வீட்டுக் கடன் வாங்குவதில் புதிய சிக்கல்! தவிக்கும் சம்பளதாரர்கள் & பில்டர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்..? ஒரு சராசரி நடுத்தர குடும்பத்துக்கு, இரண்டுமே இரண்டு பெரிய இமய மலைகள் தான்.

 

ஒரு சராசரி குடும்பத்தில், மாதம் 30,000 சம்பாதிக்கும் ஒரு நபர் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் என்ன ஆகும்.

முதலில் நடுத்தர குடும்பம் என்றாலே, எப்போதுமே கையில் ஒரு சில ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்காதே.

வங்கி தான் ஒரே வழி

வங்கி தான் ஒரே வழி

அதையும் தாண்டி அடித்துப் பிடித்து, நகை நட்டுக்களை எல்லாம் அடமானம் வைத்து, கையில் ஓரளவுக்கு பணத்தை திரட்டி விடலாம். அது வீட்டின் மொத்த விலையில் 10 - 20 சதவிகிதம் தேறினால் பெரிய விஷயம். மீதி பணத்துக்கு வங்கிகளிடம் தான் உதவி கேட்டு போக வேண்டும். அதற்கு பல மாதங்கள் அலைந்து திரிந்து, பல டாக்குமெண்ட்களை வாங்கிக் கொடுத்த பின் தான், வீட்டுக் கடன் ஓகே ஆகும். அப்படி அலைந்து திரிந்து வாங்கிய கடன்களுக்கான பணம் (Disburse) கிடைப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

லாக் டவுன் பிரச்சனை

லாக் டவுன் பிரச்சனை

கடந்த மார்ச் 2020 வரை, வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு, கொரோனாவுக்கு முந்தைய சம்பளத்தை தான் அடிப்படையாகக் கொண்டு வீட்டுக் கடன் கொடுத்து இருப்பார்கள். ஆனால் இந்த கொரோனா லாக் டவுன் கலத்திலோ, ஏகப்பட்ட பேருக்கு சம்பள குறைப்பு, வேலை இழப்பு, பதவி இறக்கம் என சரமாரியாக நிதிப் பிரச்சனைகள் எழுந்து இருக்கின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்துவது
 

கடனைத் திருப்பிச் செலுத்துவது

வங்கிகள், தாங்கள் கடன் கொடுத்திருக்கும் அல்லது கொடுக்கப் போகும் நபர், வீட்டுக் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தக் கூடியவர் தானா..? கொரோனா லாக் டவுன் காலத்திலும் அவர் சம்பளம் அல்லது வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா..? என சரி பார்த்துக் கொண்டு அதன் பிறகு வீட்டுக் கடனைக் கொடுக்க விரும்புகிறது. எனவே நிறைய வங்கிகள், வீட்டுக் கடன் பணத்தைக் disburse செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது.

Home Loan Disbursement என்றால் என்ன

Home Loan Disbursement என்றால் என்ன

பொதுவாக, ஒருவர் வீட்டுக் கடன் வாங்கினால், வங்கி, வீட்டுக் கடன் வாங்கியவருக்கு நேரடியாக கடன் பணத்தைக் கொடுக்காது. மாறாக, வீட்டுக் கடன் வாங்கியவர், வாங்க இருப்பதாகச் சொன்ன வீட்டைக் கட்டும் பில்டருக்கு தான் வீட்டுக் கடன் பணத்தை பல தவணைகளாகக் கொடுப்பார்கள். சுருக்கமாக, வங்கியிடம் இருந்து, வீட்டுக் கடன் பணம், பில்டர்களுக்கு நேரடியாக சென்று சேரும். அந்த பில்டர்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டைக் கட்டி முடித்துவிடுவார்கள். இது தான் Home Loan Disbursement . இப்போது வங்கிக் கடன் பணம் பில்டர்களுக்கு கொடுப்பதில் தான் சிக்கல் எழுந்து இருக்கிறது.

Disbursement நிறுத்தம்

Disbursement நிறுத்தம்

சமீபத்தில் வீட்டுக் கடன் அப்ரூவல் வாங்கி இருப்பவர்கள் & இன்னும் வீட்டுக் கடனில் ஒரு கணிசமான பகுதி கடன் தொகை கொடுக்கப்படாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை தனியாகப் பிரித்து எடுத்து, அவர்களின் சம்பளக் கணக்கு அல்லது வருமான விவரங்களைச் சமர்பிக்கச் சொல்லி இருக்கிறார்கள் சில வங்கிகள். ஒரு தனியார் வங்கி, EMI Moratorium கேட்டு இருக்கும் வாடிக்கையாளர்களின் கடன்களை மேற்கொண்டு disburse செய்யாமல் நிறுத்தி வைப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது. இவைகளை ஒரு உதாரணத்துடன் பார்த்துவிடுவோமே..!

உதாரணம் - கடன் disburse ஆகவில்லை

உதாரணம் - கடன் disburse ஆகவில்லை

ரவிக்கு ஒரு வங்கியில், மார்ச் 2020-ல் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் அப்ரூவ் செய்துவிட்டார்கள். ஆனால் இப்போது ரவிக்கு அப்ரூவ் ஆன கடனைக் கொடுக்காமல், ரவியின் சம்பளம் மற்றும் வருமான விவரங்களை மீண்டும் கேட்பார்கள். ரவிக்கு கொரோனா காலத்திலும் வருமானம் பாதிக்கப்படவில்லை என்றால் அப்ரூவ் செய்த கடனை வழங்குவார்கள் இல்லை என்றால், கடனை ரத்து செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

உதாரணம் - பகுதி கடன் disburse ஆக வேண்டும்

உதாரணம் - பகுதி கடன் disburse ஆக வேண்டும்

ராம்-க்கு ஒரு வங்கியில் அக்டோபர் 2019-ல் 50 லட்சம் ரூபாய் கடன் அப்ரூவ் செய்துவிட்டார்கள். நவம்பர் 2019-ல் 10 லட்சம் ரூபாய், ஜனவரி 2020-ல் 8 லட்சம் ரூபாய் என கடன் தொகை வழங்கி (Disburse) இருக்கிறது வங்கி. ஏப்ரல் 2020 & ஜூன் 2020 மாதத்தில் அடுத்தடுத்த தவணைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், மேற்கொண்டு ராமின் வீட்டுக் கடனில் இருந்து, பில்டர்களுக்கு பணம் வழங்காமல், ராமின் நிதி நிலையை நிரூபிக்கும் விதத்தில் சம்பள விவரங்கள் அல்லது வருமான விவரங்களை கேட்பார்கள் வங்கிகள்.

உதாரணம் - EMI moratorium

உதாரணம் - EMI moratorium

ராஜ் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அவர் செலுத்த வேண்டிய EMI தவணைகளை, ஒத்திவைக்க முடியும். அப்படி தவணைகளை ஒத்திவைக்கச் சொல்லி இருந்தால், அவருக்கான வீட்டுக் கடன் பணம், மேற்கொண்டு disburse செய்யாமல் நிறுத்தி வைத்து விடுவார்கள். தவணை ஒத்திவைப்பு காலம் முடிந்த பின், ராஜின் வருமானங்களை மறு மதிப்பீடு செய்வார்களாம். இப்படி, ஒரு தனியார் வங்கி தன் வாடிக்கையாளர்களிடம் செய்வதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இனி இந்த தனியார் வங்கியைப் பார்த்து எந்த வங்கிகள் எல்லாம் பின்பற்றப் போகிறதோ தெரியவில்லை. அப்படி பின்பற்றத் தொடங்கினால் EMI ஒத்தி வைத்தவர்கள், வீட்டு கடன் வாங்குவதில் சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

வங்கிகள் தரப்பு

வங்கிகள் தரப்பு

ஒவ்வொரு முறையும், வீட்டுக் கடன் தொகையில் இருந்து, பணத்தை பில்டர்களுக்கு வழங்கும் போதும் (Disburse), கடன் வாங்குபவர், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்துவாரா என வங்கி மதிப்பீடு செய்ய வேண்டி இருக்கிறது. இது சாதாரண விஷயம் தான் என வங்கி தரப்பில் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் என்ன எல்லாம் சொல்லி, கடனை நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Have you asked for EMI moratorium You may face problem in Home loan disbursement

The EMI moratorium asked bank loan customers may face further loan disbursement problems, Now a private bank has stopped further loan disbursement who asked for emi moratorium.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X