2018-ம் ஆண்டு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னை: நீங்கள் எப்போது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது அதிகம் லாபம் பெறுவீற்கள். இதுவே குறைந்த காலத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக ரிஸ்க் இருக்கும், எனவே இதுபோன்ற திட்டங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் உங்களுக்குச் சந்தை வளர்ச்சியினைப் பொருத்து அதிக லாபம் கிடைக்கும். எனவே வரும் 2018-ம் ஆண்டு முதலீட்டைத் துவங்கி வேகமாகப் பணக்காரர் ஆவதற்கான 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

எஸ்பிஐ ப்ளூசிப் ஃபண்டு

நீண்ட கால வளர்ச்சியை அளிக்கக் கூடிய இந்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டமானது இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்களில் எல்லாம் முதலீடு செய்துள்ளது. 2006-ம் ஆண்டு முதல் குறைந்த ரிஸ்கில் அதிக லாபத்தினை எஸ்பிஐ ளூசிப் ஃபண்டு அளித்துள்ளது. 3 வருடம், 5 வருடம் மற்றும் 10 ஆண்டுகள் வரை இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் போது உங்களுக்கு 13 முதல் 5.5 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.

ஐசிஐசிஐ ப்ரூ ஃபோக்கஸ்டு ப்ளூசிப் ஃபண்டு

பத்து வருடத்திற்கும் குறைவான காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியினைப் பெற்றுள்ள ஐசிஐசிஐ ப்ரூ ஃபோக்கஸ்டு ப்ளூசிப் ஃபண்டு முதலீட்டாளர்கள் சிறந்த வளர்ச்சியினையும், உத்திரவாதத்தினையும் அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 1 வருடத்தில் 29% வரை லாபமும், 3 வருடத்தில் 12.10 சதவீதம் வரை லாபமும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 16.81% வரை லாபமும் அளித்துள்ளது.

பிராங்க்ளின் இந்தியா ப்ரிமா ஃபண்டு

எந்த ஒரு காரணமும் இந்த மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்து இந்த ஃபண்டு நல்ல லாபத்தினை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. 1 வருடம் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 31 சதவீதம் வரையிலும், 3 வருடம் வரை முதலீடு செய்துள்ளவர்களுக்கு 17.1 சதவீதம் வரையிலும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 24.93 சதவீதம் வரையிலும், 12 வருடம் வரை முதலீடு செய்துள்ளவர்களுக்கு 12.69 சதவீதம் வரையிலும் பிராங்க்ளின் இந்தியா ப்ரிமா ஃபண்டு லாபம் அளிக்கிறது.

கோடாக் எமர்ஜிங் ஈக்விடி திட்டம்

மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்து ஓர் அளவிற்கு நிலையான லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கோடாக் எமர்ஜிங் ஈக்விடி திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். ஃபண்டு திட்டமானது அறிமுகம் ஆனதில் இருந்து ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 13.90 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.

பிராங்க்ளின் இந்தியா சிறு நிறுவனங்கள் ஃபண்டு

ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது அதிக ரிஸ்க் வாய்ந்தது. ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்டு திட்டமாக இது பார்க்கப்படுகிறது. மிதமான லாபத்தினை இந்த ஃபண்டு திட்டம் அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் வரை முதலீடு செய்து வந்தால் 35.12 சதவீதம் வரையிலும், 3 வருடம் வரை முதலீடு செய்து வந்தால் 19.76 சதவீதமும், 5 வருடம் வரை முதலீடு செய்தால் 29.67 சதவீதம் வரையிலும் லாபம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

டாடா ஈக்விட்டி P/E ஃபண்டு

மல்ட்டி-கேப் அணுகுமுறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்றதாக டாடா ஈக்விட்டி P/E ஃபண்டு திட்டம் உள்ளது. நல்ல நிறுவனப் பங்குகளை இந்த நிறுவனம் வாங்குவதில் அதிகக் கவனம் செலுத்தினாலும், குறைந்த விலை பங்குகளை வாங்க விருப்பம் காட்டுவதில்லை. இந்த ஃபண்டில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 1 வருடத்தில் 33.28 சதவீதம் வரையிலும், 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 17.42 சதவீதம் வரையிலும், 5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 22.38 சதவீதம் வரையிலும், 10 வருடம் வரை முதலீடு செய்யும் போது 11.82 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.

மோதிலால் ஓஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு மல்டிகேப் 35 ஃபண்டு

துவங்கப்பட்ட 3 வருடத்தில் 10,000 கோடி ரூபாயினை எட்டியுள்ள இந்தத் திட்டம் குறைந்த காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்த ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. எஸ்ஐபி முறையில் 5 முதல் 7 ஆண்டுகள் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து வரும் போது நல்ல லாபத்தினை இத்திட்டம் அளிக்கும்.

எச்டிஎப்சி பேலன்ஸ்டு ஃபண்டு

எச்டிஎப்சி பேலன்ஸ்டு ஃபண்டு உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 17,000 கோடி சொத்து மதிப்பளவில் வளர்ந்துள்ளது. நிலையான லாபம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றத் திட்டமாக எச்டிஎப்சி பேலன்ஸ்டு ஃபண்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு வருடத்தில் 23.37 சதவீதம் வரையிலும், 3 வருடத்தில் 12.86 சதவீதம் வரையிலும், 3 வருடத்தில் 12.86 சதவீதம் வரையிலும், 5 வருடத்தில் 18.53 சதவீதம் வரையிலும், 10 வருடத்தில் 14 சதவீதம் வரையிலும் லாபம் கிடைக்கும்.

எஸ்பிஐ மக்னம் பேலன்ஸ்டு ஃபண்டு

சிறந்த பேலன்ஸ்டு ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் எஸ்பிஐ மக்னம் பேலன்ஸ்டு ஃபண்டினை தேர்வு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 10 முதல் 22 சதவீதம் வரை லாபத்தினை அளித்து வருகிறது. இத் திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தால் 22.85 சதவீதம் வரையிலும், 3 வருடம் முதலீடு செய்யும் போது 12.38 சதவீதம் வரையிலும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 17.76 சதவீதம் வரையிலும், 10 வருடம் முதலீடு செபவர்களுக்கு 9.40 சதவீதம் வரையிலும் லாபம் கிடைக்கும்.

ஐசிஐசிஐ ப்ரூ பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டு

கைமுறையாகச் சொத்துக்களை நிர்வகிக்க விரும்பாதவர்கள் தானாகவே அதிக லாபம் அளிக்கும் சில பங்குகளைத் தேர்வு செய்ய விரும்புவார்கள். இந்த நிறுவனம் எப்படிச் சொத்துக்களைக் குறைந்த விலையிலி வாங்கி அதிக விலைக்கு விற்பார்களோ அதேப்போன்று லாபத்தினை அளிக்கும். இந்த ஃபண்டு திட்டமானது திடமான ஒரு வருவாயினை முதலீட்டாளர்களுக்கு அளிக்கிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 1 ஆண்டில் 17.45 சதவீதம் வரையிலும், 3 வருடத்தில் 10.96 சதவீதம் வரையிலும், 5 வருடத்தில் 14.19 சதவீதம் வரையிலும், 10 வருடத்தில் 10 சதவீதம் வரையிலும் லாபத்தினை அளிக்கிறது.

குறிப்பு

இந்தக் கட்டுரை நிதிப் பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல. கிரேனியம் தகவல் தொழில்நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் இக்கட்டுரையின் எழுத்தாளர் போன்ற எவரும் இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இழப்புகள் மற்றும்/அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 equity mutual funds to invest in 2018 to get rich fast

Top 10 equity mutual funds to invest in 2018 to get rich fast
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns