மாதம் ரூ.10,000 போதும்.. நீங்கள் கோடீஸ்வரராக முடியும்.. எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பணவீக்கத்தினை தாண்டி லாபம் பெரும் திட்டங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர்.

எனினும் பலருக்கும் எதில் முதலீடு செய்வது என்பது முழுமையாக தெரிவதில்லை.

அப்படியே முதலீடு செய்தாலும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்குமா? செய்யும் முதலீடு பாதுகாப்பானதா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. பொதுவாக நீண்டகால நோக்கில் எது சரியானது? வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா? ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்இந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா? ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்

ஆதித்யா பிர்லா சன் லைஃப் சேவிங்க்ஸ் பண்ட்

ஆதித்யா பிர்லா சன் லைஃப் சேவிங்க்ஸ் பண்ட்

பொதுவாக நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்பஸினை உருவாக்க மியூச்சுவல் ஃபண்ட்கள் தான் சரியான ஆப்சன் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது மியூச்சுவல் ஃபண்டினை பற்றித் தான். ஆதித்யா பிர்லா சன் லைஃப் சேவிங்ஸ் ஃபண்டானது ஓபன் எண்டட் திட்டமாகும். இது ஈக்விட்டி, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு பண்டாகும். இது ஒரு ஹைபிரிட் ஃபண்ட் ஆகும். ஆக சம்பளதாரர்கள் உங்கள் முதலீட்டினை பிரித்து முதலீடு செய்ய நினைப்பவர்கள் இதில் செய்யலாம்

ஹைபிரிட் பண்ட்

ஹைபிரிட் பண்ட்

இந்த ஃபண்டின் மூலம் பங்கு சந்தை, கடன் சந்தை, மணி மார்கெட் உள்ளிட்ட பல திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இதில் ஏற்ற இறக்கம் என்பது குறைவாக இருக்கும். கணிசமான வருபாயும் கிடைக்கும். இந்த பண்ட் நவம்பர் 28, 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது விரைவில் 8 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. அதன் அறிமுகத்தில் இருந்து 7.21% CAGR-ஐ உருவாக்கியுள்ளது.

ரேட்டிங்ஸ் எவ்வளவு?

ரேட்டிங்ஸ் எவ்வளவு?

இந்த பண்டிற்கு மார்னிங் ஸ்டார் நிறுவனம் 2 ஸ்டார்களை கொடுத்துள்ளது. இந்த பண்ட் 7.24% வருமானத்தினை கொடுத்துள்ளது. இந்த பண்ட் அறிமுகம் செய்யும் போது 10,000 ரூபாய் ரொக்கத்தினை முதலீடு செய்திருந்தோமானால், அது சுமார் 17,000 ரூபாயாக அதிகரித்திருக்கும். இது கடந்த 5 ஆண்டுகளில் 5.84% வருவாயினை கொடுத்துள்ளது. 10,000 ரூபாய் முதலீடு என்பது 13,000 ரூபாயாக அதிகரித்திருக்கலாம்.

எஸ் ஐ பி முதலீடு

எஸ் ஐ பி முதலீடு

இதே கடந்த 3 ஆண்டுகளில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார், 12,000 ரூபாயாகும். இதே கடந்த 1 ஆண்டில் -1.02% ஆக உள்ளது.

இதே இந்த பண்ட் தொடங்கப்பட்டதில் இருந்து, 7.21% வருமானம் கொடுத்திருந்தால், எஸ் ஐ பி மூலம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், உங்களின் முதலீடு 9.6 லட்சம் ரூபாயாகவும், கார்பஸ் 12.88 லட்சம் ரூபாயாகவும் அதிகரித்திருக்கும்.

இப்படி தான் இருக்கணும்?

இப்படி தான் இருக்கணும்?

பொதுவாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது என்பது எளிதான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், எந்த பண்டுகளை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பமே இருக்கிறது.

உதாரணத்திற்கு நீங்கள் தேர்வு செய்யும் பண்ட் பணவீக்கத்தினை தாண்டி லாபம் கொடுக்க கூடியதாக இருக்கணும். முதலில் உங்களின் இலக்கு என்ன? அதனை எத்தனை ஆண்டுகளில் அடைய வேண்டும். அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றையும் திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.

அடிக்கடி செக் செய்ய வேண்டும்

அடிக்கடி செக் செய்ய வேண்டும்

முதலீடு செய்துவிட்டோம். அப்பாடா நம் கடமை முடிந்து விட்டது என்பதோடு இருந்து விட கூடாது. அடிக்கடி நீங்கள் நினைத்தது போல இருக்கிறதா? இல்லை சரிவரவில்லை எனில் உங்கள் போர்ட்போலியோவினை மாற்றி அமைக்க வேண்டியதும் உங்கள் கடமை தான். அப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் இலக்கினை எளிதில் அடைய முடியும்.

கார்பஸ் இலக்கு

கார்பஸ் இலக்கு

உதாரணத்திற்கு 20 வருடங்கள் கழித்து எனக்கு 1 கோடி ரூபாய் கார்பஸ் வேண்டும். இது எனது மகனின் திருமணம் வீட்டிற்கான செய்யப்பட வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என வைத்துக் கொள்வோம்.

ரூ.1 கோடி இலக்கு

ரூ.1 கோடி இலக்கு

20 வருடங்கள் கழித்து உங்களுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் கார்பஸ் வேண்டுமெனில் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உங்களின் வருமான எதிர்பார்ப்பு 15% என வைத்துக் கொள்வோம். 20 ஆண்டுகள் இதனை தொடரும்போது, 24 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களின் கார்பஸ் சுமார் 1.5 கோடி ரூபாயாகும். குறைவான வருமானம் என வைத்துக் கொண்டால் உங்கள் முதலீட்டினை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much will you get after 20 years if you invest Rs 10,000 per month in SIP? 15% average return?

If you want a corpus of more than Rs.1 crore after 20 years through SIP, you will need to invest Rs 10,000 per month
Story first published: Friday, November 18, 2022, 21:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X