ஓவர் நைட்டில் 'ஒபாமா' ஆக முடியாது, ஆனா 'வெற்றி' நிச்சயம்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்திய அரசு 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்டத்தைப் பல்வேறு வழிகளில் ஊக்குவித்து வருகின்றது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க நிதி உதவி, ஒற்றைப் புள்ளியில் பதிவு, எளிமைப்படுத்தப்பட்ட ஆரசு விதிகள், விரைவாகக் காப்புரிமை விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முறை, மற்றும் ஒரு சில பட்டியலிட வரி விலக்குகள் போன்ற பல்வேறு நம்பிக்கைக்குரிய சலுகைகளை வழங்குகின்றது.

  ஒரு புறம், இந்திய அரசு ஸ்டார்ட்அப்களுக்கு வழங்கும் ஆதரவைக் கண்ணுறும் நாம், மறுபுறம் அதிக அளவில் ஸ்டார்ட்அப்கள் தோல்வியுறுவதையும் கண்டு வருகின்றோம்.

  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு வெற்றிகரமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்க என்ன வேண்டும்..?

  ஸ்டார்ட்அப்

  இன்றைய இளைஞர்களின் கனவு எனச் சொல்லப்படும் ஸ்டார்ட்அப் என்கின்ற சொல்லே நம்மில் பலருக்கு ஒரு திருப்தியை அளிக்கிறது. எனினும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதும் நமக்குத் தெரியும். இந்தியாவில் ஸ்டார்ட்அப்கள் பல்வேறு பிரச்சினைகள் சந்தித்து வருகின்றன, மேலும் அவற்றின் தோல்வி சதவீதமும் மிக அதிகமாக உள்ளது.

  தோல்விக்கு என்ன காரணம்?

  ஸ்டார்ட்அப்கள் ஏன் தோல்வி அடைகின்றன என்பதை ஆராய்ந்து பல்வேறு பகுப்பாய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள சில முக்கியக் காரணங்களாவன.

  • பொருத்தமற்ற அணி
  • நிதிப் பற்றாக்குறை
  • தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த முடியாமை.
  • பயனற்ற அல்லது திட்டமிடப்படாத வணிகம்
  • கடமைகள் சரிவர நிறைவேற்றாமை
  • முறையற்ற அல்லது திறமையற்ற பணக்கட்டுப்பாடு

  தோல்வியும் வெற்றியும்..

  முந்தைய ஸ்லைடரில் கூறியவை தோல்விக்கான காரணங்களில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. நாம் இங்கே தோல்விக்கான காரணங்களை அலச முற்படுகின்றோம். அதற்கான தீர்வுகளை அல்ல. தீர்வுகள் உங்களுடைய ஸ்டார்ட்அப்களை வெற்றிகரணமான ஒன்றாக மாற்ற முடியும்.

  ஓவர் நைட்டில் ஒபாமா

  முதலில் எந்த ஒரு ஸ்டார்ட்அப்களும் ஒரு நாள் இரவில் பல பில்லியன் நிறுவனமாக மாற முடியாது என்பதைக் கூறி நம்முடைய அலசலை ஆரம்பிப்போம்.

  சர்வநிச்சயமாக ஸ்டார்ட்அப்கள் வளருவதற்குச் சிறிது காலம் தேவைப்படும். ஒவ்வொரு ஸ்டார்ட்அப்களும் ஒரு பிரத்தியேகமான யோசனையால் வழிநடத்தப்படுகிறது மற்றும் அந்த யோசனை அதற்குரிய பலனை, மிகச் சரியாகச் சொல்வதென்றால் பண வெகுமதியைப் பெற வேண்டும்.

  இங்கே வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களுக்கு என்ன வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காணத்தொடங்குவோமா.

   

  இணை நிறுவனர் / சரியான திறமையாளரைப் பெறுதல்:

  ஒவ்வொரு ஸ்டார்ட்அப்களுக்கும் ஒரு இணை நிறுவனர் வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஸ்டார்ட்அப்களுக்கும் மிகச்சரியான திறமையாளர் அவசியம் தேவை. இதில் மிகவும் சுவாரஸ்யமான செய்தி என்னவெனில், சுமார் 63 சதவீத ஸ்டார்ட்அப்கள் திறமையான மற்றும் சரியான அணி அமையாத காரணத்தினால் தோல்வி அடைகின்றன எனப் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சரியான அணி என்பது குறைந்தது பின்வரும் திறன்களை உடைய மக்களைக் கொண்டதாய் விளங்கும்:

  1) மார்கெட்டிங்
  2) நுகர்வோரைப் புரிந்து கொள்வது
  3) பேச்சுவார்த்தை
  4) தொழில்நுட்ப ஆர்வலர்

   

  விற்பனைக்குரிய தயாரிப்புகள்:

  சுமார் 42 சதவீத ஸ்டார்ட்அப்கள் தங்களுடைய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த முடியாமல் தோல்வி அடைகின்றன. அதாவது அவர்கள் சந்தைக்குத் தேவைப்படாத பொருட்களைத் தயாரிக்கின்றார்கள். இதிலிருந்து தப்பிக்கப் பின்வரும் தீர்வுகள் உதவும்.

  முறையான ஆய்வு

  சந்தையைப் பற்றிய முறையான ஆய்வை அவசியம் மேற்கொள்ள வேண்டும். சில பொருட்களுக்குச் சந்தையில் வரவேற்பு இருக்காது. தொழில்புரிவோர், சந்தை என்பது விற்பனையாளர்களின் பேரார்வத்தால் இயக்கவில்லை, நுகர்வோரின் தேவையால் இயங்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

  விமர்சன ஆய்வு

  தயாரிப்புப் பொருட்களுக்கான மேம்பாடு பற்றிய விமர்சன ஆய்வு - நீங்கள் ஒரு அற்புதமான தயாரிப்பை சந்தைக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் எந்த ஒரு தயாரிப்பும் 100 சதவீதம் சிறந்தது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு தயாரிப்பையும் மேம்படுத்த ஒரு வழி கட்டாயம் இருக்கும். அதை அடிக்கடி தெரிந்து கொள்ள வேண்டும்.

   

   

  எந்த ஒரு வணிகத் திட்டமும் இல்லாமல் இருப்பது:

  ஆ! இது மிகவும் மோசமானதாகும். உங்களுடைய புதிய அலுவலத்திற்கு வண்டி ஓட்டிச் செல்லும் பொழுது, நீங்கள் வழி தெரியாது விழிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பலர், "நாங்கள் ஒரு ஜிபிஎஸ் கருவி வைத்திருக்கின்றோம் !" எனப் பதிலளிக்கலாம். சரி, ஜிபிஎஸ் கருவி என்பது உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உங்கள் புதிய அலுவலகத்திற்கு வாகனத்தை ஓட்டிச் செல்லும் முன் அதற்குரிய திட்டத்தைத் தயாரிக்கும் பொழுது, உங்களுடைய புதிய முயற்சி மற்றும் நிறுவனத்தைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். ஆமாம், உங்களுக்கு ஒரு திட்டம் , ஒரு பாய்வுப்படம், ஒரு செயல் பட்டியல் போன்றவை கண்டிப்பாகத் தேவை. அவற்றை முடிந்தவரைத் தங்குதடையற்றதாகச் செய்து முடியுங்கள். தீர்வுகள்,

  1) ஒரு வணிக மாதிரியை உள்ளடக்கிய ஒரு சிறந்த வணிகத் திட்டத்தைத் தயார் செய்யுங்கள்
  2) முடிந்தவரை அதைப் பல்வேறு அடுக்குகளாகக் கட்டமையுஙள்
  3) அதில் மார்க்கெட்டிங் உத்திகளைச் சேர்க்கவும்

   

  மூலதனம்:

  இப்போது உங்களிடம் ஒரு நல்ல தயாரிப்பு மற்றும் ஒரு ஒழுக்கமான மற்றும் திறமையான அணி அமைந்து விட்டது. இது நன்றாக உருளும் சக்கரங்களைப் போன்றது. அந்த நேரம் நீங்கள் திடீரென்று பணப் பற்றாக்குறையில் சிக்கி விடலாம். அப்பொழுது நீங்கள் முன்னெப்போதையும் விட நிதிக்காக அதிகமாக ஓட நேரிடலாம். ஓ! ஆம், இது நீங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் உங்கள் வியாபாரத்தின் ஆரம்பக் கட்டங்களில் எதிர்பார்க்கவில்லை.

  நிதியும் நிறுவனமும்

  சரி, நிதி என்பது நீங்கள் முயற்சி மற்றும் திட்டமிட வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான விஷயம் ஆகும். உங்களுக்கு ஒரு தேவதையைப் போன்ற முதலீட்டாளர் முதலில் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல முதலீடு நல்லவையை நோக்கி உருளத் தொடங்கும்.

  உந்து சக்தியாக:

  தனிப்பட்ட தொடர்புகள், இணையம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திச் சந்தையில் அறியப்படுவது - மக்களுடன் அடிக்கடி விவாதிப்பது உங்கள் வணிகத்தின் மீது அவர்களுக்கு விருப்பத்தை அதிகரிக்கும். யாருக்குத்தெரியும். உங்களின் விவாதத்தால் உந்தப்பட்டு யாராவது ஒருவர் உங்களுடன் சேர்ந்து உங்களுடைய தொழிலில் குதிக்கலாம்.

  தயாரிப்பு அங்கீகாரம்:

  நீங்கள் உங்களுடைய தயாரிப்புகளை ஒரு அளவிற்கு எடுத்துச் சென்றால், அதை ஒரு முதலீட்டாளர் முன் முன்னிறுத்த முடியும். உங்களைப் போல், ஒரு முதலீட்டாளருக்கும் தனது பணத்தைப் பற்றிக் கவலை இருக்கும். மேலும் அவர் அவ்வளவு எளிதாக ஒரு யோசனையின் பேரில் முதலீடு செய்யமாட்டார். ஒரு முழு அம்சங்களுடன் கூடிய தயாரிப்புப் பொருளானது, நீங்கள் ஒரு முதலீட்டாளரை நாடும் முன்பாக, உங்களுக்கு அவசியம் தேவை.

  நிலைபெறுதல் மற்றும் அர்ப்பணிப்பு:

  பொன்மொழிகள்! வாசிக்க எளிதானது. கடைப்பிடிப்பது மிகவும் கடினம். உங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் விட்டு விடாதீர்கள். எப்பொழுதும் உறுதியுடன் தொடர்ந்து செயலாற்றுங்கள்.

  முறையிட்ட இணைப்பு மற்றும் நிதி கட்டுப்பாடு:

  நம் இந்தியாவில் தொழில் தொடங்க நிறையப் பதிவு மற்றும் இணைப்பு தேவை. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு நிறுவனப் பதிவு, முத்திரை பயன்பாடுகள், மற்றும் நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பு போன்ற பல்வேறு சேவைகள் தேவைப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு வேலை மற்றும் நிதி சுமையில் திணறிக்கொண்டிருக்கின்றன.

  மாற்றத்திற்கு ஒத்துப்போதல்:

  ஒரு நல்ல பொருளை தயாரித்து அதைத் திறமையாகச் சந்தைப்படுத்தினால் மட்டும் போதாது. நம்மை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது. மனிதர்கள் நிலையான மாற்றம் மூலமாகவே இந்த நிலமையை எட்டியுள்ளனர். ஏன் உங்கள் சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு இது தேவையில்லை என்று நினைக்கின்றீர்கள். தீர்வு,

  1) போட்டியாளர்கள் மீது ஒரு நெருக்கமான கண்
  2) உங்கள் தயாரிப்பு மற்றும் அதன் நிலையான முன்னேற்றத்தை பற்றி ஆக்கப்பூர்வமாகச் சிந்தியுங்கள்.
  3) நிறுவப்பட்ட அமைப்புகளை மேம்படுத்தி அதன் மூலம் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மற்றும் விரைவான சேவையைத் தரமுடியும்.

   

  முடிவுரை

  ஒவ்வொரு ஸ்டார்ட்அப்களும் தொடக்ககாலச் சவால்களைச் சந்திக்கும். "ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையில் வந்து போகும். அதைக் கடந்து போவது மிகவும் முக்கியம். ஏனெனில் ஈசிஜியில் ஒரு நேர் கோடானது நீங்கள் உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கும்" - ரத்தன் டாடா (இந்திய தொழிலதிபர்). இங்கு மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் நீங்கள் தொடர்ந்து இயங்குவது மற்றும் களத்தைத் தக்க வைத்திருப்பது ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள படுகுழிகளில் விழாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

   

   

  அரசு சலுகை

  மத்திய அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளைப் பயன்படுத்து ஒரு சிறப்பான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அமைக்க முடியும்.

  மத்திய அரசின் சலுகை மற்றும் விதி வழிமுறைகள் இந்திய தொழில் முனைவோர் மற்றும் இந்தியாவில் உள்ள இளம் திறமையாளர்கள் சுலபமாகச் சுயதொழில் தொழில் புரிவதற்கான ஆதரவு நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.

   

  நியூஸ்லெட்டர்

  சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..!

  சமுக வலைத்தள இணைப்புகள்

  இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

  கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Top 7 solutions for building a successful startup

  The term startup in itself gives an incomparable satisfaction. However, all that glitters is not gold. Startups in India face a lot of problems and as said above, and failure percentage is very high.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more