மாதம் ரூ.10,000 முதலீடு.. 3 ஆண்டில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோரும் பாதுகாப்பான ரிஸ்க் குறைவான முதலீடு மூலம் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் எதில் முதலீடு செய்வது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்குமா? என்றால் தெரிவதில்லை.

 

இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு ஆலோசகர்கள் முதலீடு என்றாலே மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக எஸ்ஐபி முதலீட்டினையே பரிந்துரை செய்கின்றனர்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது மாதம் 10000 ரூபாயினை முதலீடு செய்வதன் மூலம், 3 வருடம் கழித்து 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா? எதில் முதலீடு செய்யலாம்? முதலீட்டு ஆலோசகர்களின் கணிப்பு என்ன?

எல்ஐசி முதலீடு செய்த முத்தான 40 பங்குகள்.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

என்ன ஃபண்ட்?

என்ன ஃபண்ட்?

ஐடிபிஐ டிவிடெண்ட் யீல்டு ஃபண்டு - ( IDBI Dividend Yield Fund - Direct Plan-Growth)- இந்த ஃபண்டானது கடந்த ஓராண்டில் 12.90 சதவீதம் வருவாயினை கொடுத்துள்ளது. இதே கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஃபண்டானது 26.35 சதவீதமாக வருவாயினை கொடுத்துள்ளது. இதே 3 வருடத்தில் 25 சதவீதத்திற்கும் மேலாக லாபம் கொடுத்துள்ளது.

 எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

முதலீட்டாளர் மாதம் 10,000 ரூபாயினை எஸ்ஐபி- மூலம் முதலீடு செய்திருந்தால், ஒராண்டில் 1.27 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கலாம். இதே இரண்டு ஆண்டுகளில் 3.09 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கலாம். இதே 3 ஆண்டுகளில் ஐடிபிஐ டிவிடெண்ட் யீல்டு ஃபண்டில் 5.13 லட்சம் ரூபாயாக வருவாய் கிடைத்திருக்கலாம்.

 எதில் முதலீடு
 

எதில் முதலீடு

ஐடிபிஐ டிவிடெண்ட் யீல்டு ஃபண்டில் உள்ள மொத்த நிதியில் 98.53 சதவீதம் நிதியானது , இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 63.04 சதவீதம் லார்ஜ் கேப் பங்குகளிலும், 18.41 சதவீதம் மிட் கேப் பங்குகளிலும், 17.08 சதவீதம் பங்குகள் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.

ரூ,500 முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம்?

ரூ,500 முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம்?

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தமட்டில் சிறுசிறு முதலீடுகள் கூட, பெரியளவிலான கார்பஸ்களை எதிர்காலத்தில் உருவாக்கலாம். குறிப்பாக நீண்டகால முதலீடுகள் என்பது கோடிக் கணக்கில் பெரியளவிலான கார்பஸ்களை உருவாக்க பயன்படும்.

உதாரணத்திற்கு மாதம் 500 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். 30 வருடங்கள் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். 20% வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், 1,16,80,401 கோடி ரூபாய் கிடைத்திருக்கலாம். இதே 12% மட்டுமே வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால், 17,64,957 ரூபாய் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.10000 monthly SIP grows to Rs.5.13 lakhs in just 3 years: check details

Rs.10000 monthly SIP grows to Rs.5.13 lakhs in just 3 years: check details/மாதம் ரூ.10,000 முதலீடு.. 3 ஆண்டில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம்..!
Story first published: Saturday, April 23, 2022, 19:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X