வீட்டுக் கடன் வாங்குறீங்களா? SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்! ரெடியா இருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்பிஐ தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.40 % குறைத்து இருக்கிறார்கள்.

 

இதனால் எல்லா வகையான கடன்களுக்கான வட்டி விகிதங்களும் கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த ரெப்போ ரேட் வட்டி குறைப்பினால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எவ்வளவு குறையும்

எவ்வளவு குறையும்

ஆர்பிஐயின் ரெப்போ ரேட்டை அடிப்படையாகக் கொண்ட எஸ்பிஐ கடன் திட்டங்கள் ஒரு சிறந்த உதாரணம். ஆர்பிஐ எப்போது எல்லாம் வட்டியை குறைக்கிறார்களோ அப்போது எல்லாம், எஸ்பிஐயின் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் குறைந்துவிடும். இப்போது அப்படிப்பட்ட எஸ்பிஐ வீட்டுக் கடன் திட்டங்களில், குறைய இருக்கும் வட்டி விவரங்களைத் தான் பார்க்க இருக்கிறோம்.

திட்டங்கள்

திட்டங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பல்வேறு ஹோம் லோன் திட்டங்கள் இருக்கின்றன. அதில் டேர்ம் லோன் ஓரளவுக்கு நல்ல வட்டி விகிதத்துக்கு வீட்டுக் கடன் கொடுக்கிறார்கள். எனவே, நாம் எஸ்பிஐ டேர்ம் லோன் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்க இருக்கிறோம். மற்ற மேக்ஸ் கெயின் வட்டி விகிதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ரூ. 30 லட்சத்துக்குள் (சம்பளதாரர்களுக்கு மட்டும்)
 

ரூ. 30 லட்சத்துக்குள் (சம்பளதாரர்களுக்கு மட்டும்)

எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.35 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.35 = 7.40% வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். ஆர்பிஐ குறைத்த 0.40 ரெப்போ ரேட்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் இ பி ஆர் தானாக 7.05-ல் இருந்து 6.65-க்கு வந்து விடும். ஆக 7 % வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்கலாம்.

ரூ. 30 - 75 லட்சம் (சம்பளதாரர்களுக்கு மட்டும்)

ரூ. 30 - 75 லட்சம் (சம்பளதாரர்களுக்கு மட்டும்)

அதே போல, 30 - 75 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்குபவர்களுக்கு 0.60 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் இ பி ஆர் 7.05 + பிரிமியம் 0.60 = 7.65% வட்டிக்கு, 30 - 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். ஆர்பிஐயின் 0.4 % ரெப்போ ரேட் குறைப்பு நடைமுறைக்கு வந்தால் 7.25%-க்கு 30 - 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம்.

ரூ. 75 லட்சத்துக்கு மேல் (சம்பளதாரர்களுக்கு மட்டும்)

ரூ. 75 லட்சத்துக்கு மேல் (சம்பளதாரர்களுக்கு மட்டும்)

வங்கியின் இ பி ஆர் 7.05% + 0.70% வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக 7.75 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். ஆர்பிஐயின் 0.4 % வட்டி குறைப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால் 7.35%-மாக குறையலாம்.

சம்பளம் வாங்காதவர்கள்

சம்பளம் வாங்காதவர்கள்

சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்களைக் கணக்கிடுவார்கள். அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் வட்டி பிரீமியமாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் 0.15 % கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

பெண் வாடிக்கையாளர்கள்

பெண் வாடிக்கையாளர்கள்

பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஆனால் இந்த வசதி ஜாயிண்ட் கணக்குகளுக்கு உண்டா எனத் தெளிவுபடுத்தவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Home loan Interest rates may decrease due to RBI rate cut

The state bank of India home loan interest rates may decrease more due to repo rate cut announced by the reserve bank of India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X