விளாடிமிர் புதின் மகள்கள் மீது அமெரிக்கா தடை விதிக்க என்ன காரணம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் நாட்டில் ரஷ்யா செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் குற்றங்களைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்கா புதிய தடை உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவில் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் இரண்டு மகள்களான மரியா புடினா (வொரொன்ட்சோவா) மற்றும் கேடரினா டிகோனோவா ஆகியோரைக் குறிவைத்து அமெரிக்கா தடை உத்தரவை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏதற்காக விளாடிமிர் புதினின் மகள்கள் மீது தடை உத்தரவை வெளியிட வேண்டும்...? என்ன காரணம்..?

புதின் மகள்கள் மீது புதிய தடை விதித்த அமெரிக்கா.. என்ன காரணம்..? புதின் மகள்கள் மீது புதிய தடை விதித்த அமெரிக்கா.. என்ன காரணம்..?

அமெரிக்கா

அமெரிக்கா

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யா மீது பல கடுமையான தடைகளை விதித்துள்ள நிலையில் புதன்கிழமை ரஷ்ய வங்கிகள் மீதும், ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதினின் மகள்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர், முன்ளாள் பிரதமர் ஆகியோர் மீது தடை விதித்துள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன்

இதோடு அமெரிக்கா ரஷ்யாவின் இரு பெரிய வங்கிகளான SBERBANK மற்றும் ALFA BANK மீது முழுத் தடை வித்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கும் பிரிட்டன் SBERBANK மற்றும் ALFA BANK சொந்தமான சொத்துக்களை முடக்கவும், இந்த வருடத்தின் இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெய் மற்றும் நிலக்கரி வாங்குவதை நிறுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா

மேலும் ஐரோப்பாவும் பிரிட்டன் நாட்டைப் போலவே ரஷ்யாவில் புதிய முதலீடுகளுக்குத் தடை விதிக்கவும் எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை வாங்குவதைக் குறைக்கும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதினின் மகள்கள் மீது தடை உத்தரவை விதிக்க என்ன காரணம்.

விளாடிமிர் புதின் மகள்

விளாடிமிர் புதின் மகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மகளான கேட்ரினா டிகோனோவா மற்றும் மரியா புடினா, இவர் மரியா வொரொன்ட்சோவா என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது, இருவரும் 30 வயதுகளில் உள்ளனர். மரியா வொரொன்ட்சோவா தான் புதினின் மூத்த மகள்.

மரியா வொரொன்ட்சோவா,

மரியா வொரொன்ட்சோவா,

மரியா வொரொன்ட்சோவா, சுகாதாரத் துறையில் ரஷ்யாவின் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் Nomenko நிறுவனத்தின் துணை உரிமையாளர் ஆவார். மரியா வொரொன்ட்சோவா-க்கு ரஷ்ய அரசின் ஆதரவுகள் இருப்பது மட்டும் அல்லாமல் ஹெல்த்கேர் துறையின் அரசு வருமானத்தில் Nomenko நிறுவனத்தின் வாயிலாக வருமானத்தைப் பெறுகிறார்.

நெதர்லாந்து கணவர்

நெதர்லாந்து கணவர்

36 வயதாகும் மரியா வொரொன்ட்சோவா pediatric endocrinologist அதாவது குழந்தை உட்சுரப்பியல் நிபுணர் ஆவார். இதனால் ரஷ்ய ஹெல்த்கேர் துறையில் இயங்குவதில் வியப்பு இல்லை. மேலும் மரியா வொரொன்ட்சோவா நெதர்லாந்து தொழிலதிபரான ஜோரிட் ஃபாசென்-ஐ திருமணம் செய்துள்ளார்.

கேட்ரினா டிகோனோவா

கேட்ரினா டிகோனோவா

இதேபோல் கேட்ரினா டிகோனோவா ரஷ்யாவின் முன்னணி நிறுவனங்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் முதலீட்டில் இயங்கி வரும் முக்கியமான Innopraktika development initiative திட்டத்தின் தலைவராக உள்ளார். ரஷ்ய அரசுக்கும் இத்திட்டத்திற்கும், கேட்ரினா டிகோனோவா-வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ரஷ்ய அரசு

ரஷ்ய அரசு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மகளான கேட்ரினா டிகோனோவா மற்றும் மரியா வொரொன்ட்சோவா ஆகிய இருவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரஷ்ய அரசுடன் நெருக்கமாக இருக்கும் காரணத்தால் அமெரிக்கா இருவர் மீது தடை உத்தரவுகளைச் செய்துள்ளது.

அமெரிக்கா தடை

அமெரிக்கா தடை

இத்தடை மூலம் அமெரிக்காவுக்குப் பயணம், முதலீடு, நிதியியல் சேவை பயன்படுத்துதல் போன்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் இதுபோல் பல ரஷ்யா பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மீது தடை விதித்துள்ள வேளையில் விளாடிமிர் புதின் மகள் மீது விதித்த தடை தற்போது வைரலாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why US targeted Putin's daughters Mariya Putina Vorontsova, Katerina Tikhonova in new sanctions?

Why US targeted Putin's daughters Mariya Putina Vorontsova, Katerina Tikhonova in new sanctions? விளாடிமீர் புதின் மகள்கள் மீது அமெரிக்கா தடை விதிக்க என்ன காரணம்..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X