அமெரிக்காவுக்கே இப்படி ஒரு நிலையா.. 2 முறை லோவர் சர்கியூட் ஆன சந்தைகள்.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவே தற்போது கொரோனாவால் தத்தளித்து வருகிறது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.

அதை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவின் பங்கு சந்தைகள் தொடர்ந்து, படு வீழ்ச்சி கண்டு வருகின்றன.

சொல்லப்போனால் திங்களன்று காலை சந்தை தொடக்கத்திலேயே S&P 500 index 8% வீழ்ச்சி கண்டு, ஆறு நாட்களில் மூன்றாவது முறையாக வால் ஸ்ட்ரீட்டின் மூன்று முக்கிய குறியீடுகளை தானாகவே 15 நிமிடங்கள் நிறுத்தத் தூண்டியது.

இரண்டாவது முறை வட்டி குறைப்பு

இரண்டாவது முறை வட்டி குறைப்பு

அமெரிக்காவின் மத்திய ஃபெடரல் வங்கியின் வட்டி குறைப்பு பதினைந்து நாட்களில் குறைக்கப்பட்ட, இரண்டாவது அவசரக் குறைப்பு முதலீட்டாளர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விநியோகச் சங்கிலிகளை முடங்கியுள்ள நிலையில், நிறுவனங்களின் நிதிகளைக் அது கசக்கிவிடுகிறது. இதன் எதிரொலி பங்கு சந்தைகளில் காணப்படுகிறது.

சீனாவிலும் வீழ்ச்சி

சீனாவிலும் வீழ்ச்சி

சீனாவின் சமீபத்திய பொருளாதார புள்ளிவிவரங்கள் திங்களன்று தொழில் சாலை தரவு மூன்று தசாப்தங்களில் அதன் கூர்மையான வேகத்தில் வீழ்ச்சியடைவதைக் காட்டுகிறது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தினை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த நிலையில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை உற்பத்தி சராசரி விகிதம் 2,250.46 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு(9.71%) வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தக் குறியீடுகள் எல்லாம் சரிவு
 

இந்தக் குறியீடுகள் எல்லாம் சரிவு

இதே S&P 500 index 8.14% வீழ்ச்சி கண்டு, 220.55 ஆக முடிவடைந்துள்ளது. இதே நாஸ்டாக் காம்போசைட் விகிதம் 6.12% வீழ்ச்சி கண்டு 7,392.73 ஆக முடிவடைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளதார நாட்டிலேயே பங்கு சந்தைகள் இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டு இருக்கும் போது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் வீழ்ச்சியடைவதும், லோவர் சர்கியூட் ஆவதும் சகஜமான விஷயம் தானே.

இரண்டு முறை லோவர் சர்கியூட்

இரண்டு முறை லோவர் சர்கியூட்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் லோவர் சர்கியூட் ஆன சந்தைகள், மீண்டும் 15 நிமிடங்களுக்கு பிறகு வர்த்தகம் தொடங்கிய பின்னர், இரண்டாவது முறையாக லோவர் சர்கியூட் ஆனது தான். இப்படி ஒரு முறை லோவர் சர்கியூர் ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறும் நிபுணர்கள், தற்போது உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் பங்கு சந்தைகள், உலகின் முதன்மை பொருளாதார நாட்டின் பங்கு சந்தையில் இப்படி ஒரு வீழ்ச்சி எனில், பொருளாதாரம் எந்தளவுக்கு வீழ்ச்சி கண்டு வருகிறது என்பதை நாம் இதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America’s Wall Street trading halted for 15 mins after opening bell

Wall Street’s S&P 500 falls 13% once trading resumes; it will trigger a level-2 circuit breaker and halt trading again for 15 minutes. Due to drastic weekend measures from the Federal Reserve to stave off a global recession.
Story first published: Monday, March 16, 2020, 21:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X