ஐடி ஊழியர்களுக்கு இனி நிரந்தரமாக work from home.. மோடி அரசின் புதிய சட்ட திருத்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் இந்திய ஐடி துறை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கியதற்கு முதலும் முக்கியக் காரணம் 99 சதவீத ஊழியர்களாலும் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும் என்பது தான். இத்துறையின் அவசியம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஐடி துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுத்தனர்.

 

இது நாட்டின் பொருளாதாரத்திற்கும், வர்த்தகச் சந்தைக்கும் பெரிய அளவில் உதவிய நிலையில் work from home மற்றும் work from anywhere என்பதை நிரந்தரமாகவே சட்டமாக்க ஐடி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தது.

இதன் அடிப்படையில் மத்திய அரசு work from home மற்றும் work from anywhere-ஐ நிரந்தரச் சட்டமாக்கத் தேவையான அனைத்து சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்து ஐடி துறை வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு சரிவிலிருந்து முழுமையாக சென்செக்ஸ் மீண்டது.. இனி ராஜயோகம் தான்..!2020ஆம் ஆண்டு சரிவிலிருந்து முழுமையாக சென்செக்ஸ் மீண்டது.. இனி ராஜயோகம் தான்..!

சட்ட மாற்றங்கள்

சட்ட மாற்றங்கள்

டெலிகாம் துறையின் கீழ் Other Service Provider (OSP) விதிமுறைகளில் பதிவு செய்யும் முறையும், பிபிஓ நிறுவனங்களுக்கான டேட்டா தொடர்புடைய ஒழுங்குமுறைகளையும் நீக்கியுள்ளது மத்திய அரசு.

இதோடு வங்கி உத்தரவாதம், ஸ்டேட்டிக் ஐபி என work from home மற்றும் work from anywhere-க்குத் தடையாக இருக்கும் அனைத்து இடர்களையும் நீக்கி புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மோடி

மோடி

இப்புதிய சட்ட திருத்தங்கள் குறித்துப் பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ஐடி துறை இந்தியாவின் பெருமை. இந்திய ஐடி துறையில் சக்தியை உலகம் அறியும். இந்நிலையில் இத்துறையில் அனைத்தும் சாத்தியப்படுத்தும் வகையில், ஐடி துறையைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்கவும், Innovationல் இந்தியா முன்னேற புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ரவி சங்கர் பிரசாத்
 

ரவி சங்கர் பிரசாத்

மேலும் ஐடி துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது டிவிட்டரில், இந்தப் புதிய விதி மாற்றம் இந்தியாவில் IT/ITES/BPO துறையின் வளர்ச்சியைப் பெரிய அளவில் ஊக்குவிக்கும்.

மேலும் work from home-ஐ இந்தியாவில் மிகவும் சிறந்த முறையில் எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சட்ட விதிகள் உருக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

190 பில்லியன் டாலர்

190 பில்லியன் டாலர்

கொரோனாவுக்காகத் தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட work from home புதிய சட்ட திருத்தத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டு உள்ளதால், நாட்டின் 190 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி துறை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.

இந்த மாற்றத்தை ஐடி துறையில் மட்டும் அல்லாமல் டெலிகாம் மற்றும் labour and commerce துறையில் படிப்படியாக அமலாக்கம் செய்யச் சிறப்பு இணை அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

ஊழியர்கள்

ஊழியர்கள்

இப்புதிய சட்ட திருத்தம் மூலம் ஐடி ஊழியர்களுக்கு work from home மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் work from anywhere-ம் சாத்தியம். அதாவது லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்பும் ஊழியர்கள் மாதக் கணக்கில் ஏன் வருடக் கணக்கிலும் அலுவலகம் வராமல் வேலை பார்க்க முடியும்.

இதற்கு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது. இப்புதிய விதி மாற்றம் பல லட்சம் ஊழியர்கள் புதிதாகப் பணிக்கு வர வாய்ப்புகள் உண்டு.

 

யாருக்கு லாபம்..?

யாருக்கு லாபம்..?

இப்புதிய மாற்றம் ஊழியர்களுக்குச் சில வகையில் லாபம் என்றாலும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபம். அலுவலக வாடகை முதல் Maintanence செலவுகள் வரையில் பெரிய தொகை சேமிக்க முடியும்.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

கொரோனா காரணமாகத் தற்போது 85 சதவீதத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலையில், ஐடி துறையில் வர்த்தகம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கி வரும் காரணத்தால் டிசிஎஸ் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட ஆலோசனை முடிவு செய்திருந்தது.

தற்போது சட்டமாக வந்துள்ள நிலையில், அனைத்து நிறுவனங்களும் எவ்விதமான தடையுமின்றி இதைச் செயல்படுத்த முடியும்.

 

மக்கள் கருத்து.

மக்கள் கருத்து.

ஐடி ஊழியர்களுக்கு work from home மற்றும் work from anywhere நிரந்தரமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்களாகிய உங்கள் கருத்து என்ன..?

இது ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியா..? அல்லது வேதனையா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

work from home Will be permanent: Modi's Govt Major reform in IT Industry

work from home Will be permanent: Modi's Govt Major reform in IT Industry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X