ஆசிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்: ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு விற்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலையை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் குறைத்துள்ளதை தொடர்ந்து ஆசியா சந்தையில் எண்ணெயின் விலை கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது, என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

அமெரிக்க நிறுவனமான வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மீடியேட் (WTI), ஜனவரி மாத விநியோகத்தில், காலைக்கு பிறகான வணிகத்தில், $66.50 என்ற ஒரு பீப்பாயின் விலையில் 31 சென்ட்ஸ்களை குறைத்தது. அதே போல் ப்ரெண்ட் க்ரூட் என்ற நிறுவனம், ஜனவரி மாத விநியோகத்தில், $69.26 என்ற ஒரு பீப்பாயின் விலையில் 38 சென்ட்ஸ்களை குறைத்தது.

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவு!!

"ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு விற்கும் எண்ணெயின் விலையை சவுதி அரேபியா தற்போது தான் குறைத்துள்ளது. இது இன்றைய சந்தை மற்றும் அடுத்த வார ஆரம்ப கட்ட சந்தையின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என சிங்கப்பூரில் உள்ள பிலிப் ஃப்யூச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வாளரான டேனியல் அங் கூறியுள்ளார்.

ஆசியாவிற்கு அதிகாரப்பூர்வமாக விற்கப்படும் அராப் லைட் க்ரேட் எண்ணெயின் விலையை, ஜனவரி மாதம் முதல் பீப்பாய் ஒன்றுக்கு $1.90 குறைக்கப்படும் என அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவுதி ஆரம்கோ, வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

இதே போல் அமெரிக்காவிற்கு கொடுக்கப்படும் அராப் லைட் க்ரேட் எண்ணெயின் விலையை 70 சென்ட்ஸ் குறைத்துள்ளது.

ஆர்கனைசேஷன் ஆஃப் தி பெட்ரொலியம் எக்ஸ்போர்ட்டிங் கன்ட்ரீஸ் (OPES) என்ற அமைப்பின் மிகவும் பெரிய மற்றும் செல்வாக்கு வாய்ந்த உறுப்பினராக சவுதி அரேபியா விளங்குகிறது. உலகளாவிய அளவில் அளவுக்கு அதிகமான விநியோகத்தை அளிக்க முடியும் ஆற்றல் இருக்கும் போதிலும், தன்னுடைய வெளியீட்டின் அளவுகளை கட்டுப்படுத்த சென்ற மாதத்தில் முடிவெடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil down after Saudi Arabia slashes crude price

Oil fell in Asia today after major producer Saudi Arabia slashed the price of the crude that it sells to Asia and the United States, analysts said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X