ஒரே நாளில் 38% ஏற்றம்.. யெஸ் பேங்கில் என்ன தான் நடக்குது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடாக யெஸ் வங்கி 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8,500 கோடி ரூபாய்) நிதியுதவி கிடைத்துள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வங்கின் பங்கின் விலை இன்று 38 சதவிகித ஏற்றம் கண்டு, முடிவில் 24 சதவிகித ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

தனியார் துறையை சேர்ந்த இந்த வங்கி பங்கு, பிஎஸ்.இயில் 34.94 சதவிகிதம் ஏற்றம் கண்டு 76.65 ரூபாய் வரை அதிகரித்து, பின்னர் முடிவில் 24 சதவிகித ஏற்றத்துடன் 70.45 ரூபாயாக முடிவடைந்தது.

ஒரே நாளில் 38% ஏற்றம்.. யெஸ் பேங்கில் என்ன தான் நடக்குது..!

 

இதே என்.எஸ்.இயில் இந்த பங்கின் விலை 38.55 சதவிகிதம் ஏற்றம் கண்டு 78.70 ரூபாய் வரை சென்று, முடிவில் 23.77 சதவிகித ஏற்றத்துடன் 70.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இந்த வங்கிக்கு கிடைக்கும் முதலீட்டின் மூலம் இவ்வங்கியின் மூலதனத்தை அதிகரிப்பதில் இவ்வங்கி உறுதியாக என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய பங்கு சந்தையில் இது பல தகவல்களினால் புதிய உச்சத்தைக் கண்டன, இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 77 புள்ளிகள் ஏற்றம் கண்டும் 40129 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,877 ஆக முடிவடைந்துள்ளது.

இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.92 ரூபாயாக சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த புதிய உச்சத்திற்கு காரணம் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி குறைப்பு செய்ததும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது இன்னும் பொருளாதாரம் வலுவடையவில்லை என்ற காரணத்தினாலேயே, முதலீட்டாளர்களின் கவனம் மற்ற நாடுகளின் பக்கம் திரும்பியது என்றும் கூறலாம்.

இந்த நிலையிலேயே இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் பி.எஸ்.இயில் உள்ள 80க்கும் மேற்பட்ட பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. குறிப்பாக நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோ எட்ஜ், ஹெச்.யு.எல், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், பாட்டா இந்தியா, என்.ஐ.ஐ.டி, ஆர்.ஐ.எல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yes Bank shared increased over 38% after its receive from Rs.8,500 crore from an overseas investors

Yes Bank shared increased over 38% after its receive from Rs.8,500 crore from an overseas investors, its will boost up bank capitalization
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X