இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா அளிப்பதில் தடை.. அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூர் சாட்டை அடி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய ஐடி நிறுவனங்களும், ஊழியர்களுக்கும் அமெரிக்காவின் எச்1பி விசா கட்டுப்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என யோசித்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், அண்டை நாடான சிங்கப்பூர் இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா அளிப்பதில் மிகப்பெரிய அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிங்கப்பூருக்குப் புதிதாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது மட்டுமல்லாமல், தற்போது அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களும் தாய்நாட்டிற்குத் திரும்பி அனுப்பப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

தொய்வு

அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூர்-உம், ஐடி ஊழியர்களுக்கான விசா அளிப்பதில் எப்போதும் இல்லாத வகையில் தாமதம் செய்து வருகிறது.

மேலும் சிங்கப்பூர் அரசு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA) வர்த்தக ஒப்பந்தத்தில் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் துவங்கியுள்ளது.

 

இந்திய நிறுவனங்கள்

இந்த ஒப்பந்தத்தில் ஆய்வைத் துவங்கும் முன்னரே சிங்கப்பூர் அரசு இந்திய ஐடி நிறுவனங்கள் உள்ளூர் திறமைகளை அதிகளவில் பயன்படுத்த கோரியுள்ளது.

இதனால் சிங்கப்பூரில் இருக்கும் பல இந்திய நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் இருந்து அந்நாட்டில் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை இந்தியாவிற்கே திரும்ப அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

 

வரிசை கட்டி வரும் ஐடி நிறுவனங்கள்

ஊழியர்களைத் தாய்நாட்டிற்கு அனுப்ப எச்சிஎல், டிசிஎஸ் நிறுவனங்கள் தங்களது முதல் கட்ட பணிகளைத் துவங்கியுள்ள நிலையில், இப்பட்டியலில் அடுத்தச் சில நாட்களில் இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் மற்றும் என்&டி இன்போடெக் ஆகியவையும் இதில் இணைய உள்ளது.

பல வருடங்களாக..

சிங்கப்பூரில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் இந்தியர்களைப் பணியில் அமர்த்துவது பல வருடங்களாகத் தொடர்ந்து வந்தாலும், 2016ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் சிங்கப்பூர் அரசு விசா அளிப்பதில் அதிகளவில் குறைத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து இந்திய நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் அரசு கடிதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முக்கியத் துறைகள்

சிங்கப்பூர் அரசின் இத்தகைய செயலின் காரணமாக ஐடி மற்றும் வங்கித் துறை அதிகளவில் பாதிக்கப்படும்.

மேலும் இவை அனைத்திற்கும் மூலதன தேவையின் வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பதே முக்கியக் காரணமாக விளங்குவதால், இந்திய அரசு இறக்குமதி செய்யப்படும் சரக்கு மற்றும் சேவையைக் குறைத்து இந்திய சந்தையில் இத்துறையின் பாதிப்பதை குறைக்க வேண்டும்.

இதற்கான பணிகளையும் இந்திய அரசு தற்போது துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ENT சோதனை

சிங்கப்பூர் அரசு தற்போசு ENT சோதனையை மேற்கொண்டுள்ளது. இது இந்திய ஊழியர்கள் இல்லையெனில் தன்நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதே இச்சோதனையின் முக்கியக் கரு.

Economic needs test என்பதே இதன் விரிவாக்கம்.

 

இந்திய அதிகாரிகள்

ENT சோதனைக்கும் CECA வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் இந்தச் சோதனை மேற்கொண்டு உள்ளதால் தற்போது இதுகுறித்து முழுமையான விளக்கத்தை அளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சேவைத் துறை

அமெரிக்கா, பிரிட்டன் வரிசையில் தற்போது சிங்கப்பூர் இணைந்துள்ள காரணத்தால், இந்தியாவில் சேவைத்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கும், இந்தப் பாதிப்பு விஸ்பரூபம் எடுக்கும் முன்னர் இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Singapore blocks visas for Indian IT professionals

Singapore blocks visas for Indian IT professionals
Story first published: Monday, April 3, 2017, 11:31 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns