உங்கள் வேலையை இழக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

தற்போதுள்ள நாட்டு நடப்பில், வேலை செய்யும் இடங்களில் ஆண்களும் சரி, பெண்களும் சரி பல்வேறு மன அழுத்தங்களுக்கிடையே வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

குடும்பச் சூழ்நிலை, சுற்றுப்புற சூழ்நிலை, நாட்டு சூழ்நிலை, அலுவலகச் சூழ்நிலை நமக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. நமது மேலதிகாரிகளுக்கும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பணியின் பொறுப்பு, அழுத்தம் ஆகியவை அதிகமாகத்தான் இருக்கிறது. இவற்றிலிருந்து வெளியே வர கையாள வேண்டிய சில எளிய வழிகளைப் பற்றி நாம் இங்கே காண்போம்.

நீங்கள் உங்கள் நிதிநிலைமை, மன நிலைமை ஆகியவற்றைச் சரியாக நிர்வகித்து நல்ல வேலைக்கான ஒரு வாய்ப்பை பெறுவதாக இருந்தால், நீங்கள் என்னென்ன விஷயங்களைச் செய்யக்கூடாது என்று அறிந்திருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

மன அழுத்தத்தோடு அல்லது பரபரப்போடு இருக்காதீர்கள்

உங்களின் பணக்கஷ்டங்கள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், உங்களின் புதிய வேலைக்கான நேர்முகத்தேர்வின்போது இவை அங்கே பிரதிபலிக்கக்கூடும். உங்கள் திறமைகளின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டு அழைப்புக்காகக் காத்திராமல் வேலையைத் தேட வேண்டும்.

கடன் கொடுத்தவரை புறக்கணிக்காதீர்கள்

நீங்கள் கடன் பாக்கி வைத்திருப்பவராக இருந்தால், அது கடன் அட்டை பட்டியலாகட்டும், கடன்களுக்கான தவனைகளாகட்டும், அதற்காக நீங்கள் மறைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கடன் பெற்ற உங்கள் வங்கியையோ அல்லது நிதி நிறுவனத்தையோ அணுகி உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி எடுங்கள்.

நீங்கள் ஒரு மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் அந்த வங்கி உங்கள் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்கக் கூடும்.

 

உங்களின் ஓய்வுகாலப் பாதுகாப்பு நிதியில் கை வைக்காதீர்கள்

எந்த நிலையிலும், உங்களின் ஓய்வுகாலப் பாதுகாப்பு நிதியில் கை வைக்காதீர்கள். ஏனென்றால், உங்களுக்கு வேலை கிடைத்த பின்னும், உடனடியாக உங்கள் பாதுகாப்பு நிதியை நீங்கள் மறு சீரமைக்க இயலாமல் கூடப் போகலாம்.

முதல் பணியை ஏற்காதீர்கள்

உங்கள் திறமைகளுக்குத் தகுந்ததாக இல்லாதபோது அல்லது மிகக் குறைந்த சம்பளம் என்றபோது அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய துணிச்சலான முடிவை எடுக்காமலிருப்பது சிறந்தது. உங்களின் வருமானத்தை அதிகரிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதைத் தவிருங்கள்.

உங்கள் மேலதிகாரியைப் பற்றி அவதூறு பேசாதீர்கள்

நீங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டது அநிநாயமாகத் தோன்றினாலும், உங்கள் மேலதிகாரியைப் பற்றியோ அல்லது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றியோ அவதூறு பேசாதீர்கள். வார்த்தைகளைத் தவற விட்டு விட்டால் உங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பது உங்களுக்குச் சிரமமாகக்கூடும். எந்த ஒரு மேலதிகாரியும் அழுது கொண்டே பேசுபவரை விரும்புவதில்லை. உங்கள் வழிகளை நீங்களே அடைத்து விடாதீர்கள்.

மேலதிகாரிகளும் மனிதர்கள்தான். உங்களுக்கு இருப்பதுபோன்ற எல்லாவிதமான பிரச்சனைகளும் அவர்கள் அளவில் சற்று வித்தியாசமாக அவர்களுக்கும் இருக்கும்.

உங்கள் சிரமங்களைப் பற்றி மட்டுமே பேசுவதைத் தவிர்த்து உங்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகளுக்கான கதவுகளை வலியச் சென்று தட்டி மாலையை ஏற்று வெற்றியாளராக வாழ உங்களுக்கும் பிடிக்கும்தானே.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These things also be important reason on losing your job

These things also be important reason on losing your job
Story first published: Wednesday, June 14, 2017, 18:07 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns