ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் முழுமையாக நிலைமை மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது.

 

அதிலும் இந்த இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு மத்தியில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாரும் உறுதியாக சொல்லிவிடவும் முடியாது.

முதல் கட்ட பரவலின்போது முதியோர்களை அதிகம் தாக்கிய கொரோனா, இரண்டாம் கட்ட பரவலில் பாகுபாடின்றி அனைவரையும் வாட்டி வதைத்து வருகின்றது. பலி எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

எல்லாவற்றுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கொரோனா நோயாளிகளின் படங்கள், வீடியோக்களை பார்க்கும்போதும் மனம் நெருடுகிறது. இப்படியான நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தான் மனதில் தோன்றுகின்றது. ஆனால் இன்று இருக்கும் காலகட்டத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல், பாரபட்சம் இல்லாமல் மக்களிடையே மிக எளிதாக, விரைவில் பரவி வருகின்றது.

சிறந்த வழி இது தான்

சிறந்த வழி இது தான்

மருத்துமனைகளும் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இன்மை என பல மோசமான நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துமனைகளுக்கு செல்லாம் என்றால், கட்டண செலவினை யோசிக்கும்போது பலரும் பின் தங்கி விடுகின்றனர். ஆனால் அப்படியானவர்களுக்கு ஒரு சிறந்த ஆப்சன் உண்டு எனில் அது மெடிக்கல் இன்சூரன்ஸ் தான்.

கவனிக்க வேண்டிய காத்திருப்பு காலம்
 

கவனிக்க வேண்டிய காத்திருப்பு காலம்

எனினும் அப்படி மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கும் முன்பு, சில விஷயங்களை கவனித்து, பின் எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது காத்திருப்பு காலம் தான். நீங்கள் எடுக்கும் மருத்துவ காப்பீட்டில் தொகையை பகுதியாகவோ அல்லது முழுத் தொகையாகவோ க்ளைம் செய்து வாங்குவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும்.

பாலிசி எடுக்கும் முன்பே திட்டமிட வேண்டும்

பாலிசி எடுக்கும் முன்பே திட்டமிட வேண்டும்

இது சில திட்டங்களில் 7 நாள் முதல் 30 நாள் வரை கூட ஆகலாம். ஆக காத்திருப்பு காலம் குறைவாக இருக்கும் பாலிசிகளை பார்த்து வாங்கலாம். இதனை உங்களது தேவையை பொறுத்து முன் கூட்டியே திட்டமிட்டு வாங்கலாம். பொதுவாக மருத்துவ காப்பீடு எடுக்கும்போது இதனை குறைவாக இருக்கும் காலமாக பார்த்துக் கொள்ளலாம்.

மருத்துவ உபகரணங்களுக்கு காப்பீடு உண்டா?

மருத்துவ உபகரணங்களுக்கு காப்பீடு உண்டா?

பொதுவாக மருத்துவமனைகளில் இருக்கும்போது கையில் அணிந்திருக்கும் கையுறைகள், பிபிஇ கிட், இது தவிர மற்ற மருத்துவ உபகரணங்கள் என பலவும் இதில் அடங்கும். பெரும்பாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதுபோன்ற செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆக பாலிசி எடுக்கும்போதே இதனை தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பாலிசியும், மற்ற நிறுவனத்தின் பாலிசியோடு ஒப்பிட்டு எது சிறந்ததோ அதனை எடுக்கும் வசதிகள் பல உண்டு. ஆக பலவற்றையும் ஒப்பிட்டு பின் வாங்கலாம்.

வீட்டில் இருந்தே சிகிச்சை

வீட்டில் இருந்தே சிகிச்சை

தற்போது கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் பலரும் மருத்துவ மனைகளை நோக்கில் செல்வதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இன்னும் சிலருக்கு லேசான அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கும் வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆக இதற்கான செலவினங்களும் உங்கள் பாலிசியில் கவர் செய்ய முடியுமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

பேமிலிஃபுளேட்டர் பாலிசி

பேமிலிஃபுளேட்டர் பாலிசி

உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து பாலிசி கவர் ஆகுமா? அப்படி இல்லையெனில் பேமிலிஃபுளேட்டர் பாலிசிகளை தேர்தெடுக்கலாம். இதில் உங்களது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இதில் பாலிசி தொகை சற்று அதிகமானதாக இருக்கும். அதனையும் கவனத்தில் கொண்டு எடுக்க வேண்டும்.

65 வயதுக்குள் இருந்தால்?

65 வயதுக்குள் இருந்தால்?

ஆன்லைனில் பாலிசி எடுக்க வேண்டுமெனில் உங்களுக்கு 65 வயதுக்கு கீழாக இருந்தால், எவ்வித நோய் பாதிப்பும் இல்லையெனில், உங்களுக்கு எந்தவித மருத்துவ சோதனையும் இன்றி பாலிசி எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும் பாலிசியானது உடனடியாக நடைமுறைக்கு வந்து விடும். அப்படியில்லாவிட்டால் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில் சில நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கேட்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important things to look at while buying a health insurance policy?

Insurance latest updates.. Important things to look at while buying a health insurance policy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X