என்னதான் உற்பத்தி பண்றீங்க? எண்ணெய்தான் உற்பத்தி பண்றோம்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய வர்த்தகமயமான உலகில் கச்சா எண்ணெய் உலகின் மிக முக்கிய வர்த்தகப் பொருளாக உள்ளது. புதிய எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிப்பு பல நாடுகளில் சூடுபிடித்துள்ளது என்பதோடு, மேலும் பல இருப்புக்களைக் கண்டறியும் முயற்சிகளும் அதிகரித்துள்ளது.

உலகை நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இன்றைய பொருளாதார உலகில் வலிமையுடன் திகழ்கிறது.

இந்த வகையில் அதிகம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பட்டியல் போட்டுள்ளது.

8. ஐக்கிய அரபு நாடுகள்

8. ஐக்கிய அரபு நாடுகள்

நாளொன்றுக்கு 27,94,000 பேரல்கள்
யுஏஈ மதிப்புமிக்க வர்த்தகச் சாத்தியமுள்ள எண்ணை வளங்கள் கண்டபிறகு பொருளாதாரத்தில் உயரிய நிலையை எட்டியுள்ள நாடுகளில் ஒன்று. தன்னுடைய மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகித அளவிற்கு இந்தக் கச்சா எண்ணை மற்றும் பெட்ரோலிய வருவாயை நம்பியுள்ளது.

7. குவைத்

7. குவைத்

நாளொன்றுக்கு 28,66,800 பேரல்கள்
இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகளைப் போலவே மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குவைத் நாடும் எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது. குவைத் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 60 சதவிகித அளவிற்குக் கச்சா எண்ணை உற்பத்தியை நம்பி உள்ளது என்பதோடு 95% சதவிகித ஏற்றுமதி இந்த எண்ணை மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கிறது.

6. ஈராக்

6. ஈராக்

நாளொன்றுக்கு 31,10,500 பேரல்கள்
அரசியல் பிரச்சனைகள் கடந்த பத்தாண்டாக ஈராக்கை பீடித்திருந்த போதும் அதன் எண்ணை உற்பத்தி அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக உயிர்ப்புடன் வைத்திருந்தது. ஈராக் எண்ணை ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (ஒபெக்) நிறுவன உறுப்பினர் ஆகும்.

5. ஈரான்

5. ஈரான்

நாளொன்றுக்கு 31,17,100 பேரல்கள்
மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் எண்ணைக் கிணறு ஈரான் நாட்டின் குஜெஸ்தான் மாகாணத்தில் 1908 ஆம் ஆண்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அண்டை நாடான ஈராக்கைப் போலவே ஈரானும் ஒபெக் அமைப்பின் நிறுவன உறுப்பினர்.

4. சீனா

4. சீனா

நாளொன்றுக்கு 41,94,600 பேரல்கள்
சீனாவின் எண்ணை மற்றும் பெட்ரோலியத் துறை அதன் பிற துறைகளைப் போலவே உலகின் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. உதாரணமாக 2013 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகில் முன்னணி எண்ணை உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலில் இணைந்தது. இந்த ஆசிய நாடு அண்மையில் பெட்ரோய இறக்குமதியில் அமெரிக்காவையும் மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.

3. அமெரிக்கா

3. அமெரிக்கா

நாளொன்றுக்கு 8,662,000 பேரல்கள்
அமெரிக்கா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிகிறது. ஆனால் எரிவாயுவை உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது. அமெரிக்காவின் எண்ணை உற்பத்தி 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதோடு சந்தையின் போக்கை மாற்றக்கூடிய நிலையில் உள்ளதாக நம்பப் படுகிறது.

2. சவுதி அரேபியா

2. சவுதி அரேபியா

நாளொன்றுக்கு 97,12,700 பேரல்கள்
சவுதி அரேபியாவின் முதல் எண்ணைக் கிணறு 1938 ஆம் ஆண்டுத் தம்மாமில் கண்டுபிடிக்கப்பட்டது. அது முதல் இந்த நாடு உலகின் மிகப்பெரும் எண்ணை மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதம் எண்ணெய்யை நம்பியுள்ளது.

1. ரஷ்யா

1. ரஷ்யா

நாளொன்றுக்கு 1,02,21,100 பேரல்கள்
ரஷ்யாவின் மாபெரும் எண்ணை உற்பத்தி உலகின் எண்ணை உற்பத்தியில் 12% சதவிகிதம் ஆகும். உலகின் எண்ணை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு என்பது மட்டுமல்லாமல் ரஷ்யா எரிவாயு உற்பத்தி மற்றும் இருப்பில் கூட முதலிடம் வகிக்கிறது.

இன்றைய பொருளாதார உலகில் கச்சா எண்ணெய் வளம் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும்.

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

மின்னஞ்சலை தட்டுங்க.. வர்த்தகச் செய்திகளைப் படியுங்க..

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Countries that Produce the Most Crude Oil in the World

Oil has been one of the most important commodities in the world, and the discovery of oil deposits have both skyrocketed the economies of many countries and drive new quests for more deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X