந்நிறுவனம் விற்பனை செய்வதற்கான ஒப்புதலை செபி அமைப்பிடம் நிறுவனத்தின் அறங்காவலர் பெற்று இருக்க வேண்டும். அதன்பின் செபி அந்நிறுவனத்தை மூடுவதற்கு வழிகாட்டும்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இதுபோன்ற சமயங்களில் நிறுவனம் மூடுவதற்கு முன்பாக அந்நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அவர்களது முதலீடு திரும்ப வழங்கப்படும். எனவே விற்பனை செய்யப்படும் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட முழு தொகையும் திரும்பி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை செய்யப்பட்டால்?

விற்பனை செய்யப்பட்டால்?

இந்த நிலையில் ஒரு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கி விட்டால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்கி விட்டால் முதலீட்டாளர்களுக்கு இரண்டு விதமான தேர்வுகள் உள்ளன. ஒன்று, புதிய நிறுவனத்தின் உள்ள திட்டங்களில் தொடரலாம். அந்த புதிய ஃபண்டின் உள்ள பலன்கள் முழுவதையும் முதலீட்டாளர்கள் பெறலாம்.

முதலீட்டை திரும்ப பெறுவது

முதலீட்டை திரும்ப பெறுவது

இரண்டாவது இதுபோன்ற சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை திரும்ப பெற்று கொள்ளலாம். திரும்ப முதலீட்டை பெறும்போது எந்தவிதமான வெளியேற்றக் கட்டணங்கள் இன்றி திட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What happens when a Mutual Fund company shuts down or gets sold off?

When a Mutual Fund Company shuts down or gets sold off, it is a serious matter to note for any existing investor. However, as Mutual Funds are regulated by SEBI, events of such kind have a prescribed process.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X