நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி, சில வாரங்களுக்கு முன்பு தான் மூன்லைட்டிங் காரணமாக நுற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் முக்கியமான 20 தலைவர்களில் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பணி நீக்கம் குறித்தான முடிவினை வெறும் 10 நிமிடங்களில் எடுத்ததாகவும், ரிஷாத் பிரேம்ஜி கூறியுள்ளார். இது இன்னும் பெரும் விவாத்தினை கிளப்பியுள்ளது.

விதிமீறல் காரணமாக பணி நீக்கம்
அப்படி என்னதான் நடந்தது? எதற்காக இந்த 10 நிமிட பணி நீக்கம்? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் 19 அன்று பெங்களூரில் நடந்த நாஸ்காம் கூட்டத்தில் பேசிய ரிஷாத் பிரேம்ஜி, மூத்த அதிகாரி ஒருவரை, விதி மீறல் காரணமாக பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

10 நிமிடங்களில் முக்கிய முடிவு
10 நிமிடங்களில் அந்த முடிவை எடுத்தோம். அவரின் பங்கு நிறுவனத்திற்காக முக்கியமானது. எனினும் கடினமான நேரங்களில் நிறுவனம் முக்கிய முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த பணி நீக்கம் விதிமீறல் என்று கூறப்பட்டாலும் மூன் லைட்டிங் தொடர்புடையதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து நிறுவனம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

எனக்கும் வேலை இருக்காது?
ரிஷாத் பிரேம்ஜி நிறுவனம் ஒருமைப்பாட்டை எவ்வாறு மதிக்கிறது என்பது குறித்து வலியுறுத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் மூன் லைட்டிங் குறித்த விவாதம் எழுந்த நிலையில், இது குறித்த விவாதித்தினை முன் வைத்திருந்திருந்தார்.
மேலும் நானாக இருந்தாலும் சரி, விதிமுறைகளை மீறினால் எனக்கும் வேலை இருக்காது என்று பிரேம்ஜி கூறியுள்ளார்.

ஸ்டார்ட் அப்களுக்கு என்ன?
ஸ்டார்ட் அப்களுக்கு வழங்கிய ஆலோசனையில், மதிப்பீட்டிற்கு பதிலாக மதிப்புமிக்க வணிகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
நிலையான நிறுவனங்களை உருவாக்குவது பற்றிய பயணம் நீண்டது. இது சிக்கலானது. சில நேரங்களில் மெதுவானதாக இருக்கும். நீங்கள் விரைவாக பணம் சம்பாதிக்க நினைத்தால், உங்கள் நிறுவனம் வித்தியாசமானது. இது நீண்டகாலம் நல்ல வளர்ச்சி காண வேண்டும் என்ற நிறுவனத்துடன் ஒப்பிடும்போது, இது வித்தியாசமானது.

சரியான நபர்களை நியமிக்கணும்
நீங்கள் நிறுவனங்களுக்கு சரியான நபர்களை நியமிக்க வேண்டும். மிக ஆபத்தான நபர்கள் நம்பமுடியாத வெற்றிகரமான நபர்களாக இருப்பர். ஆனால் அது நிலையானது அல்ல என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில் இது உங்களை நீண்டகால தூரத்திற்கு அழைத்து செல்லாது. இது உங்களை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மட்டுமே எடுத்துக் செல்லும் என கூறினார்.

ஹைபிரிட் வேலை?
ஹைபிரிட் வேலை குறித்து கூறிய பிரேம்ஜி, விப்ரோவின் அனைத்து ஊழியர்கள் அனைவரும் சிறிது காலம் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும். எங்கள் ஊழியர்கள் அனைத்து நேரத்திலும் திரும்பி வருவதை விப்ரோ விரும்பவில்லை. அது குறித்து உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.