இந்தியாவில் சிறந்த மற்றும் மலிவான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் ஆணி வேர் அந்த நாட்டின் பங்குச் சந்தை ஆகும். அந்தச் சந்தையில் முதலீடு செய்யும் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையே பொருளாதாரத்தின் அளவு கோலாகப் பல்வேறு பொருளாதார வல்லுநர்களால் கருதப்படுகின்றது.

ஏனெனில் நாட்டின் வளம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும். சிறு மற்றும் குறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஈடுபட அவர்களுக்கு வர்த்தக மற்றும் டீமேட் கணக்குத் தேவைப்படுகின்றது. இத்தகைய கணக்குகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன.

வர்த்தக கணக்கு
 

வர்த்தக கணக்கு

தற்போதைய சூழ்நிலையில், ஒரு முதலீட்டாளருக்கு வர்த்தகக் கணக்கை தொடங்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையை ஒரு பொருளாதார வல்லுநர் கண்டிப்பாக வரவேற்பார். எனினும் ஒரு முதலீட்டாளரின் பார்வையில் இந்தக் சூழ்நிலை குழப்பம் மிகுந்தது மற்றும் சிக்கலானது.

மிகவும் முக்கியம்

மிகவும் முக்கியம்

ஒரு முதலீட்டாளர் ஒரு பொருத்தமான தரகரைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். பங்குச் சந்தை தரகைப் பொருத்தவரை மிகக் குறைவான தரகு என்பது தரகு நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கியமான காரணியாகத் திகழ்கின்றது. ஏனெனில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும் பொழுது, குறைந்த தரகு கட்டணம் உங்களுக்கு அதிகச் சேமிப்பை தரும். எனவே குறைந்த தரகு கட்டணம் உங்களுக்கு அதிகச் சேமிப்பை தரும்.

பரிவர்த்தனைக் கட்டணம்

பரிவர்த்தனைக் கட்டணம்

இந்தியாவில் உள்ள சிறந்த மற்றும் குறைந்த விலை பங்குச் சந்தை தரகு நிறுனங்களைப் பற்றி அலசும் பொழுது, அந்த நிறுவனத்தினால் விதிக்கப்படும் பரிவர்த்தணைக் கட்டணத்தைப் புறந்தள்ள முடியாது.

அனைத்து பங்குச் சந்தை தரகு நிறுவனங்களும் ஒரே விதமான தரகு கட்டணத்தை வசூலிப்பதில்லை என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் தரகு கட்டணம் என்பது வர்த்தக அளவைப் பொருத்து வேறுபடும்.

தரகு கட்டணம்
 

தரகு கட்டணம்

நீங்கள் மலிவு விலை தரகு நிறுவனங்கள் எனக் கருதும் பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தத் தரகு கட்டணம் மிகக் குறைந்த செலவாகக் கருதப்படும். ஆனால் முதலீட்டாளரைப் பொருத்த வரை இது மிகப் பெரிய விஷயம். எனவே, நாங்கள் உங்களுக்கு உதவும் பொருட்டு இந்தக் கட்டுரையைக் கொடுத்துள்ளோம். உங்களுக்கான தரகு நிறுவனத்தைப் பற்றி முடிவெடுக்கும் முன்னர் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தரகு நிறுவனப் பட்டியலை ஒரு முறை படித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையில் தேசிய பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தரகு நிறுவனங்களின் தரகு கட்டணம், பரிவர்த்தனைக் கட்டணம் ஆகிய இரண்டும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் படித்த பின்னர் உங்களுக்கான தரகு நிறுவனத்தை முடிவு செய்யுங்கள்.

1) ப்ரோஸ்டாக்ஸ்

1) ப்ரோஸ்டாக்ஸ்

இந்த நிறுவனம் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு வர்த்தகத்திற்கு ரூ ரூ15 ஐ தரகு கட்டணமாக வசூலிக்கின்றது. இங்கே வரம்பற்ற வர்த்தகத்திற்கு, பங்குகளுக்கு ரூ 899ம், நாணயங்கள் மீதான வர்த்தகத்திற்கு ரூ 499ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை ப்ரோஸ்டாக்ஸ் நிறுவனம் பல்வேறு வகையான திட்டங்களைத் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்குகின்றது. அதாவது பங்கு டெலிவரிக்கு ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ 325 / கோடி யும், பூயூச்சர் வர்த்தகத்திற்கு ரூ 190 / கோடியும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஆப்ஷனுக்கு ரூ 5000 / கோடி, நாணய ப்யூச்சருக்கு ரூ. 100 / கோடி , நாணய ஆப்சனுக்கு ரூ .4000 / கோடி போன்ற பல்வேறு திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

2) சேரோதா

2) சேரோதா

இந்தத் தரகு நிறுவனத்தின் மிக முக்கியமான அம்சம் கட்டணமற்ற பங்கு வர்த்தகத் திட்டம் ஆகும். அதாவது பங்கு டெலிவரிக்கு இந்த நிறுவனம் கட்டணத்தை வசூலிப்பதில்லை. இந்த நிறுவனம் இன்ட்ராடே வர்த்தகம், ப்யூச்சர் மற்றும் ஆப்சன், கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ 20 அல்லது 0.01% ஆகிய இரண்டில் எது குறைவோ அதைக் கட்டணமாக வசூலிக்கின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 325 / கோடியும், ப்யூகச்சருக்கு ரூ 210/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 5500/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 135 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

3) அப்ஸ்டாக்ஸ்

3) அப்ஸ்டாக்ஸ்

இந்த நிறுவனமும் இலவச பங்கு பரிவர்த்தனையை வாடிக்கையாளருக்கு வழங்குகின்றது. இந்த நிறுவனம் இன்ட்ராடே வர்த்தகம், ப்யூச்சர் மற்றும் ஆப்சன், கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ 20 அல்லது 0.01% ஆகிய இரண்டில் எது குறைவோ அதைக் கட்டணமாக வசூலிக்கின்றது. சந்தையில் உள்ள மிகக் குறைந்த கட்டணங்களில் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 325 / கோடியும், ப்யூச்சருக்கு ரூ 210/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 5500/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 150 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

4) எஸ்ஏஎஸ்

4) எஸ்ஏஎஸ்

இது ஒரு ஆன்லைன் தரகு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஈக்விட்டி டெலிவரி, இன்டராடே, எஃப் & ஓ, கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ. 9 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. வரம்பற்ற வர்த்தகத்தைப் பொருத்தவரை கமாடிட்டி வர்த்தகத்திற்கு மாதத்திற்கு ரூ 999ம், ரொக்க பங்கு பரிவர்த்தனை மற்றும் எப் & ஓ விற்க்கு மாதத்திற்கு ரு 999ம், கமாடிட்டி வர்த்தகத்திற்கு மாதத்திற்கு ரூ / ரூ 499 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. எனவே பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் நபருக்கு இந்த நிறுவனம் ஒரு சிறந்த வாய்ப்பளிக்கின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஆன்லைன் பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 325 / கோடியும், ப்யூச்சருக்கு ரூ 250/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 6500/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 165 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

5) ட்ரேட்ஸ்மார்ட்

5) ட்ரேட்ஸ்மார்ட்

இதுவும் ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஈக்விட்டி டெலிவரி, இன்டராடே, எஃப் & ஓ, கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ. 15 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. வரம்பற்ற வர்த்தகத்தைப் பொருத்தவரை கமாடிட்டி வர்த்தகத்திற்கு மாதத்திற்கு ரூ 1899ம், ரொக்க பங்கு பரிவர்த்தனை மற்றும் எப் & ஓ விற்க்கு மாதத்திற்கு ரு 1899ம், நாணய வர்த்தகத்திற்கு ரூ 999 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஆன்லைன் பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 350 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 350 / கோடியும், ப்யூச்சருக்கு ரூ 240/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 7150/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 165 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

தீர்மானம்

தீர்மானம்

குறைந்த கட்டண தரகு நிறுவனங்களைப் பொருத்த வரை, கணக்குத் திறப்பு, வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே இத்தகைய தரகு நிறுனங்களைப் பொருத்த வரை உங்கள் வீட்டு வாசலில் உங்களுக்கான சேவையை அளிப்பார்கள் என் எதிர்பார்க்காதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Cheap Low Cost stock Brokers In India

Best Cheap Low Cost stock Brokers In India - Tamil Goodreturns | இந்தியாவில் சிறந்த மற்றும் மலிவான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, April 15, 2018, 12:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X