அட செம திட்டம்.. பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு சுகன்யா சமிரிதி யோஜனா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் வருங்காலத்திற்காக கொஞ்சமேனும் சேமிக்க வேண்டும் என்றும் பலர் நினைப்பதுண்டு.

Recommended Video

Selvamagal Semippu Thittam New guidelines

ஆனால் இன்றும் பலரின் முதல் ஆப்சன் வங்கிகளில் டெபாசிட் செய்வது. ஆனால் அதனையும் தாண்டி குழந்தைகளுக்காக பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக அரசின் சில முதலீட்டு திட்டங்கள் உள்ளன.

அதில் இன்று நாம் பார்க்க இருப்பது சுகன்யா சமிர்தி யோஜனா திட்டம்.

பெண் குழந்தைகளுக்கான திட்டம்

பெண் குழந்தைகளுக்கான திட்டம்

இந்த திட்டம் பெற்றோர்களுக்கு தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இந்த திட்டம் திறக்கபட்ட நாளில் இருந்து 21 ஆண்டுகளுக்கு செயல்படும்.

வயது ஆதாரம் தேவை

வயது ஆதாரம் தேவை

இந்த திட்டத்தினை பெண் குழந்தைகள் மட்டுமே கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள். இந்த கணக்கினை துவங்க பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஒரு பெற்றோர் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கணக்குகளை துவங்கிக் கொள்ள முடியும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?
 

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகமும் சேமிப்பு வங்கி வேலையினை செய்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி விகிதம் அவ்வப்போது இந்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்படுகிறது.

வட்டி உண்டு

வட்டி உண்டு

பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும் போது இந்த திட்டமும் முதிர்ச்சியடைகிறது. நிலுவைத் தொகை மற்றும் கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்படும். இந்த கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் இந்த கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும்.

வரிச் சலுகை உண்டு

வரிச் சலுகை உண்டு


இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒரு வேளை 21 வயது பூர்த்தியாவதற்குள் திருமணம் முடிந்துவிட்டால் கணக்கு தானாகவே மூடப்படும்.

இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sukanya samriddi yojana scheme for girl babies

Best investment scheme for female child.. Sukanya samriddi yojana scheme for girl babies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X