கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வது போல அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்ற புதிய கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
ஆம் Department of Personnel and Training (DoPT) துறை மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற புதிய கொள்கை முறையை வடிவமைத்துள்ளது. இப்புதிய முறை லாக்டவுன் காலம் முடிந்த பின்பு நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு, ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்துள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு Work From Home என்றால் எப்படி..? அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இது கிடைக்குமா..?
48 லட்ச ஊழியர்கள்
மத்திய அரசின் கீழ் வரும் பல்வேறு துறைகள் மற்றும் அதன் அலுவலகங்களில் சுமார் 48,34,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். தற்போது Department of Personnel and Training (DoPT) துறை தயாரித்துள்ள புதிய கொள்கை முறையின் படி வருடத்தில் 15 நாட்கள் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
அதேபோல் இது அனைவருக்கும் கிடையாது, சில முக்கியப் பணிகளில் இருக்கும் தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என DoPT துறை தெரிவித்துள்ளது.
DoPT துறை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், DoPT துறை ஏற்கனவே பல்வேறு அமைச்சக அலுவலகங்களுக்கும் ஊழியர்களுக்கும் சமுக இடைவெளியை கடைப்படித்து வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளது. இதை ஏற்றுப் பல்வேறு மத்திய அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
தொழில்நுட்ப உதவி
கொரோனா காலத்தில் பல்வேறு அரசு துறைகள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. குறிப்பாகக் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் முக்கிய அரசு துறைகள் அனைத்தும் முதல் முறையாக E-office மற்றும் வீடியோ கான்பிரென்சிங் முறையைப் பயன்படுத்து பணியாற்றி வருகிறது. இந்தியாவிற்கும், அரசு அதிகாரிகளுக்கும் இது புது விதமான அனுபவமாக உள்ளது.
விதிமுறைகள்
கொரோனா பாதிப்பில் கிடைத்த அனுபவத்தை வைத்து தொடர்ந்து மத்திய அரசு ஊவியர்கள் கொரோனா லாக்டவுன் காலத்திற்குப் பின்பு வீட்டில் இருந்து பணியாற்றவும், தொடர்ந்து வேலைகளைச் செய்யவும் இத்திட்டம் மூலம் வழிவகைச் செய்யப்பட உள்ளது.
அப்படி வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அரசு சார்ப்பில் லேப்டாப் அல்லது கம்பியூட்டர் கொடுக்கப்படும். மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இண்டர்நெட் தேவை என்பதால், இண்டர்நெட் இணைப்பிற்கான கட்டணத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது (reimbursement).
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications