குறைவான வட்டியில் பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட் ஆப்சன்.. இதோ முழு விவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன்கள் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஏனெனில் தனிநபர் கடன்கள் என்பது மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் என்று ஆயிரக்கணக்கான மொபைல் ஆப்கள், இணைய சேவைகள் மூலமாக தனிநபர் கடன்களை, மிக எளிதாகப் பெற்று கொள்ளலாம், இது அவசர தேவைக்கு உதவும் ஆபத்பாந்தவனாக உள்ளது.

எது சிறந்தது.. எங்கு வட்டி அதிகம்.. வங்கியா.. அஞ்சலகமா..! எது சிறந்தது.. எங்கு வட்டி அதிகம்.. வங்கியா.. அஞ்சலகமா..!

இதே வீட்டுக் கடன், அடமான கடன் என அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தனிநபர் கடனை சிறந்த கடனாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் வீட்டுக்கு கடனுடன் ஒப்பிடும்போது, தனிநபர் கடனில் ஆவணங்கள் மிக குறைவாக. ஆக தனிநபர் கடன் என்பது எளிதாக பெறக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சமான கிரெடிட் ஸ்கோர்

முக்கிய அம்சமான கிரெடிட் ஸ்கோர்

ஏனெனில் வீட்டுக் கடனுக்கு பட்டா சிட்டா என பல ஆவணங்கள் தேவைப்படும். ஆனால் தனிநபர் கடன்களுக்கு அத்தகைய ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. மாறாக கடன் வாங்குபவரின் வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட், பே சர்டிபிகேட் இருந்தாலே போதுமானது. அதோடு தனிநபர் கடன்களுக்கு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது கிரெடிட் ஸ்கோர்.

உடனடியாக கடன் பெறலாம்

உடனடியாக கடன் பெறலாம்

கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆக நல்ல கிரெடிட் ஸ்கோர் தான் தனிநபர் கடன் வாங்க ஒரு எளிய வழி எனலாம். அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படி மேலே போய், உடனடியாக கடன் வழங்கும் மொபைல் ஆப்கள், இணைய சேவைகளை என பல உள்ளன.

வட்டி விகித நிலவரம்

வட்டி விகித நிலவரம்

இன்றைய காலகட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் தனிநபர் கடன்கள் வழங்க மிக ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக உடனடியாக கடன் வழங்கும் சேவையை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக இணையத்தின் மூலமாகவும் இந்த சலுகைகளை உடனடியாக ஆதார் கார்டு அப்டேட் செய்தும் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் வந்துவிட்டன. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் தோராயமாக 8.9% முதல் 24% வரை உள்ளன. இது நீங்கள் வாங்கும் கடன், கிரெடிட் ஸ்கோர், தேவை என்ன என்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது.

எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்?

எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்?

பொதுவாக தனிநபர் கடன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேலாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது. குறைவாக இருப்பவர்களுக்கும் உடனடியாக கடன் கிடைக்கிறது. ஆனால் வட்டி விகிதம் அதிகம். அதெல்லாம் சரி எனக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டும். எந்த வங்கியில் வட்டி குறைவு? உதாரணத்திற்கு நான் 5 லட்சம் கடன் வாங்குகிறேன் எனில் எவ்வளவு மாத தவணையாக செலுத்த வேண்டும். எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவு? எங்கு வாங்கினால் செலவு மிச்சம் என்று பல விஷயங்களை நாம் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.

வட்டி விகிதம் எங்கு குறைவு?

வட்டி விகிதம் எங்கு குறைவு?

ரூ 5 லட்சம் ரூபாய்க்கு, 5 வருட கால அவகாசத்தில் வட்டி விகிதம், மாத தவணை தொகை எவ்வளவு?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் - வருடத்திற்கு வட்டி விகிதம் 8.70% - தவணை தொகை - ரூ.10,307
யூனியன் வங்கியில் வட்டி விகிதம் - வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% - தவணை தொகை ரூ.10,355
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா - வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% - தவணை தொகை ரூ.10,355

Array

Array

இந்தியன் வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 9.05% - தவணை தொகை ரூ.10,391

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 9.50% - தவணை தொகை ரூ.10,501
ஐடிபிஐ வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 9.50% - தவணை தொகை ரூ.10,501

பாங்க் ஆப் மகாராஷ்டிரா Vs எஸ்பிஐ Vs பாங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆப் மகாராஷ்டிரா Vs எஸ்பிஐ Vs பாங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆப் மகாராஷ்டிரா - வருடத்திற்கு வட்டி விகிதம் - 9.55% - தவணை தொகை ரூ.10,513

எஸ்பிஐ - வருடத்திற்கு வட்டி விகிதம் - 9.60% - தவணை தொகை ரூ.10,525
பாங்க் ஆஃப் பரோடா - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.00% - தவணை தொகை ரூ.10,624

யூகோ வங்கி Vs சவுத் இந்தியன் பேங்க் Vs ஃபெடரல் பேங்க்

யூகோ வங்கி Vs சவுத் இந்தியன் பேங்க் Vs ஃபெடரல் பேங்க்

யூகோ வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.05% - தவணை தொகை ரூ.10,636

சவுத் இந்தியன் பேங்க் - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.25% - தவணை தொகை ரூ.10,685
ஃபெடரல் பேங்க் - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.49% - தவணை தொகை ரூ.10,744

ஐசிஐசிஐ வங்கி Vs கோடக் மஹிந்திரா வங்கி Vs எச்டிஎஃப்சி வங்கி

ஐசிஐசிஐ வங்கி Vs கோடக் மஹிந்திரா வங்கி Vs எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.50% - தவணை தொகை ரூ.10,747

ஐசிஐசிஐ வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.50% - தவணை தொகை ரூ.10,747
கோடக் மஹிந்திரா வங்கி வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.75% - தவணை தொகை ரூ.10,809

ஐஓபி Vs இந்தஸிந்த் வங்கி Vs கனரா வங்கி

ஐஓபி Vs இந்தஸிந்த் வங்கி Vs கனரா வங்கி

ஐஓபி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 10.80% - தவணை தொகை ரூ.10,821

இந்தஸிந்த் வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 11.00% - தவணை தொகை ரூ.10,871
கனரா வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 11.25% - தவணை தொகை ரூ.10,934

பாங்க் ஆப் இந்தியா Vs தனலட்சுமி வங்கி Vs ஆக்ஸிஸ் வங்கி

பாங்க் ஆப் இந்தியா Vs தனலட்சுமி வங்கி Vs ஆக்ஸிஸ் வங்கி

பாங்க் ஆப் இந்தியா - வருடத்திற்கு வட்டி விகிதம் - 11.35% - தவணை தொகை ரூ.10,959

தனலட்சுமி வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 11.90% - தவணை தொகை ரூ.11,097
ஆக்ஸிஸ் வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 12.00% - தவணை தொகை ரூ.11,122

கரூர் வைஸ்யா வங்கி Vs ஐடிஎஃப்சி Vs கர்நாடகா வங்கி Vs யெஸ் பேங்க்

கரூர் வைஸ்யா வங்கி Vs ஐடிஎஃப்சி Vs கர்நாடகா வங்கி Vs யெஸ் பேங்க்

கரூர் வைஸ்யா வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 12.00% - தவணை தொகை ரூ.11,122

ஐடிஎஃப்சி வங்கி - வருடத்திற்கு வட்டி விகிதம் - 12.00% - தவணை தொகை ரூ.11,122
கர்நாடகா வங்கி - - வருடத்திற்கு வட்டி விகிதம் - 12.45% - தவணை தொகை ரூ.11,236
யெஸ் பேங்க் - வருடத்திற்கு வட்டி விகிதம் - 13.99% - தவணை தொகை ரூ.11,632

***மேற்கண்ட இந்த வட்டி விகிதம் பேங்க் பஜார் தளத்தில் செப்டம்பர் 24 நிலவரப்படி எடுக்கப்பட்டது. மேற்கண்ட வட்டி விகிதம் என்பது உங்களது கிரெடிட் ஸ்கோரினை பொறுத்து மாறுபடலாம். அதோடு மேற்கண்ட தவணை தொகையோ, மற்ற கட்டணங்கள் சேர்க்கப்படும்போது இது இன்னும் அதிகரிக்கலாம். இது தோராயமாக கொடுக்கப்பட்ட தொகையே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Check out top 15 banks offering the lowest interest rates: which bank is best for personal loan

Banks latest updates.. Personal loans are a best loan option as there is no requirement for collateral, funds can be used for any purpose and loan disbursal soon
Story first published: Sunday, September 26, 2021, 16:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X