சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல்.. ஸ்தம்பித்து போன வணிகம்.. பல ஆயிரம் கோடி தேக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய பரபரப்பான நீர்வழிப் வர்த்தக பாதைகளில் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாயாகும்.

 

உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12% இந்த சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது என்றால், அது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் இந்த கால்வாயானது மத்திய தரைக்கடலை செங்கடலுடன் இணைக்கிறது.

இப்படிப்பட்ட பரப்பரப்பான ஒரு வர்த்தக போக்குவரத்து கப்பல்கள் செல்லும், சூயஸ் கால்வாயில் தான் டிராபிக் ஜாம். இந்த கால்வாயில் சுமார் 2,00,000 டன் எடையுள்ள ஒரு ராட்சத கப்பல் தரைதட்டியுள்ளது.

தரை தட்டிய எவர் கிவன்

தரை தட்டிய எவர் கிவன்

அதெல்லாம் சரி இது எந்த நாட்டு கப்பல்? எங்கேயிருந்து எங்கு சென்று கொண்டிருந்தது? எப்படி சிக்கியது? இதனால் என்ன பாதிப்பு, குறிப்பாக வர்த்தக ரீதியாக என்ன பாதிப்பு வாருங்கள் பார்க்கலாம். இந்த கப்பல் பனமாவில் பதிவுசெய்யப்பட்ட எவர்கிரீன் என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் (Ever Given) என்ற கப்பல் தான் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது. இந்த கப்பலின் நீளம் மட்டும் 400 மீட்டராகும். இதன் அகலம் 59 மீட்டராகும்.

 மனிதனால் உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய்

மனிதனால் உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய்

தற்போது உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் வழிப் போக்குவரத்து பாதையாக உள்ள இந்த சூயஸ் கால்வாய், 1869ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்வழிப் பாதையாகும். இந்த நீர்வழி பாதையானது உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக எளிமையான நீர்வழிப் பாதையாக இருந்து வருகிறது. குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கிய பாதையாக இருந்து வருகிறது.

உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு
 

உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு

குறிப்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் மிக இடையேயான குறுகிய கடல் வழி பாதையாக உள்ளது. ஆக இந்த நீர்வழிப்பாதையானது எப்போதும் மிகவும் பரப்பரப்பான நீர்வழிப் பாதையாகவே இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அரிதானவை தான். ஆனால் இதனால் உலகளாவிய வர்த்தகத்திற்கே பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கப்பலை முழுமையாக இந்த இடத்தில் இருந்து, அகற்ற இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்

பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்

இது போன்ற அரிதான சம்பவங்கள், எந்தவொரு தாமதமும் கொள்கலன் மற்றும் பெட்டிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏனெனில் உலகில் உள்ள அனைத்து கொள்கலன் கப்பல்களில் 30% சூயஸ் கால்வாய் வழியாக செல்கிறது. SCA தரவின் படி, 2020ம் ஆண்டில் ஏறத்தாழ 19,000 கப்பல்கள் (சராசரியாக ஒரு நாளைக்கு 51.5) 1.17 பில்லியன் டன்கள், இந்த பாதை வழியாக கடந்ததாக கூறுகின்றது.

பல கப்பல்கள் முடக்கம்

பல கப்பல்கள் முடக்கம்

இந்த எவர் கிவன் கப்பலுக்கும் வடக்கி செல்ல சுமார் 42 கப்பல்களும், தெற்கே 64 கப்பல்களும் முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் பல டேங்கர்களும் இந்த நீர்வழிப்பாதையில் முடங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் 185 கப்பல்கள் காத்துக் கொண்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்திகள் கூறியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகின்றது. இது தான் இப்படி எனில், இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவர் கிவன் பெரிய கப்பல்

எவர் கிவன் பெரிய கப்பல்

இதுவரை இந்த கால்வாயில் தரைதட்டிய கப்பல்களில் இதுவே மிகப்பெரியது என கூறப்படுகிறது. ஏனெனில் 2017ம் ஆண்டில் ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திர கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எனினும் அது சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. ஆனால் எவர் கிவன் கப்பலை மீட்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள்

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள்

இதற்கிடையில் இந்த பாதை மூடப்பட்டால் ஒவ்வொரு நாளும் சுமார் 9.6 பில்லியன் டாலர் வணிகம் பாதிக்கப்படலாம் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது இந்த டிராபிக் ஜாமினால் பல கமாடிட்டிகள், உலர் பொருட்கள், சிமெண்ட், எரிபொருள், கெமிக்கல்ஸ், பல சரக்கு கப்பல்கள், தண்ணீர் டேங்கர், கால் நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் என பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிகம் சூயஸ் கால்வாயில் முடங்கியுள்ளது. இது பல நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டத்தினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்கள் செல்ல செல்ல இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A traffic jam in the Suez Canal may impact global trade, companies losing multi crores

Suez Canal updates.. A traffic jam in the Suez Canal may impact global trade, companies losing multi crores
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X