உலக நாடுகள் ரஷ்யா மீது அடுத்தடுத்துத் தடை விதித்த நிலையில் பல வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த நிலையிலும் இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் இந்தியா ஆர்டர் செய்துள்ள S400 வகை ஆயுதம் விரைவில் டெலிவரி செய்யப்படும் என ரஷ்யா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா - இந்தியா மத்தியிலான வர்த்தகத்திற்கான பணப் பரிமாற்றத்தை சீர்படுத்தும் விதமாக முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்கள் கொள்கையில் ஒரு போதும் சமரசம் இல்லை.. கொள்கைகளை பின்பற்றியே ஆகணும்..டெஸ்லாவுக்கு சாட்டையடி!

ரஷ்யா இந்தியா
ரஷ்யா இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கக் கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் நிலக்கரியிலும் தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

ரூபாய் வாயிலாகப் பேமெண்ட்
இதேபோல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க டாலர் அல்லாமல் ரூபாய் வாயிலாகவே பேமெண்ட் செலுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இதைச் செயல்படுத்தும் விதமாக முக்கியப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

3 வங்கிகள்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி ஆகியவை உலக நாடுகளின் தடையில் சிக்காத ரஷ்ய வங்கிகளுடன் இணைந்து இருதரப்புப் பேமெண்ட் சேவையை ஏற்கும் கட்டமைப்பை உருவாக்க உள்ளது.

வங்கி கணக்கு
இந்தக் கட்டமைப்பில் இரு நாட்டின் வங்கிகளும் மற்ற நாட்டு வங்கிகளில் வங்கி கணக்கு திறக்கப்பட உள்ளது, இது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து டெல்லியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் இருதரப்பும் முடிவு செய்துள்ளது.

பணப் பரிமாற்றங்கள்
இதனால் விரைவில் இந்தியா ரஷ்யா மத்தியிலான பணப் பரிமாற்றங்கள் எவ்விதமான தங்கு தடையுமின்றி நடக்கும். குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்திய ரூபாய் வாயிலான பேமெண்ட் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த காரணத்திற்காகவும் இந்திய வங்கிகள் ரஷ்யா உடனான பண பரிமாற்ற பணிகளை மேற்கொள்ள வேகப்படுத்தி இருக்கலாம்.

ஆர்பிஐ அறிக்கை
இந்த நிலையில் இரு நாடுகளும் விரைவில் இதற்கான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஆர்பிஐ விரைவில் வங்கிகளுக்கு ரஷ்ய வங்கிகள் உடனான பேமெண்ட் சேவை குறித்து அறிக்கை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

டெல்லி கூட்டம்
கடந்த வாரம் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் இருந்து கனரா வங்கி, யூகோ வங்கி, எஸ்பிஐ, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இண்டஸ்இந்த் வங்கிகளும், ரஷ்யா தரப்பில் பீட்டர்ஸ்பெர்க் சோஷியல் கமர்சியல் பேங்க், Zenit வங்கி, டாட்சோட்ஸ் வங்கி, சென்ட்ரோகிரெடிட் வங்கி, பேங்க் சோயூஸ் மற்றும் எம்டிசி வங்கி ஆகியவை கலந்துகொண்டது.