மார்ச் 25 வரை அலுவலகத்திற்கு வர வேண்டாம்..வீட்டில் இருந்தே வேலை பாருங்க.. மைக்ரோசாப்ட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பல இடங்களில் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பாதுகாப்பினை காரணம் காட்டி வீட்டில் இருந்தே பணி புரிய அறிவுறுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில், சியாட்டலில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஊழியர்களை மார்ச் 25ம் தேதி வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்து உள்ளது.

இது நோய்வாய்பட்டவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் பொழுது, மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான நிறுவனங்கள் 113 பில்லியன் டாலர் வருவாய் இழக்கலாம்! ஏன் தெரியுமா?விமான நிறுவனங்கள் 113 பில்லியன் டாலர் வருவாய் இழக்கலாம்! ஏன் தெரியுமா?

வீட்டில் இருந்து பணி புரிய நடவடிக்கை

வீட்டில் இருந்து பணி புரிய நடவடிக்கை

சியாட்டலில் உள்ள இந்த பிராந்தியத்தில் கிட்டதட்ட 54,000 பேர் உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக இவர்கள் அனைவரையும் நாங்கள் மார்ச் 25 வரை வீட்டிலிருந்து பணிபுரிய பரிந்துரைக்கிறோம். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உங்கள் பணியிடத்தையும் பாதுகாப்பானதாக மாற்றும் என்றும் மைக்ரோசாப்ட்டின் நிர்வாக துணைத் தலைவர் கர்ட் டெல்பீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பாதிப்பு

அமெரிக்காவில் பாதிப்பு

மேலும் தற்போது உலகளவில் 94,000க்கும் மேற்பட்ட கோவிட் 19 வழக்குகள் உள்ளன. அமெரிக்காவில் குறிப்பாக 128 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வாஷிங்டன்னில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே சியாட்டலில் உள்ள அமேசான் தனது தலைமையகத்தில் ஒரு ஊழியர் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Indeedம் அப்படி தான்

Indeedம் அப்படி தான்

உங்கள் பணி சூழல் நல்ல விதத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் பணி சூழல் சுத்தமாக இருப்பதற்கும், இருப்பிடங்களை சுத்தம் செய்வதற்கும் CDC-யின் வழிகாட்டுதல்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று டெல்பீன் கூறியுள்ளார். இதே இணைய நிறுவனமான Indeed, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தனது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டு கொண்டுள்ளது.

வணிக பயணங்கள் அனைத்தும் நிறுத்தம்

வணிக பயணங்கள் அனைத்தும் நிறுத்தம்

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை கோவிட் -19 தொடர்பான எந்த வழக்குகள் எதுவும் உறுதிப்படவில்லை என்றாலும், நாங்கள் எச்சரிக்கையுடன் வழி நடத்த முடிவு செய்துள்ளோம். இதனால் நாங்கள் அனைத்து வணிக பயணங்களையும் நிறுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கை சிலருக்கு சிரமமாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தாலும், உங்களை ஆதரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளது. .

பல நிறுவனங்கள் அப்படி தான்

பல நிறுவனங்கள் அப்படி தான்

இந்த நிலையில் மைக்ரோசாப்ட், ட்விட்டர், இண்டீடு உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய பரிந்துரைத்து வருகின்றன. மேலும் பல உலக அளவிலான மாநாடுகளையும், கூட்டங்களையும் ரத்து செய்துள்ளன. இதே போல கூகுள் நிறுவனம் கூட முக்கிய கூட்டங்களை ரத்து செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft allowed employees to work from home amid corona virus till March 25

microsoft and some tech companies said employees to work from home amid corona virus fear.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X