ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது, வங்கிகளை போன்றே சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்கி வருகின்றது.

எனினும் இங்கு இதுவரையில் வங்கிகளோடு ஒப்பிடும்போது கட்டணங்கள் என்பது மிக குறைவாகவே இருந்து வருகின்றது.

இங்கு வங்கிகளை போன்றே பணப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவைகள் என பலவற்றையும் வழங்குகிறது.

இந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் எலான் மஸ்க்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!இந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் எலான் மஸ்க்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

ஜீரோ பேலன்ஸ் இருப்பு

ஜீரோ பேலன்ஸ் இருப்பு

இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி மூன்று வகையான கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. மூன்று வகையான கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

கட்டணம் அதிகரிப்பு

கட்டணம் அதிகரிப்பு

இப்படி பல வகையிலும் கட்டணங்கள் குறைவாக இருந்து வரும் நிலையில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சில சேவைகளுக்கு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் அதிகரிப்பானது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

Array

Array

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது கேஸ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணமாக 20 ரூபாயும், அதோடு ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள்

மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள்

மொபைல் வாடிக்கையாளர்களில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் இதன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கட்டணமாக 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மொபைல் பில்களுக்கு மட்டும் அல்ல, மற்ற ஒவ்வொரு கட்டணங்களுக்கும், 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ்

டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ்

போஸ்ட்பேமெண்ட் வங்கியின் டோர்ஸ்டெப் பேங்கிங் சேவைக்கு (Doorstep Banking Charges) முன்னதாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு முறை சேவைக்காக அழைக்கும்போதும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள்

பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள்

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது அதன் சேவையில் இருந்து சுகன்யா சம்ரிதி கணக்கு (Sukanya Samriddhi Account), பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (Public Provident Fund ), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit Account), தொடர் வைப்பு நிதிக்கு எதிரான கடன் (Loan Against Recurring Deposit) உள்ளிட்ட பல சேவைகளுக்கும் பணம் செலுத்தும்போது 20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள்

ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள்

வாடிக்கையாளர்கள் IPPB கணக்கிற்குள் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்க படும். ஒரு வேளை பணம் மற்ற வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி DSB கட்டணமும் வசூலிக்கப்படும்.

கியூ.ஆர் கோட்டினை மீண்டும் (QR code) வழங்க 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். யுபிஐ சேவைக்கும் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPPB charges changing from august 1,2021; check details

Post office updates.. IPPB charges changing from august 1,2021; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X