இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான்.. கவனமாக செயல்படுங்கள்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்: ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் (2020) வெறும் 7 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளது.

 

இதே நடப்பு நிதியாண்டில் 6.1 சதவிகிதமாக மட்டும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வெகுவாக குறைந்தாலும், 2020ம் நிதியாண்டில் இது நிச்சயம் சற்று மேம்படும் என்றும், இதற்கு மத்திய அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பு சலுகை மற்றும் மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை கை கொடுக்கலாம் என்றும் இந்த நிதியம் கணித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு சப்போர்ட்

பொருளாதார வளர்ச்சிக்கு சப்போர்ட்

மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வரி விகித குறைப்பு என தீவிர நடவடிக்கைகள் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்றும், நலிவடைந்துள்ள பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக இருக்கும். அதிலும் சமீபத்திய வரி குறைப்புகள், நிதித்துறையில் நீடித்து வரும் பலவீனங்களை பூர்த்தி செய்வதில் அரசின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி துறைகளை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துணை இயக்குனர் ஜெனாதன் ஓஸ்ட்ரி கூறியுள்ளார்.

மந்த நிலைக்கு காரணம்

மந்த நிலைக்கு காரணம்

கடந்த காலாண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நிலவி வரும் மந்த நிலை தான் காரணம் என்றும் கூறி வந்த ஐ.எம்.எஃப், தற்போது கார்ப்பரேட் மற்றும் ஒழுங்கு முறை சுற்றுசூழல் நிச்சயமற்ற தன்மைகள், வங்கி சாரா நிதித்துறையில் உள்ள அழுத்தங்கள், கிராமப்புற துறைகளில் உள்ள அழுத்தங்கள் என பல காரணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கவனம் செலுத்த வேண்டும்
 

கவனம் செலுத்த வேண்டும்

அதிலும் தெற்காசியாவின் வளர்ச்சியை தக்கவைக்க, சில சிக்கல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது, இது மிக அவசியம் என்றும் ஓஸ்ட்ரி கூறியுள்ளார். மேலும் இது சரக்கு வர்த்தகம் மட்டும் அல்ல, மிக முக்கியமான சேவை வர்த்தகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், இது இந்தியாவிற்கும் பிற தெற்காசியாவிற்கும் கணிசமான வளர்ச்சியை அளிக்கும் என்றும் ஓஸ்ட்ரி கூறியுள்ளார்.

முதலீடுகளை அதிகரிக்க வழி

முதலீடுகளை அதிகரிக்க வழி

வளர்ச்சியை ஊக்குவிக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தூண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், ஏனெனில் இந்தியாவில் மிகப்பெரிய மக்கள் தொகை உள்ளது. இதன் மூலம் 150 மில்லியன் மக்கள் தொழிலாளர் தொகுப்பில் நுழைவார்கள் என்றும் ஓஸ்ட்ரி சுட்டிக் காட்டியுள்ளார். இது தவிர வரவிருக்கும் காலத்தில் சேவை துறையின் வளர்ச்சியினை முக்கிய ஆதாரமாக நாங்கள் கருதுகிறோம், இதற்கு அடுத்தாற்போல் தான் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி, மேற்கூறிய சேவை துறையின் வளர்ச்சிக்கு உதாரணமே இந்த அறிக்கை. உலகத் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்குகளிப்பு, ஒரு தசாப்தத்தில் கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், சேவைத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். இது கடந்த 2000ம் ஆண்டில் 6.3 சதவிகிதமாக இருந்தது என்றும், இது 2010ல் 17.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஓஸ்ட்ரி என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IMF analysed Indian economic growth may increased to 7% next fiscal

IMF analysed Indian economic growth may increased to 7% next fiscal, this year its estimated only 6.1%
Story first published: Wednesday, October 23, 2019, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X