பணவீக்க இலக்கினை 9 மாதங்களாக ஏன் எட்ட முடியவில்லை.. ரிசர்வ் வங்கி விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணவீக்கத்தினை குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட தவறிவிட்டோம் என்பதை ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனினும் பணவீக்கத்தினை குறைக்கும் பொருட்டு முன் கூட்டியே வட்டியை அதிகரித்திருந்தால், அதனால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஃபிக்கி மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாட்டில் விளக்கம் கொடுத்துள்ளார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம், பணவீக்கத்தைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை தவற விட்டுவிட்டோம் என்ற கூறியிருந்தார்.

நவ.3 ஆர்பிஐ கூட்டம்.. இன்று அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம்..! நவ.3 ஆர்பிஐ கூட்டம்.. இன்று அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம்..!

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கி கூட்டத்தை ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் நடக்கிறது. இது பணவீக்கத்தினை குறைக்க முடியாமல் தோல்வி அடைந்த காரணத்தினால், ஏன் பணவீக்கத்தினை குறைக்க முடியாமல் தோல்வி கண்டது என்பது குறித்தான விளக்க உரையும் அரசுக்கு கொடுக்கவுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது தொடர்ந்து மூன்று காலாண்டுகளாகவே 2 - 6% -குள்ளாக வைக்க முடியாமல் போன நிலையில் வந்துள்ளது.

 

 

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

இந்தியா நெகிழ்வான பணவீக்க இலக்கினை கொண்ட ஆட்சிக்கு மாறிய பின்னர், 2016ல் வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைத்த பிறகு, இதுபோன்று ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இதுபோன்று விளக்க கடிதம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

பணவீக்கத்தினை இலக்கிற்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த நடவடிக்கையானது ரிசர்வ் வங்கிக்கு ஒரு தெளிவை கொடுக்கலாம்.

 

வட்டி  அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்

வட்டி அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்

ஆனால் இப்படி விவாதங்கள் ஏதும் இல்லாத நிலையில் அது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி 4வது முறையாக வட்டி அதிகரிப்பினை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், இது இந்தியாவிலும் வட்டி அதிகரிப்பினை முன்னதாக கணிக்கப்பட்டதை விட, சற்று அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

மற்ற நாட்டின் மத்திய வங்கிகளும், அமெரிக்க மத்திய வங்கியின் முடிவினை தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிலும் பணவீக்கம் இலக்கிற்கு மேலாக இருந்து வரும் நிலையில், கட்டாயம் வட்டி அதிகரிப்பு என்பது சற்று கூடுதலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடிதம் வெளியாகுமா?

கடிதம் வெளியாகுமா?

ரிசர்வ் வங்கியானது அரசுக்கு எழுதும் கடிதமானது உடனடியாக மக்களுக்கு கிடைக்காது. எனினும் அரசு பின்னர் வெளியிட முடிவு செய்யலாம் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

மேலும் பணவீக்கம் உயரத் தொடங்கிய போது மத்திய வங்கி வட்டியை உயர்த்தாதது குறித்தும் ஆதரவினை தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்- வட்டி விகிதம்

பணவீக்கம்- வட்டி விகிதம்

இந்தியாவில் நுகர்வோர் விலைகள் ஜனவரி முதல் 6% மேலாக இருந்து வருகின்றது. இது ஏப்ரல் மாதத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கி ஒரு மாதம் கழித்து தான் வட்டியினை உயர்த்த ஆரம்பித்தது. இது தொடர்ச்சியாக 4 முறை 190 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இது கடன் விகிதங்களை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு சென்றது.

ஏன் மூன் கூட்டியே செய்யவில்லை

ஏன் மூன் கூட்டியே செய்யவில்லை

தொடர்ந்து அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கைக்கு மத்தியில், இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் பணவீக்க போராட்டத்தினை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. முன்னதாக வட்டி விகிதத்தினை அதிகரிக்காததன் மூலம் , ஆசியாவின் மூன்றாவது பொருளாதாரத்தின் சரிவினை தடுத்தது. பணவீக்க இலக்கில் ஒரு சறுக்கல் இருந்தது. ஆனால் வட்டி அதிகரிப்பு இருந்திருந்தால் பொருளாதாரத்திலும் சறுக்கல் இருந்திருக்கலாம் என தாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

எப்போது சீரடையும்எப்போது சீரடையும்

எப்போது சீரடையும்எப்போது சீரடையும்

ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருட்கள் விலை குறையத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச்-க்குள் பணவீக்கம் இலக்குக்குள் வரும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why the inflation target could not be achieved for 9 months?

This is the first time the RBI missed the inflation target since it set up a committee in 2016 to decide on interest rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X