உங்கள் பிஎப் பேலன்ஸ் விவரங்களைத் தமிழில் பெறுவது எப்படி..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎப் கணக்கை வைத்துள்ளவர்கள் எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களை எளிதாக பெற முடியும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

அதிலும் எஸ்எம்எஸ் மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களைப் பெறும் போது தங்களது பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர். இந்தச் சேவைகள் ஸ்மார்ட்போன் மட்டும் இல்லாமல் சாதாரண மொபைல் போன் மூலமாகவும் பெற முடியும்.

மிஸ்டு கால மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களைப் பெறுவது எப்படி?

யூஏஎன் இணையதளத்தில் மொபைல் எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை அளித்துப் பதிவு செய்துள்ளவர்கள் 011-22901406 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு அழைப்பதன் மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களைப் பெற முடியும். இந்த சேவையினை பெற பிஎப் கணக்கு சந்தாதார்கள் தங்களது யூஏஎண் எண்ணை https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

யுஏஎன் ஆக்டிவேட் செய்ய தேவையானவை?

யூஏஎன் அல்லது பிஎப் உறுப்பினர் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான் எண் உடன் சந்தாதாரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அளிக்க வேண்டும்.

பிஎப் பேலன்ஸ் விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவது எப்படி?

யூஏஎன் ஆக்டிவேட் செய்த பிறகு 7738299899 என்ற மொபைல் எண்ணிற்கு EPFOHO UAN Number என டைப் செய்து அனுப்புவதன் மூலம் பிஎப் பேலன்ஸ் விவரங்களை எஸ்எம்எஸ் வழியாக மொபைல் எண்ணில் பெறலாம்.

பிஎப் பேலன்ஸ் விவரங்களைத் தமிழில் பெறுவது எப்படி?

பிஎப் விவரங்களைத் தமிழ் ஆங்கிலம், இந்திய, பஞ்சாபி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், பெங்காலி என 10 மொழிகளில் பெற முடியும். உதாரணத்திற்குத் தமிழில் பெற "EPFOHO UAN Number  TAM" என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்ஸ் அனுப்புவதன் மூலம் தமிழில் பிஎப் பேலன்ஸ் குறித்த விவரங்களைப் பெற முடியும். இந்த எஸ்எம்எஸ் சேவையினை யூஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் வழியாக மட்டுமே பெற முடியும்.

உமங் செயலி

பிஎப் பேலன்ஸ், கடைசி பங்களிப்பு போன்றவற்றை மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் இல்லாமல் உமங் செயலி மூலமாகவும் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Know Provident Fund Balance Through SMS Alerts In Tamil

How To Know Provident Fund Balance Through SMS Alerts In Tamil
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns