இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ஏற்கனவே பல மாநிலங்களில் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. இது முழு நேர லாக்டவுனாக மாற்றப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இது பெரும் கவலையினை ஏற்படுத்தியிருந்தாலும், மக்களின் நலன் கருதி அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
Gold update: கிட்டதட்ட ரூ.8400 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?

கவலையளிக்கிறது
இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இது குறித்து ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீதர், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் மிக கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மறுபரிசீலனை செய்யுங்கள்
மேலும் லாக்டவுனை அமல்படுத்தும் நிலை வந்தால், அதற்கு முன்பு மத்திய அரசும், மாநில அரசும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீதரின் இந்த ட்வீட்டானது சாமானிய மக்கள் மத்தியில் அதிக கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.

ஏழைகளை காயப்படுத்துகிறது
அப்படி என்னதான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், வாருங்கள் பார்க்கலாம்.
லாக்டவுன்கள் ஏழ்மையான மக்களை அதிகளவில் காயப்படுத்துகின்றன. மார்ச் 2020ல் எங்களது ஊழியர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வீட்டில் இருந்து பணியாற்ற கூறினேன். அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட கிராமப்புற அலுவலகங்களையும் தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

ஏழைகளையே பாதிக்கும்
லாக்டவுன் என்பது அதிகளவில் ஏழை குடிமக்களையே பாதிக்கும். ஆக இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் தவிர்க்கும் என நாங்கள் நம்புகிறோம்.
முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், நம் மக்கள் தொகையில், சிறிய சதவீதம் மக்கள் மட்டுமே ரெகுலரான சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர்.

தினசரி வருமானம்
நம் மக்கள் பெரும்பகுதியினர் தினசரி வாழ்வாதாரத்தினை ஈட்டி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நாங்கள் உணவினை வழங்கியுள்ளோம். ஆக நாங்கள் இங்கு யதார்த்தத்தினை கண்டுள்ளோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுபூர்வமான கருத்தினை பகிர்ந்துள்ளார்.

ஓர்க் ப்ரம் ஹோம் ஆப்சன் அனைவருக்கும் கிடைக்காது?
தனது ட்விட்டரில் சில துறையினருக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆப்சன் கிடைத்துள்ளது. ஆனால் உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறையினருக்கும் இந்த ஆப்சன் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கிராமப்புற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆன்லைன் வகுப்புகளை பெற இயலாத நிலையில் உள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிராமப்புற குழந்தைகள் பாதிப்பு
சாப்ட்வேர் துறையில் உள்ளதால் அதிர்ஷ்டவசமாக எங்களால் வீட்டில் இருந்து பணி செய்ய முடிகிறது. ஆனால் உற்பத்தி நிறுவனங்களால் அது முடியாது. ஆக லாக்டவுன் என்பது தொழிற்துறையை மோசமாக பாதித்துள்ளது. கிராம புற குழந்தைகள் ஏறக்குறைய 2 வருடங்களாக பள்ளிகளை பார்க்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகளும் அவர்களிடத்தில் இல்லை.

கருத்தில் கொள்ளுங்கள்
ஆக லாக்டவுனின் போது தினசரி சம்பளம் வாங்கும் ஊழியர்கள், உற்பத்தி தொழிலாளர்கள், கிராமப்புற குழந்தைகள் என அனைவரையும் கருத்தில் கொள்ளுங்கள். யதார்த்தினை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசையும், மாநில அரசினையும் வலியுறுத்தியுள்ளார். ஆக அரசு இதனை கருத்தில் கொண்டு லாக்டவுனை தவிர்க்கும் என நம்புகிறேன். இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்.

பெரும் துயரம்
மேலும் லாக்டவுன் என்பது கிராமப்புற மக்களை அதிக துயரத்திற்கு வழி வகுக்கும் என கூறியுள்ளார்.
உண்மையில் சாமானிய மக்கள் லாக்டவுன் நடவடிக்கையினால் படும் துயர்களை எடுத்துரைத்துள்ள ஸ்ரீதர் வேம்புவின் இந்த ட்வீட்டானது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது ட்விட்டரில் பரவலாக பகிரப்பட்டும், பலரும் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் கிராமப்புற மக்கள் ஒவ்வொருவரின் கோரிக்கையும் இதுவாகத் தான் இருந்து வருகின்றது. அரசு முழு லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய நிலை வந்தால், இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதெல்லாம் சரி, லாக்டவுன் குறித்து உங்கள் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்கள்.