மகளுக்காக 99% பேஸ்புக் பங்குகள் நன்கொடை.. மார்க் ஜூக்கர்பெர்கின் அதிரடி முடிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: சமுக வலைத்தளங்களின் கிங்மேக்கரான பேஸ்புக் நிறுவனத்தின், நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் தம்பதியினருக்கு 2 வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு மேக்ஸ் என்னும் பெயரும் சூட்டப்பட்டது.

இந்நிலையில் மார்க்-சான் தம்பதியினரின் குழந்தைக்காகத் தொண்டு நிறுவனத்தைத் துவங்கி அதில், பேஸ்புக் நிறுவனத்தில் தாங்கள் வைத்துள்ள பங்குகளில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் மார்க்.

இன்றைய நிலையில் இதன் மொத்த மதிப்பு 45 பில்லியன் டாலர்.

பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்

பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்

உலகப் பில்லியனர்கள் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரின் பாணியில் தற்போது பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களும் இணைந்துள்ளார்.

உலக மக்களுக்குத் தொண்டு செய்யும் வகையில் இவர்கள் அனைவரும் தொண்டு நிறுவனங்களைத் துவங்கி சுகாதாரம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் தாங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நன்கொடை அளித்து வருகின்றனர்.

 

மகளுக்கு ஒரு கடிதம்..

மகளுக்கு ஒரு கடிதம்..

இதுகுறித்துப் பேஸ்புக் பக்கத்தில் மார்க், சான் மற்றும் அவர்களது குழந்தை மேக்ஸ் ஆகியோருடன் இணைந்துள்ள புகைப்படத்தில் தங்களது புதிய தொண்டு நிறுவனம், குறிக்கோள் மற்றும் பங்குகள் நன்கொடை குறித்த செய்திகளை வெளியிட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்.

குறிக்கோள்

குறிக்கோள்

புதிதாகத் துவங்கப்பட்டுள்ள சான் ஜூக்கர்பெர்க் இனிஷியேடிவ் தொண்டு நிறுவனத்தின் கீழ் சுகாதாரம், கல்வி, இண்டர்நெட் பயன்பாடு குறித்த பிரச்சனைகளைக் களைந்து மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும், சமநிலையும் உருவாக்கும் வகையில் செயல்படுவோம் எனத் தனது பேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்தார் மார்க் ஜூக்கர்பெர்க்.

சான் ஜூக்கர்பெர்க் இனிஷியேடிவ்

சான் ஜூக்கர்பெர்க் இனிஷியேடிவ்

45 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்களது 99 சதவீத பங்குகளை நன்கொடை அளித்துள்ள இந்த இயக்கத்திற்கு மார்க் மற்றும் சான் அவர்கள் மட்டுமே நிர்வாகிகள். இதில் வேறு யாரையும் சேர்க்க தற்போதைக்கு விருப்பம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 பில்லியன் பங்குகள்

1 பில்லியன் பங்குகள்

இருவரின் திட்டத்தின் படி வருடத்திற்கு 1 பில்லியன் பங்குகளை அடுத்த 3 வருடங்களுக்கு இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாகப் பரிமாற்றம் செய்யப்படும் என மார்க் தெரிவித்துள்ளார்.

1.6 பில்லியன் டாலர்

1.6 பில்லியன் டாலர்

மேலும் நடப்பு நிதியாண்டில் மட்டும் சான் மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவிற்குப் பல நலத் திட்டங்களுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

இதில் பொதுப்பள்ளிக்கூடம், சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனைக்கு மேம்பட்ட வையர்லெஸ் இண்டர்நெட் வசதிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

 

இரு மாத விடுப்பு

இரு மாத விடுப்பு

மேலும் 2 வாரத்திற்கு முன் பிறந்த தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள மார்க் ஜூக்கர்பெர்க் 2 மாத விடுப்பு எடுத்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook's Zuckerberg to give 99% of shares to charity

Chief executive officer Mark Zuckerberg and his wife said on Tuesday they will give away 99 per cent of their Facebook shares, currently worth about $45 billion, to a new charity in a letter addressed to their daughter, Max, who was born last week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X